Advertisment

கோவிட் 19 தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்ள வேண்டும்?

Coronavirus vaccine: கொரோனா தடுப்பூசி முதல் அல்லது இரண்டாவது டோஸுக்கு இடையில் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? காத்திருக்கும் போது கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அது எவ்வாறு மாறுகிறது?

author-image
WebDesk
New Update
When to take your vaccine shots, Covid-19, covaccine, covishield, கொரோனா தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ், கோவேக்ஸின், கோவிஷீல்டு, கோவிட் 19, இந்தியா, coronavirus, WHO, india, explained

கோவிட் -19 தடுப்பூசிகள் அளவாக வழங்கப்பட்டதால் அது தடுப்பூசி போடுவதை மெதுவாக நடைமுறைப்படுத்துவதற்கு இட்டுச் சென்றது. மேலும், நாடு முழுவதும் பலர் ஒரு இடத்தைப் பதிவு செய்ய முடியவில்லை. முதல் அல்லது இரண்டாவது டோஸுக்கு நீங்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும். காத்திருக்கும் போது நீங்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டால் அது எவ்வாறு மாறுகிறது?

Advertisment

இந்தியாவில் பின்பற்றப்படும் தடுப்பூசி விதிமுறை என்ன?

கோவிஷீல்ட் (சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி) அல்லது கோவாக்சின் (பாரத் பயோடெக் லிமிடெட் தயாரித்த) ஆகியவற்றுடன் 17.7 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவர்களில் 3.9 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.

இந்திய தலைம மருந்துக் கட்டுப்பாட்டு (டி.ஜி.சி.ஐ) அமைப்பு வழங்கிய ஆரம்ப அனுமதியின்படி, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போட்டபின், 4-6 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும். கோவேக்ஸின் தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு, 28 நாட்களுக்குப் பிறகு கோவேக்ஸின் 2வது டோஸ் போடப்பட வேண்டும். இந்த இடைவெளி பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 4-8 வாரங்களுக்கும், கோவாக்சினுக்கு 4-6 வாரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், கோவிஷீல்ட் இரண்டாவது ஊசியை முதல் தடுப்பூசி போட்டபின், 6-8 வாரங்களுக்குப் பிறகு எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி போடவில்லை என்றால், ஒருவர் தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தால், அவர் எப்போது தடுப்பூசி போட வேண்டும்?

ஒருவர் கோவிட்-19க்கு தடுப்பூசி போடவில்லை என்றால், அவருக்கு பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருக்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) பரிந்துரைக்கிறது.

நோய்த்தொற்று ஏற்பட்டதும் நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்களுக்கு நீடிக்கும். அதனால், தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவர் 6-8 வாரங்கள் காத்திருப்பது நல்லது என்று இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் வினிதா பால் கூறினார். முன்னணி தடுப்பூசி விஞ்ஞானி டாக்டர் ககன்தீப் காங் கூறுகையில், SARS-CoV-2 வைரஸால் ஏற்பட்ட இயற்கையான தொற்றுநோயைத் தொடர்ந்து 80% பாதுகாப்பு இருப்பதாக இங்கிலாந்தின் தரவு காட்டுகிறது. அதனால், 6 மாதங்கள் வரை காத்திருப்பது நல்லது என்று அவர் கூறினார். இது தரவுகளை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும், தொற்றுநோய் ஏற்பட்தற்குப் பிறகு 6 மாதங்களுக்கு தடுப்பூசி போடுவது தாமதமானது. ஏனெனில், அதுவரை இயற்கையான ஆன்டிபாடிகள் உடலில் தொடர்ந்து இருக்கும்.

ஒருவர் முதல் டோஸ் எடுத்த பிறகு தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அது இரண்டாவது டோஸ்க்கான கால அட்டவணையை எப்படி பாதிக்கிறது?

கொரோனா வைரஸ் பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 8 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கொடுக்கப்படலாம் என்று கர்நாடகாவின் SARS-CoV2 இன் மரபணு உறுதிப்படுத்தலுக்கான நோடல் அதிகாரி டாக்டர் வி ரவி மற்றும் தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (நியூரோவைராலஜி ஓய்வு பெற்ற பேராசிரியர்) நிம்ஹான்ஸ்) என்று குறிப்பிட்டுள்ளார். உடல் நோய்த்தொற்றுக்குப் பிறகு ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது. மேலும், இது ஒரு தடுப்பூசி பெறுவதற்கு சமமானது. இருப்பினும், இரண்டாவது டோஸ் எடுப்பதற்கு முன் குறைந்தது எட்டு வாரங்கள் காத்திருப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒருவருக்கு இரண்டு டோஸ்களுக்கு இடையில் தொற்றுநோய் ஏற்பட்டால், பல பேருக்கு நோய் லேசாக அல்லது மிதமானதாக இருக்கக்கூடும். அது நோய்த்தொற்று எப்போது ஏற்பட்டது என்பதைப் பொறுத்தது. தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற 1 முதல் 3 வாரங்களுக்குள் தொற்று ஏற்பட்டால் தடுப்பூசி விளைவைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தொற்றுநோய் அதன் போக்கைத் தொடரும். ஆனால், முதல் தடுப்பூசி டோஸ் போட்டுக்கொண்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த நபர் நோயால் லேசாக பாதிக்கப்படுவார்.

விஞ்ஞானிகள் இன்னும் இயற்கையாக தொற்றுநொயால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். சி.டி.சி படி, தடுப்பூசிக்குப் பிறகு உடல் பாதுகாப்பை உருவாக்க பொதுவாக இரண்டு வாரங்கள் ஆகும். எனவே, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒருவர் தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் முதல் டோஸ் எடுத்துக்கொண்டு நோய்த்தொற்று இல்லாமல் இருக்கிறார். ஆனால், இரண்டாவது டோஸ் கிடைக்காததால் எடுக்க முடியவில்லை என்றால் அவர் கவலைப்பட வேண்டுமா?

இரண்டாவது டோஸ் எடுக்க தாமதமாகிவிட்டால் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் சஷாங்க் ஜோஷி கூறினார். கோவேக்ஸினுக்கு, முதல் டோஸில் இருந்து 45 நாட்கள் வரை இடைவெளியை நீட்டிக்க முடியும். கோவிஷீல்ட்டைப் பொறுத்தவரை, முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இவை முதல் தலைமுறை தடுப்பூசிகள் மற்றும் ஆய்வுகளாக நடந்து வருகின்றன. லான்செட் சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டது. கோவிஷீல்ட் இரண்டு டோஸ் 12 வாரங்கள் இடைவெளியில் போடப்பட்டால் 81.3% செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியது. ஆனால், அவை 6 வாரங்களுக்கும் குறைவான இடைவெளியில் போடப்படும்போது 55.1% செயல்திறனை மட்டுமே காட்டியது. பேராசிரியர் ரவி கூறுகையில் “அடிப்படைக் கொள்கை என்னவென்றால், 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளி அந்தளவுக்கு நல்லது. ஆனால், நீண்ட இடைவெளியை வேண்டாம் என்று நாங்கள் ஏன் சொல்கிறோம் என்றால், இந்த காலகட்டத்தில் ஒருவர் தொற்றுநோயைப் பெறலாம். மேலும், இரண்டாவது டோஸ் எடுக்க மறந்துபோவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

டாக்டர் காங்கின் கூற்றுப்படி, மற்ற தடுப்பூசிகள் (கோவேக்ஸின் போன்றவை) பொதுவாக ஒரு டோஸுடன் சிறிய பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே, மக்களுக்கு 80% பாதுகாப்பு அளிக்கும் இரண்டு டோஸ்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இங்கே ஒரு சில வாரங்கள் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது. அதனால், இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். இந்த சுழற்சியை மீண்டும் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் உறுதியளித்தார். மருத்துவ பரிசோதனைகளில் சில தன்னார்வலர்களுக்கு கோவேக்ஸின் மூன்றாவது டோஸ் கொடுக்க பாரத் பயோடெக்கிற்கு டி.ஜி.சி.ஐ சமீபத்தில் அனுமதி அளித்தது.

கோவேக்ஸின் முதல் டோஸாக எடுத்துக்கொண்ட பின், இரண்டாவது டோஸ் கோவேக்ஸின் கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக கோவிஷீல்ட்டை எடுத்துக்கொள்ளலாமா?

அனைத்து தடுப்பூசிகள் உருவாக்கும் முயற்சிகளும் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்டதால், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை இரண்டு டோஸ்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அறிக்கை அளிக்க டேட்டா இல்லை என்று டாக்டர் பால் கூறினார். உண்மையில், ஒருங்கிணைப்பு சிக்கல்கள் காரணமாக அதிகமான தடுப்பூசிகள் கிடைப்பது மோசமடையும். அடிப்படையில், இது ஒரு நிர்வாகப் பிரச்சினை, கல்வி / அறிவியல் பிரச்சினை அல்ல என்று டாக்டர் பால் கூறினார்.

சி.டி.சி குறிப்பிட்டுள்ளபடி, கோவிட் -19 தடுப்பூசிகள் ஒன்றுக்கொன்று மாற்ற இயலாதது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் ஆகும். “அதே எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி தயாரிப்பு தற்காலிகமாக கிடைக்காத சூழ்நிலைகளில், வேறுபட்ட உற்பத்தியைப் பயன்படுத்தி கலப்புத் தொடரைப் பெறுவதைக் காட்டிலும் அதே தயாரிப்பைப் பெறுவதற்கு இரண்டாவது டோஸை (ஆறு வாரங்கள் வரை) தாமதப்படுத்துவது நல்லது” என்று சி.டி.சி தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Vaccine Covaxin And Covishield
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment