Advertisment

1918ல் இன்ஃப்ளூயன்ஸா தொற்று மரணங்கள்; நர்மதா ஆற்றில் கொட்டப்பட்ட சடலங்கள்

When corpses of influenza victims were dumped in Narmada river in 1918: தற்போது கங்கையில் மிதக்கும் உடல்கள், 1918ல் நர்மதா ஆற்றில் சடலங்கள் மிதந்ததைப் போன்று உள்ளது

author-image
WebDesk
New Update
1918ல் இன்ஃப்ளூயன்ஸா தொற்று மரணங்கள்; நர்மதா ஆற்றில் கொட்டப்பட்ட சடலங்கள்

கங்கை நதியில் மிதக்கும் உடல்கள் மற்றும் அதன் கரையில் ஒதுங்குவது குறித்து பீகாரில் இருந்து செய்திகள் வந்துள்ளன. இந்த சடலங்கள் கோவிட் நோயாளிகளுக்கு சொந்தமானது என்றும் அவற்றின் உறவினர்கள், இறந்தபோன தங்கள் உறவினர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய இடம் கிடைக்கததால், சடலங்களை ஆற்றில் எறிந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Advertisment

இதேபோலான சம்பவம், பொதுவாக ஸ்பானிஷ் காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் தாக்கியபோது நடந்தது. தற்போதைய மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியான நர்மதா ஆற்றில், இதேபோல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சடலங்கள் மிதந்தது.

தேசிய ஆவணக்காப்பகத்தில் இருந்து பெறப்பட்ட 1918 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ அறிக்கை அப்போது அங்கே, என்ன நடந்தது என்பதற்கான கூடுதல் வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது.

1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் நர்மதா ஆற்றில் கொட்டப்படுவது பற்றிய உண்மையை குறிப்பிடும் அறிக்கை எது?

தேசிய ஆவணக்காப்பகங்களில் ‘இந்தியாவில் 1918ல் இன்ஃப்ளூயன்சா தொற்றுநோய்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை உள்ளது. 1919 ஜூன் மாதம் வெளிவந்த, சுதேச அரசுகளைக் கையாண்ட, இந்திய அரசின் வெளியுறவு மற்றும் அரசியல் துறையின் மற்றொரு அறிக்கையும் இந்த அறிக்கையில் உள்ளது. இந்த அறிக்கையில் 1918 நவம்பர் 12 அன்று 5 வது (மோவ்) பிரிவு கட்டளையிடும் பொது அதிகாரி அனுப்பிய விரிவான குறிப்பு ஒன்று உள்ளது. அதில், " இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதித்து இறந்தவர்களின் சடலங்கள் நர்பாடா (இப்போது நர்மதா) நதியை மாசுபடுத்துவது குறித்த தென் மாநிலங்களில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரின் அறிக்கையின் நகலை உங்கள் தகவலுக்காக,  நான் மரியாதை நிமித்தமாக அனுப்புகிறேன்." என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பு, தெற்கு பிரிவு இராணுவத்தின் நிர்வாக பொறுப்பு மேஜர் ஜெனரல்க்கு அனுப்பப்பட்டது. அவர் அந்த குறிப்பை சிம்லாவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் உள்ள பகுதி மாஸ்டர் ஜெனரலுக்கு அனுப்பினார். அதில் "இந்திய அரசாங்கத்தின் கவனத்தை தற்போதைய விவகாரங்களில் ஈர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது." என்று குறிப்பு அனுப்பினார்.

நர்மதா நதி நிலை குறித்த உண்மையான அறிக்கை என்ன?

கல்காட் (மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம்) என்ற இடத்தில் உள்ள நர்மதா ஆற்றின் அவல நிலைமைகள் குறித்து ஆபத்தான தகவல்கள் வந்துள்ளதாகக் கூறி அறிக்கை தொடங்குகிறது.

"கடைசியாக கல்காட் தரம்புரிக்கு இடையிலான நீரோடையில் ஏராளமான சடலங்கள் சிதைந்து வருவதால், படகுகள் இயங்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது மிகைப்படுத்தல் இல்லை. இங்கு ஏராளமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன, அதே நேரத்தில் முழு குடும்பங்களும், தகனங்களில் கலந்துகொள்பவர்களும், இந்த காய்ச்சல் தொற்றுநோயால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே தகனம் செய்தல் சாத்தியமற்றதாகிவிட்டது, ”என்று அறிக்கை கூறுகிறது.

சடலங்களை ஆற்றில் கொட்டுவதற்கு என்ன காரணங்கள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன?

அரசியல் பிரமுகர் அறிக்கையில், தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட நிலைமை சாதாரணமானதல்ல என்றும், மரம் அல்லது மாட்டு சாணம் கிடைக்காததால், உடல்கள் வெறுமனே நர்மதாவில் வீசப்பட்டன என்றும் கூறுகிறார்.

“நீரோடை குறைவாக உள்ளது, இவை கல்காட்டில் கரையோரங்களில் சேகரிக்கப்பட்டு கரையிலிருந்து கணிசமான தூரத்திற்கு காற்று துர்நாற்றம் வீசும் வரை மாசுபட்டுள்ளது. சடலங்கள் எப்போதுமே தங்கள் படகுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், துர்நாற்றம் கடக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகவும் படகு வீரர்கள் சொன்னார்கள், ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த சடலங்களை ஆற்றில் இருந்து அகற்ற என்ன செய்யப்பட்டது?

சடலங்களின் குவியல்கள் நீரோடைக்கு கீழே செல்லுமாறு ஒரு "எளிய ஆனால் ஆரோக்கியம் இல்லாத செயல்முறையால்" அகற்றப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நான் தனிப்பட்ட முறையில் ஓடையில் ஒரு சடலத்தை மிதந்து வருவதைக் கண்டேன். மேலும், வெகு தொலைவிற்கு சாலையில் வண்டிகள், அணிவகுத்து வருவதுபோல் நிறைய சடலங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆற்றில் எட்டு சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. காகங்கள் அவை மீது அமர்ந்திருந்தன, அவை அனைத்தும் மிகவும் சிதைந்து இருந்தன.

இந்த சடலங்கள் எங்கிருந்து வருகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

உயரமான பகுதியான மகேஷவரில் இருந்து கீழே மிதந்து வருகிறது என அரசியல் பிரமுகர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எல்லா இடங்களிலும் இதே போன்ற சிரமங்கள் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. எரிப்பதற்காக மாட்டு சாண வறட்டிகள் மற்றும் மரங்களை சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று திவான் உத்தரவிட்டார். ஆனால் எந்தவொரு வண்டிகளையும் பெறுவது நடைமுறையில் சாத்தியமற்றது, அநேகமாக உத்தரவுகளை திறம்பட செயல்படுத்த முடியாது. நான் அவர்களுக்குத் தெரிவிக்கும் வரை விவகாரங்களின் நிலை குறித்த எந்த அறிக்கையும் தர்பாரை அடையவில்லை என்பதையும் நான் சேர்க்கலாம். உள்ளூர் அதிகாரிகள் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கும், சாதாரண கட்டுப்பாட்டு முறைகளுக்கு அப்பால் விஷயங்கள் கடந்து செல்லும் போது அவர்களை வேறுபடுத்துகின்ற ஆர்வமுள்ள அக்கறையின்மைக்கும் இது ஒரு காரணம் ”என்று அறிக்கை கூறுகிறது.

பிராந்தியத்தில் தொற்றுநோயின் தீவிரம் குறித்து அறிக்கை என்ன கூறுகிறது?

"மருந்தக மருத்துவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் மருத்துவப் பொருட்களும் தீர்ந்துவிட்டன. குஜ்ரி மற்றும் ககார்தாவில், இறப்பு ஒரு நாளைக்கு இரண்டு ஆகும், தம்னோட் மற்றும் கல்காட்டில் ஒரே மாதிரியாக இருக்கிறது, ஆனால் சில கிராமங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தார் நகரில் 4,000 க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், 900 பேர் தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் திவான் எனக்குத் தெரிவித்தார், இங்குள்ள மருத்துவ வசதிகளைக் கொண்டு இந்த நோயால் ஏற்பட்ட நிலைமையை சரிசெய்ய முடியாது ”என்று அந்த அறிக்கையில் அரசியல் பிரமுகர் கூறுகிறார்.

தர்பாரும் பாதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் தற்போதைய நிலைக்கு காரணமான இத்தகைய பரவலான தொற்றுநோயை சமாளிக்க தர்பாரால் இயலாது என்று அவர் மேலும் கூறுகிறார்.

Corona Influenza Corona Dead
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment