Advertisment

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா மாறுபாட்டை உலகளாவிய அச்சுறுத்தும் வகையாக WHO கூறுவது ஏன்?

WHO classifies India variant as being of global concern ஏப்ரல் 1-ம் தேதி இங்கிலாந்து சுகாதார அதிகாரிகளால் பி .1.617 முதன்முதலில் வி.யு.ஐ.யாக குறிப்பிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
WHO classifies India variant as being of global concern Tamil News

WHO classifies India variant as being of global concern Tamil News

WHO classifies India variant as being of global concern Tamil News : கடந்த திங்களன்று இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் மாறுபாட்டை "உலகளாவிய கவலை" என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. பி .1.617 என அழைக்கப்படும் இந்த மாறுபாடு, மே மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் அதிகாரிகளால் விசாரணையின் கீழ் (வி.யு.ஐ) வகைப்படுத்தப்பட்டது. இது ஏற்கெனவே 17-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது மற்றும் பல நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்குப் பயண கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

Advertisment

இந்த மாறுபாட்டை WHO எவ்வாறு வரையறுக்கிறது?

ஒரு ஒப்பீட்டு மதிப்பீட்டின் மூலம், COVID-19 தொற்றுநோய் பரவுதல் அல்லது தீங்கு விளைவிக்கும் மாற்றம், வைரஸ் அதிகரிப்பு அல்லது மருத்துவ நோய் விளக்கக்காட்சியில் மாற்றம் அல்லது பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள், தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றின் செயல்திறன் குறைதல் போன்றவற்றை ஆராய்ந்து, வைரஸ் பரிணாம பணிக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு variant of interest (VOI) என்பதிலிருந்து variant of concern (VOC) என வகைப்படுத்தலாம்.

இந்தியாவில் தற்போதைய எழுச்சிக்கு B.1.617 காரணமா?

கடந்த வாரம் இந்திய அரசு இந்த மாறுபாட்டை "இரட்டை விகாரி மாறுபாடு" என்று அழைத்தது. இது சில மாநிலங்களில் காணப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு எழுச்சியுடன் இணைக்கப்படலாம். இது, மையத்தின் முந்தைய நிலைப்பாட்டின் மாற்றம் அதாவது தற்போதைய எழுச்சிக்கு இணைப்பை ஏற்படுத்த போதுமான மாதிரிகளில் அதன் திரிபு அடையாளம் காணப்படவில்லை என்று கூறியது. அப்படியிருந்தும், இந்த இணைப்பு "முழுமையாக நிறுவப்படவில்லை" என்று அரசாங்கம் கூறியது.

முன்னதாக மார்ச் மாதத்தில், நாட்டின் 18 மாநிலங்களில் காணப்படும் பல விகாரங்கள் அல்லது கவலை வகைகளுக்கு (விஓசி) கூடுதலாக இந்த புதிய “இரட்டை விகாரி மாறுபாடு” கண்டறியப்பட்டதாக இந்திய சுகாதார அமைச்சகம் கூறியது. ஏப்ரல் 1-ம் தேதி இங்கிலாந்து சுகாதார அதிகாரிகளால் பி .1.617 முதன்முதலில் வி.யு.ஐ.யாக குறிப்பிடப்பட்டது.

வைரஸின் மாறுபாடுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன, ஏன்?

ஒரு வைரஸின் மாறுபாடு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளன. அவை புழக்கத்தில் இருக்கும் மற்ற வகைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரும்பாலான பிறழ்வுகள் வைரஸுக்கு தீங்கு விளைவிக்கும் அதே வேளையில் சில வைரஸ்கள் உயிர்வாழ்வதை எளிதாக்குகின்றன.

அடிப்படையில், வைரஸின் குறிக்கோள், மனிதர்களுடன் ஒத்துழைக்கக்கூடிய ஒரு கட்டத்தை அடைவதுதான். ஏனெனில், அது உயிர்வாழ ஒரு ஹோஸ்ட் தேவைப்படுகிறது. இதன் பொருள், எந்தவொரு வைரஸும் உருவாகி வரும் வேளையில் அதன் கடுமையான தன்மை குறைவானதாக மாறக்கூடும். ஆனால், இந்த செயல்பாட்டில் இது உடலின் நோயெதிர்ப்பு ரெஸ்பான்ஸிலிருந்து தப்பிக்க அல்லது அதிக அளவில் பரவக்கூடிய சில பிறழ்வுகளை அடையக்கூடும்.

SARS-CoV-2 வைரஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏனெனில், இது உலகெங்கிலும் உள்ள மக்களை பாதித்துள்ளது. இது அதிக அளவு புழக்கத்தில் இருப்பதால், வைரஸ் வேகமாக நகலெடுக்க முடியும் என்பதால் அதை மாற்றுவது எளிது.

B.1.617 மாறுபாட்டில் E484Q மற்றும் L452R எனக் குறிப்பிடப்படும் இரண்டு வைரஸின் பிறழ்வுகள் உள்ளன. இரண்டும் தனித்தனியாகப் பல கொரோனா வைரஸ் வகைகளில் காணப்படுகின்றன. ஆனால், அவை இந்தியாவில்தான் முதல்முறையாக ஒன்றாகப் புகாரளிக்கப்பட்டன.

L452R பிறழ்வு, B.1.427 / B.1.429 போன்ற வேறு சில VOI-களில் கண்டறியப்பட்டுள்ளது. அவை அதிக அளவில் பரவக்கூடியவை என்று நம்பப்படுகிறது. இயற்கையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து E484Q பிறழ்வைக் கொண்ட மாறுபாடுகளுக்கு எதிராக நடுநிலைப்படுத்தலைக் குறைத்திருக்கலாம் என்று மாதிரிகள் மூலம் ஆய்வக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று WHO கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் மாறுபாடுகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன? இதன் பொருள் என்ன?

SARS-CoV-2-ன் மாறுபாடுகள், தொற்றுநோயியல், நோயெதிர்ப்பு அல்லது நோய்க்கிருமி பண்புகள் குறித்து கருதப்பட்டால், அவை முறையான விசாரணைக்கு எழுப்பப்படுகின்றன என்று Public Health England (PHE) கூறுகிறது.

இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட மூன்று வகைகள் (VUI-21APR-01, -21APR-02 மற்றும் VUI-21APR-03)   PHE-ஆல் VUI என அழைக்கப்படுகின்றன. அதன் தொடர்புடைய நிபுணர் குழுவுடன் ஆபத்து மதிப்பீட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட மாறுபாடுகள் இங்கிலாந்து சுகாதார அதிகார சபையால் வேரியண்ட் ஆஃப் கன்சர்ன் (விஓசி) எனப் பெயரிடப்பட்டது.

மறுபுறம், யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) மாறுபாடுகளை, variant of interest (VOI), variant of concern (VOC) மற்றும் உயர் விளைவுகளின் மாறுபாடு என மூன்று வகைகளாக வகைப்படுத்துகின்றன. அமெரிக்காவில், B.1.526, B.1.526.1, B.1.525 (முன்னர் நியமிக்கப்பட்ட UK1188 மற்றும் இங்கிலாந்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது), மற்றும் P.2 (பிரேசிலில் முதலில் அடையாளம் காணப்பட்டது) வகைகள் குறிக்கின்றன. மறுபுறம், அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் B.1.1.7, B.1.351, P.1, B.1.427, மற்றும் B.1.429 வகைகள் மிகவும் கவலைக்கிடமான வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Who Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment