Advertisment

ஆஷா ஊழியர்கள் யார்? WHO விருது வழங்கி கவுரவிக்க என்ன காரணம்?

இந்தியாவின் 10.4 லட்சம் ஆஷா ஊழியர்களை உலக சுகாதார தலைவர்களாக WHO அங்கீகரித்துள்ளது. ஆஷா ஊழியர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள்? கொரோனா காலத்தில் அவர்கள் எவ்வாறு உதவினார்கள்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆஷா ஊழியர்கள் யார்? WHO விருது வழங்கி கவுரவிக்க என்ன காரணம்?

அரசாங்கத்தின் சுகாதாரத் திட்டங்களுடன் சமூகத்தை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்ததற்காக, நாட்டின் 10.4 லட்சம் ஆஷா பெண் ஊழியர்களுக்கு, உலகளாவிய சுகாதார தலைவர்கள் விருதை அளித்து உலக சுகாதார அமைப்பு கவுரவித்துள்ளது.

Advertisment

விருது பெற்றதற்காக பிரதமர் உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்திருந்தாலும், அந்த பெண் ஊழியர்கள் அதிக ஊதியம், வழக்கமான வேலைகள், சுகாதார நலன்களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பல மாநிலங்களில் ஆஷா ஊழியர்கள் இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆஷா ஊழியர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தங்கள் கோரிக்கைகளுக்காக சாலைக்கு வந்து போராடினர்.

ஆஷா ஊழியர்கள் யார்?

ஆஷா ஊழியர்கள் சமூகத்தில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் . அரசாங்கத்தின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் பலன்களை மக்கள் பெறுவதற்கும், அதுகுறித்து தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லவும் பணியாற்றி வருகிறார்கள்

அவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றுடன் விளிம்புநிலை சமூகங்களை இணைக்கும் பாலமாக உள்ளனர்.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் (NRHM) கீழ் சமூக சுகாதார தன்னார்வலர்கள் என்பது 2005 இல் நிறுவப்பட்டது.

ஆஷா ஊழியர்கள் திருமணமானவர்களாகவும், விதவைகளாகவும் அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களது வயது கட்டாயம் 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்களிடம் மற்றவர்களுடன் கலந்துரையாடும் திறனும், தலைமைத்துவ திறனும் இருந்திட வேண்டும். திட்ட வழிகாட்டுதல்களின்படி, குறைந்தது 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

நாடு முழுவதும் எத்தனை ஆஷா ஊழியர்கள் உள்ளனர்?

ஒவ்வொரு 1,000 நபர்களுக்கு ஒரு ஆஷா ஊழியரும் அல்லது மலைப்பகுதி, பழங்குடியினர் அல்லது பிற குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒரு குடியிருப்புக்கு ஒரு ஆஷா இருக்க வேண்டும் என்பதே இலக்கு ஆகும்.

தற்போது, நாட்டில் 10.4 லட்சம் ஆஷா ஊழியர்கள் உள்ளனர். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் அதிகளவில் பணியாளர்கள் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 1.63 லட்சம் ஆஷா ஊழியர்களும், பீகாரில் 89 ஆயிரத்து 436 ஊழியர்களும், மத்திய பிரதேசத்தில் 77 ஆயிரத்து 531 ஊழியர்களும் உள்ளனர். செப்டம்பர் 2019 முதல் தேசிய சுகாதாரத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஷா ஊழியர்கள் இல்லாத ஒரே மாநிலம் கோவா மட்டுமே.

ஆஷா ஊழியர்களின் பணி என்ன?

ஊட்டச்சத்து, சுகாதார நடைமுறைகள், திட்டங்களின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் வீடு வீடாக சென்று தெரிவிக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் போது மருத்துவரை அணுகி பெண்கள் பரிசோதனை செய்வதை உறுதி செய்வதும், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தை பராமரித்தலும், சுகாதார வசதியில் பிரசவம் செய்ய வைப்பதும், பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை தாய்மார்களுக்கு புரியவைப்பதும் பணிகள் ஆகும். கருத்தடை மருந்துகள் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் குறித்தும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பூசி போடும் பணியை உறுதி செய்வதில் ஆஷா ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், காசநோயாளிகளுக்கு தேசிய திட்டத்தின் கீழ் நேரடியாக கண்காணித்து தினமும் மருந்துகளை வழங்குகிறார்கள்.

மலேரியாவிற்கான குளோரோகுயின், ரத்த சோகையைத் தடுக்க இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற அடிப்படை மருந்துகளையும் சிகிச்சைகளையும் வழங்குகிறார்கள்.

சுகாதார தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவிக்கும் பணியிலும் உள்ளனர்.

தொற்றுகாலத்தில் ஆஷா ஊழியர்கள் எவ்வாறு உதவினர்?

ஆஷா ஊழியர்கள், அரசாங்கத்தின் தொற்றுநோய்க்கான திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். பல மாநிலங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களை பரிசோதிப்பதற்கும், , தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உதவுவதற்கும் ஆஷா ஊழியர்களை தான் ஈடுபடுத்திருந்தனர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆஷா ஊழியரும், இந்திய திட்ட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான இஸ்மத் அர்ரா காதுன் கூறுகையில், " தொற்றுநோயின் முதல் ஆண்டில், அனைவரும் பயந்த சமயத்தில், ​​​​நாங்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதை செக் செய்தோம். காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். பின்னர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். மக்களிடையை தொற்றுநோய் அச்சம் இருந்ததால், எங்களை உள்ளே அனுமதிக்க விரும்பாத பல நிகழ்வுகளில் துன்புறுத்தலையும் எதிர்கொண்டோம்" என்றார்.

டெல்லியை சேர்ந்த முன்னாள் ஆஷா பணியாளர் கவிதா சிங் கூறுகையில், கொரோனா தொற்று உறுதியான நபர்களது வீட்டிற்கு சென்று, தனிமைப்படுத்தல் நடைமுறைகளை விவரிக்கும் பணியும் எங்களுக்கு இருந்தது. நாங்கள் தான், அவர்களுக்கு மருந்துகளையும், பல்ஸ்-ஆக்சிமீட்டர்களை வழங்க வேண்டியிருந்தது என்றார்.

கொரோனா தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் நிலையில், எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் பணியும், தடுப்பூசி பெற மக்களை ஊக்குவிக்கும் பணியும் ஆஷா ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆஷா பணியாளர்களுக்கு எவ்வளவு ஊதியம்?

அவர்களை "தன்னார்வத் தொண்டர்கள்" என்று கருதப்படுவதால், சம்பளம் கொடுக்க வேண்டியதற்கான கட்டாயம் அரசுக்கு ஏற்படவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் கொடுப்பதில்லை. அவர்களின் வருமானம் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை சார்ந்துள்ளது. உதாரணமாக, சுகாதார பிரிவில் பிரசவம் மேற்கொள்வதை உறுதிசெய்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற திட்ட பணிகளை மேற்கொண்டால், மாதம் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இஸ்மத் கூறுகையில், 24 மணி நேரமும் உழைத்தாலும் எல்லாப் பணிகளையும் முடிக்க முடியாது. ஓய்வூதியம் அல்லது உடல்நலக் காப்பீடு போன்ற எந்தப் பலன்களையும் பெறுவதில்லை.WHO எங்கள் பங்கை அங்கீகரிக்கும் போது, எங்கள் அரசாங்கம் ஹீரோ என அழைத்து மலர் மழையை தூவும்போது, ஏன் அவர்களால் நியாயமான ஊதியம் வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஆஷா பணியாளர்கள் தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக்கி சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கவிதா பேசுகையில், அரசு ஊழியர்களாக மாற்றமுடியாவிட்டால், குறைந்தபட்சம் ஊக்கத்தொகையை மாற்றியமைத்தால் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ 3,000 ஊதியம் பெறுவோம். அனைத்து வேலைகளுக்கும் 0 முதல் 12 வரை மார்க் வழங்கப்படுகிறது. நாங்கள், 6 புள்ளிகளை எட்டவில்லை என்றால், ரூ.3,000க்கு பதிலாக ரூ.500 மட்டுமே வழங்கப்படும்.

கோவிட்-19-ன் போது, ​​கூடுதல் வேலைகள் அனைத்திற்கும் எங்களுக்கு ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால், டெல்லியில் உள்ள ஆஷா பணியாளர்களில் பாதி பேர் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தனர் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Who
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment