Advertisment

கேரளாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மானுடவியலாளர்! யார் இந்த ஃபிலிப்போ ஓசெல்லா?

அவருடைய படைப்புகளில், கேரளத்தில் தீண்டதகாதவர்களாக நடத்தப்பட்ட ஈழவ வகுப்பினர் குறித்து எழுதிய ”சோசியல் மொபிலிட்டி இன் கேரளா; மாடர்னிட்டி அண்ட் ஐடெண்டிட்டி இன் கான்ஃப்ளிக்ட்(Social Mobility in Kerala: Modernity and Identity in Conflict) ” என்ற புத்தகம் மிக முக்கியமானது.

author-image
WebDesk
New Update
Who is Filippo Osella scholar of Kerala who was denied entry into India

திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்க, வியாழக்கிழமை அன்று கேரளா வந்த சமூக மானுடவியல் ஆராய்ச்சியாளர் ஃபிலிப்போ ஓசெல்லா திருப்பி அனுப்பப்பட்டார். சமூகம், பொருளாதாரம் மற்றும் கேரளத்தில் உள்ள மதம் சார்பாக ஆய்வு நடத்தும் உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சியாளார்களில் ஒருவரான அவர் மார்ச் மாதம் 24ம் தேதி அன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

Advertisment

மிகவும் சரளமாக மலையாளம் பேசக் கூடிய ஓசெல்லா தன்னுடைய வாழ்நாளில் 30 ஆண்டுகளை கேரளா குறித்த ஆய்வுக்காக செலவிட்டுள்ளார். மேலும் அவரது படைப்புகளின் அளவும் வரம்பும் இதுவரை வெளியான இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்களின் படைப்புகளைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.

கேரள அறிஞர்

கேரோலின் ஓசெல்லாவுடன் இணைந்து அவர் நடத்திய ஆராய்ச்சிகல் அனைத்தும் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் மீது வெளிச்சம் பாய்ச்சியது. பிற்படுத்தப்பட்ட இந்து சமூகங்கள், சபரிமலை விவகாரம், நவீனத்துவம், சமூகத்தின் போக்கு, இடம் பெயர்வு, இஸ்லாமிய சமூகங்களின் நிலை, கேரளா மற்றும் இலங்கையில் உள்ள தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அவர் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார்.

65 வயதான, இத்தாலிய-ஆங்கில பேராசிரியர் மானுடவியல் மற்றும் தெற்காசிய நாடுகள் தொடர்பாக, இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பாடங்கள் எடுத்து வருகிறார்.

அவருடைய படைப்புகளில், கேரளத்தில் தீண்டதகாதவர்களாக நடத்தப்பட்ட ஈழவ வகுப்பினர் குறித்து எழுதிய ”சோசியல் மொபிலிட்டி இன் கேரளா; மாடர்னிட்டி அண்ட் ஐடெண்டிட்டி இன் கான்ஃப்ளிக்ட்(Social Mobility in Kerala: Modernity and Identity in Conflict) ” என்ற புத்தகம் மிக முக்கியமானது. இந்த சமூகம் பின்னாட்களில் தங்களின் சமூக விலக்குகள் குறித்து பேசி, தங்களுக்கான பொருளாதாரம், அடையாளம் மற்றும் கலாச்சார மூலதனத்தை பெற்றனர்.

மதம், பாலினம் மற்றும் வர்த்தகம்

ஒசெல்லாவின் மற்ற புத்தகங்கள் மென் அன்ட் மஸ்குலினிடிஸ் இன் சவுத் இந்தியா (2006) ( Men and Masculinities in South India), மைக்ரேசன், மாடெர்னிட்டி அண்ட் சோசியல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இன் சவுத் இந்தியா (‘Migration, Modernity and Social Transformation in South Asia’ (ed., 2003), இஸ்லாமிக் ரிஃபார்ம் இன் சவுத் ஏசியா (‘Islamic Reform in South Asia’ (2011), ரிலிஜியன் அண்ட் மோராலிட்டி ஆஃப் தி மார்க்கெட் (d ‘Religion and the Morality of the Market’ (ed., 2017)) போன்றவை கேரளத்தில் நிலவும் பல்வேறு சமூக கூறுகள் பற்றி பேசுகிறது. மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென்னிந்திய இஸ்லாமியர்கள் பற்றி பேசும் Religiosity and its Others: Lived Islam in West Africa and South India (2020) என்ற கட்டுரை, கொழும்புவில் உள்ள இஸ்லாமிய அறக்கட்டளையின் பணிகள் குறித்து எழுதப்பட்ட You can give even if you only have ten rupees Muslim Charity in a Colombo Housing Scheme (2018) என்ற கட்டுரை, இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்த பஞ்சாபியர்கள் பற்றிய Indian Punjabi Skilled Migrants in Britain: Of Brain Drain and Under-employment (2013) என்ற கட்டுரை, சபரிமலை குறித்து Ayyappan saranam’: Masculinity and the Sabarimala Pilgrimage in Kerala (2003) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை, மற்றும் இந்தியா மற்றும் விரிகுடா நாடுகளில் வாழும் இஸ்லாமிய தொழில் முனைவோர்களின் வாழ்க்கை பற்றிய Muslim Entrepreneurs in Public Life Between India and the Gulf: Making Good and Doing Good (2010) கட்டுரைகள் போன்றவை மிக முக்கியமானவை.

Malabar Secrets: South Indian Muslim Men’s (Homo)sociality Across the Indian Ocean என்ற கட்டுரையில் மலபாரில் வசிக்கும் இஸ்லாமிய ஆண்களிடையேயான ஓரினச்சேர்க்கை குறித்து உஸ்மான், ஜாக்கீர் ஆகிய கதை மாந்தர்கள் மூலம் பேசினார் ஓசெல்லா. இந்த கட்டுரை 2012ம் ஆண்டு வெளியானது. ‘Men and Masculinities in South India’ என்ற புத்தகம் தெற்காசியாவில் பாலினத்தை பகுப்பாய்வு செய்வதற்காக வலியகிராமம் கிராமத்தின் இனவியல் ஆய்வு ஆகும். ‘Muslim Style in South India’ என்ற கட்டுரை 2007ம் ஆண்டு வெளியானது. அது முழுக்க முழுக்க 19ம் நூற்றாண்டில் இருந்து மலையாள இஸ்லாமியர்களின் உடை அலங்காரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பேசியது.

The Unbearable Lightness of Trust: Trade, Conviviality, and the Life-world of Indian Export Agents in Yiwu, China’ (2021) என்பது சீனா, இந்தியா மற்றும் அமீரகத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது சீனாவில் உள்ள யிவூ என்ற பகுதியில் வசித்து வரும் இந்திய ஏற்றுமதி ஏஜெனெட்டுகளின் வாழ்க்கை, பழக்கவழங்கள் குறித்து விரிவாக உடையாடுகிறது. வேகமாக விற்றுத் தீர்க்கும் பொருட்கள், குறுகிய கால இலக்குகள், மற்றும் குறைவான லாபத்தின் அடிப்படையில் செயல்படும் மலிவான பொருட்களின் உலகளாவிய சந்தையாக திகழும் யிவூ பகுதியில் நம்பிக்கை என்பது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment