Advertisment

Quixplained: பிரதமர் மோடி பயணிக்கும் 'ஏர் இந்தியா ஒன்'விமானம்... சிறப்பம்சம் என்ன?

கடந்த 27 ஆண்டுகளாக, பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747-400  என்ற சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

author-image
WebDesk
New Update
Quixplained: பிரதமர் மோடி பயணிக்கும் 'ஏர் இந்தியா ஒன்'விமானம்... சிறப்பம்சம் என்ன?

நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட  2 போயிங் 777 புதிய ரக விமானங்களுக்கு மத்திய அரசு முன்னதாக ஒப்புதல் அளித்தது. தற்போது, அதில் முதல் விமானத்தை  ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.

Advertisment

கடந்த 27 ஆண்டுகளாக, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747-400  என்ற சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இது, ஏர் இந்தியா 001 அல்லது ஏர் இந்தியா ஒன் எனவும் அழைக்கப்படுகிறது.

எனவே, ஏர் இந்தியா ஒன் விமானத்தின் சிறப்பம்சங்கள் என்ன? பாருங்கள்:

 

publive-image இரண்டு விமானங்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 8,400 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது போயிங் 777 ரக விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

 

 

publive-image ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முறை திறன்களை இந்த விமானம் கொண்டுள்ளது

 

 

publive-image அமெரிக்கா அதிபர், துணை அதிபரின் வான் வழி பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஏர் ஃபோர்ஸ் விமானங்களுக்கு இணையாக இந்த விமானங்கள் கருதப்படுகின்றன.

 

 

publive-image பார்வையாளர்கள் அறை, படுக்கை அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, கூட்ட அரங்குகள், படுக்கை அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

 

publive-image ரேடார் எச்சரிக்கைப் பெறுதல், குறியாக்கம் செய்யப்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வசதிகள் ஆகியவற்றையும் இந்த ரக விமானங்கள் கொண்டிருக்கும்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi Modi President Ram Nath Kovind Boeing 777
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment