Advertisment

இம்ரான் கான் முன்னிறுத்திய பாக். பிரதமர் வேட்பாளர்: யார் இந்த மஹ்மூத் குரேஷி ?

திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் அதன் தலைவர் ஷேபாஸ் ஷெரீப்பை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
இம்ரான் கான் முன்னிறுத்திய பாக். பிரதமர் வேட்பாளர்:  யார் இந்த மஹ்மூத் குரேஷி ?

Sanskriti Falor 

Advertisment

Shah Mahmood Qureshi nominated for Pakistans PM: பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவருமான ஷா மஹ்மூத் குரேஷி பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தானில் முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. குரேஷியின் வேட்புமனுவை அமீர் டோகர் முன்மொழிந்தார் மற்றும் மலீகா போகாரி ஆதரித்தார்.

திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் அதன் தலைவர் ஷேபாஸ் ஷெரீப்பை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. குரேஷி மற்றும் ஷெரீப் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு புதிய பிரதமர் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் தேர்வு செய்யப்படுவார்.

சபைத் தலைவர்/பிரதமர் தேர்தலுக்கான மியான் முகமது ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்கு பின், இரு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன என்று பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்யப்பட்டது.

?list=PLrDg7LoYgk9yMNR52GBFvX4t-7I9HSdX5

யார் இந்த குரேஷி?

2008 - 2011 மற்றும் 2018 - 2022 ஆகிய இரண்டு காலகட்டங்களில் குரேஷி பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். முல்தானின் செல்வாக்கு மிக்க, செல்வந்தர் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1956ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த அவர் லாகூரில் அமைந்திருக்கும் எய்ட்சிஸோன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் கோர்ப்பஸ் க்றிஸ்டி கல்லூரியில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையை அவர் 1985ம் ஆண்டு துவங்கினார். அப்போது அவர் பஞ்சாப் சட்டமன்றத்தில் முல்தான் பிரதிநிதியாக பொறுப்பேற்றார். 1986ம் ஆண்டு குரேஷி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் சேர்ந்து முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிஃபுடன் நல்ல தொடர்பில் இருந்தார். அப்போது அவர் நவாஸ் செரிஃபின் அமைச்சரவையில் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருந்த அவர் பஞ்சாப் சட்டமன்றத்தில் மீண்டும் அவர் 1988ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாணத்தின் நிதி அமைச்சராகவும் அவர் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

93ம் ஆண்டு அவர் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து விலகிய அவர் பிறகு பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்தார். அவருடைய அமைச்சரவையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். 1996ம் ஆண்டு அவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் நியாமிக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு பெனாசீர் பூட்டோ குரேஷியை பஞ்சாப் மாகாணத்தின் பி.பி.பி. கட்சி தலைவராக நியமித்தார். 2008ம் ஆண்டு பிரதமராக அவர் அறிவிக்கப்படும் சூழல் இருந்த போதும் அவருக்கு வெளியுறவுத்துறை வழங்கப்பட்டது.

அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் மாற்றும் ரேமாண்ட் டாவிஸ் விவகாரங்களை எதிர்கொண்டார். இதன் விளைவாக அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். பிறகு 2011ம் ஆண்டு அவர் பி.டி.ஐ. கட்சியில் சேர்ந்து கட்சியின் முக்கிய நபராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும், முல்தானைச் சேர்ந்த ஜாவேத் ஹஷ்மியும் அவர் கட்சியில் சேர்ந்ததில் இருந்து அவருக்குப் போட்டி நீடித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment