Advertisment

காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

காசெம் சுலேமானீ : சமச்சீரற்ற போரில் நாங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வாருங்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

மேஜர் ஜென்ரல் காசெம் சுலேமானீ, ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதி ஆவார். கடந்த வெள்ளியன்று, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இவர் தாக்குதலால் கொல்லப்பட்டார்.

Advertisment

வெள்ளிக்கிழமை காலை பாக்தாத்தில் சரியாக என்ன நடந்தது?

ஜெனரல் காசெம் சுலேமானீ வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு அமெரிக்கா பின்னர் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

சுலேமானீ , தாக்குதல் நடப்பதற்கு முன்பாக ஒரு விமானத்திலிருந்து இறங்கியதாக கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் மக்கள் அணிதிரட்டல் படைகள் என்று அழைக்கப்படும் ஈராக்கில் ஈரானிய ஆதரவு போராளிகளின் துணைத் தளபதி அபு மஹ்தி அல் முஹந்திஸ் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் சுலேமானீயின்  மருமகனும் அடங்குவதாக ஈரானின் அரசு தொலைக்காட்சியை மேற்கோள் காட்டியதாக  அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டுளளது.

ஜெனரல் காசெம் சுலேமானீ  யார்?

62 வயதான சுலேமானீ ,ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் குட்ஸ் பிரிவின் (ஐ.ஆர்.ஜி.சி) பொறுப்பாளராக இருந்தார். இதை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது. ஈரானிய நாட்டு பணிகளை பிற நாடுகளில் இந்த குட்ஸ் படை (ரகசியமாக) மேற்கொள்கிறது.

1998 ஆம் ஆண்டு முதல் குட்ஸின் தலைவராக இருந்த சுலேமானீ , உளவுத்துறை சேகரிப்பு மற்றும் இரகசிய இராணுவ நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராக  கருதப்பட்டார். பல்வேறு அறிக்கைகளின்படி, ஈரான் நாட்டின் எதிர்காலத் தலைவராகவும் காணப்பட்டார்.

காசெம் சுலேமானீயை  முதலில் புரிந்து கொள்ளாமல் இன்றைய ஈரானை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்ற கூற்றே உள்ளது. ஓமான் வளைகுடாவிலிருந்து ஈராக், சிரியா மற்றும் லெபனான் வழியாக மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரைகள் வரை பரவியுள்ள பகுதிகளில்  ஈரானின் செல்வாக்கை குறிக்கும்  “எதிர்ப்பின் அச்சு” (Axis of Resistance ) என்ற எல்லை வளைவை உருவாக்குவதற்கு சுலேமானீ முக்கிய பங்காற்றியவர்

அவரின் கொலை  ஏன் இவ்வளவு பெரிய விஷயம்?

அவர் பொதுவாக ஒரு அமைதியான மனிதர். பொது இடங்களில்  தன்னை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவதும் உண்டு. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் தனக்கான ஆக்ரோசத்தை வெளிபடுத்தவும் செய்திருக்கிறார். கடந்த ஆண்டு ஒரு சந்தர்ப்பம் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்வீட் தனது ட்வீட்டில் : “ஈரானிய ஜனாதிபதி (ஹசன்) ரூஹானிக்கு: எப்போதும் இல்லை, அமெரிக்காவை அச்சுறுத்த நினைக்காதீர்கள், இலையேல் வரலாற்றில் யாருக்கும் நடக்காத துயரங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்” என்று பதிவு செய்திருந்தார்.

உங்களுக்கு பதில் கூறுவது,  ஈரானின் பெரிய இஸ்லாமிய நாட்டின் ஜனாதிபதியின் கண்ணியத்திற்குக் கீழானது, இந்த தேசத்தின் மாபெரும் சிப்பாய் என்ற முறையில்  நான் பதிலளிகின்றேன் … திரு டிரம்ப், சூதாட்டக்காரர்!… பிராந்தியத்தில் எங்கள் சக்தி மற்றும் திறன்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். சமச்சீரற்ற போரில் நாங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வாருங்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்… ”  என்று பதில் கூறியிருந்தார்.

2008ம் ஆண்டில் அமெரிக்க ஜெனரல் டேவிட் பெட்ரீயஸுக்கு இவர் எழுதிய ஒரு குறுஞ்செய்தியில் , “ஜெனரல் பெட்ரீயஸ், ஈராக், லெபனான், காசா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஈரானுக்கான கொள்கையை,  காசெம் சுலேமானீ என்னும் நான்  கட்டுப்படுத்துகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில், பாக்தாத்தில் உள்ள தூதர் ஒரு குட்ஸ் படை உறுப்பினர். அவருக்குப் பிறகு அந்த பதவிக்கு வருபவரும்   ஒரு குட்ஸ் படை உறுப்பினர். ” என்று எழுதியிருந்தார்.

இந்த நிலைக்கு அவர் எப்படி உயர்ந்தார்?

செப்டம்பர் 2013 தி நியூயார்க்கரில் வந்த ஒரு கட்டுரையில், டெக்ஸ்டர் ஃபில்கின்ஸ்  என்ற ஆசிரியர் காசெம் சுலேமானீ  வாழ்க்கையை தொகுத்து வழங்கினார். ஃபில்கின்ஸ் அவரை "ஒரு கண்டிப்பான ஆனால் அன்பான தந்தை" என்று விவரித்தார்.

1979ம் ஆண்டில், அயத்துல்லா ருஹொல்லா கொமெய்னியின்  கிளர்ச்சி ஈரானில் ஷாவை கவிழ்த்தபோது, 22 வயதான சுலேமானீ அயதுல்லாவின் புரட்சிகர காவல்படையில் சேர்ந்தார். ஈரான்-ஈராக் போரின்போது, படையினருக்கு நீர் வழங்கும் பணிக்காகத் தான் சுலேமானீ நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பிற காலத்தில் இரான் நாட்டிற்கே உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,  துணிச்சலுக்கும், திறமைக்கும் புகழ் பெற்றார் என்று ஃபில்கின்ஸ் எழுதினார். 1998ம் ஆண்டில், காசெம் சுலேமானீ குட்ஸ் படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  இது அவர் செல்வாக்கிற்கு வழிவகுத்தது.

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (குட்ஸ் படை)  என்ன செய்தது?

ஈரானைப் பாதுகாத்தல் மற்றும் இஸ்லாமியப் புரட்சியை மற்ற நாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கான குறிக்கோளுடன் 1979ம் ஆண்டில் அயத்துல்லா ருஹொல்லா கொமெய்னியின் உருவாக்கிய முன்மாதிரி தான் இந்த குட்ஸ் படை  என்று , ஃபில்கின்ஸ் எழுதினார்.

1982 ம் ஆண்டில், லெபனானின் உள்நாட்டுப் போரின் போது  ஷியா போராளிகளை ஒழுங்கமைக்க உதவுவதற்காக புரட்சிகர காவல்படை அதிகாரிகள் (குட்ஸ் படைகள் ) அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  இதுவே, ஹெஸ்பொல்லாவை உருவாக்க வழிவகுத்தது. ஒரு ஆய்வறிக்கையின் படி, சுமார் 125,000 குட்ஸ் படை வீரர்கள் ஈரான் நாட்டின் ஆயுத படைகளுக்கு பங்களித்துள்ளதுனர் என்றும், சமச்சீரற்ற போர் மற்றும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது 9/11 நிகழ்வைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தோற்கடிக்க விரும்பிய குட்ஸ் படைத்தலைவராக, காசெம் சுலேமானீ அந்த காலங்களில் அமெரிக்காவுடன் இணைந்தும்  பணியாற்றினார்.  இருந்தாலும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஈரானை அணுசக்தி பெருக்கி, பயங்கரவாதத்தின் ஏற்றுமதியாளர் மற்றும் "தீய அச்சின்" ஒரு பகுதி என்று முத்திரை குத்திய பின்னர் இந்த ஒத்துழைப்பு 2002ல் முடிவடைந்தது .

2003 ஆம் ஆண்டுகளில், ஈராக் மீதான அமெரிக்கா  படையெடுப்பைத் தொடர்ந்து (இறுதியாக சதாம் உசேன்  தூக்கிலடப்பட்டார் )அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டதாக சுலேமானீ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. 2011 ம் ஆண்டில், அமெரிக்காவின் கருவூலம் துறை  அவரை ஒரு தடுப்புப்பட்டியலில் சேர்த்தது.

சமீபத்திய ஆண்டுகளில், சிரியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் ஈரானின் இராணுவ பின்னணியில் காசெம் சுலேமானீ முக்கிய மூலோபாயவாதி என்று நம்பப்பட்டது. மத்திய கிழக்கை ஈரானுக்கு ஆதரவாக மாற்றியமைக்க முயன்றார் என்றும் கூறப்படுகிறது.  ஆயுத நட்பு நாடுகளை உருவாக்குதல்,  ஈராக்கில் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை  கொன்ற போர்க்குணமிக்க குழுக்களின் வலையமைப்பை உருவாக்குதல் போன்றவைகள்  இவரை அமெரிக்காவின் ஒரு உச்சகட்ட எதிரியாக மாற்றியது.

அவர் கொல்லப்பட்டதை அமெரிக்கா எவ்வாறு நியாயப்படுத்தியுள்ளது?

அமெரிக்காவுடனான மோதலில் சுலேமானீயின் தலைமைப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலான ஒரு அறிக்கையை அமெரிக்கா பாதுகாப்புத் துறை  வெளியிட்டது: நூற்றுக்கணக்கான அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி படை வீரர்களின் இறப்புகளுக்கு சுலேமானீயும்  அவரது படையினரும் காரணமாக இருந்தனர். அவர் கடந்த பல மாதங்களாக ஈராக்கில் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்.  டிசம்பர் 27 அன்று நடந்த தாக்குதல் உட்பட - கூடுதல் அமெரிக்க, ஈராக் வீரர்களின் மரணம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஐ.ஆர்.ஜி.சி நேரடியாக பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது; பயங்கரவாதத்திற்கான அதன் ஆதரவு அடித்தளமாகவும் நிறுவன ரீதியாகவும் உள்ளது.  மேலும் அது அமெரிக்க குடிமக்களைக் கொன்றது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்போது என்ன நடக்கும்?

தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம், ஒட்டுமொத்த மத்திய கிழக்கை விளிம்பு நிலைக்கு கொன்றுசென்றுவிட்டது என்றே கூறலாம்.    பிராந்தியத்திற்கு அப்பால் சாத்தியமான விளைவுகள் ஏற்படலாம். இந்த கொலை அமெரிக்காவை எதிர்ப்பதில் ஈரானை மிகவும் தீர்க்கமானதாக மாற்றும் என்று ஜனாதிபதி ரூஹானி கூறினார்.

அதே நேரத்தில், இஸ்லாம் உலகத்தில் இருக்கும்  அமெரிக்க எதிர்ப்பு சக்திகள்  இதற்கான பழிவாங்கும் செயலை தொடங்கும்  என்று இரானின் புரட்சிகர ராணுவ படை தெரிவித்துள்ளது.

அயதுல்லா அலி கமேனி ஒரு அறிக்கையை வெளியிட்டார்: "அவர் கடவுளிடம் புறப்படுவதினால் அவரது பாதை மற்றும் அவரது பணி முடிவுக்குக் கொண்டுவருவதில்லை.  அவரது இரத்தத்தையும் மற்ற தியாகிகளின் இரத்தத்தையும் நேற்றிரவு தங்கள் கைகளில் வைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பலமான பழிவாங்கல் காத்திருக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாத் ஸரீஃப் தனது ட்வீட்ல் : “அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாத செயல், ஜெனரல் சுலேமானீயை  குறிவைத்து படுகொலை செய்தது மிகவும் ஆபத்தானது மற்றும் ஒரு முட்டாள்தனமானது.   ஐ.எஸ்.ஐ.எஸ், அல் நுஸ்ரா, அல்கொய்தா போன்றவைகளை  கடுமையாக எதிர்த்தவர் சுலேமானீ. அமெரிக்காவின் முரட்டு சாகசத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்நாடு பொறுப்பேற்கிறது.” என்று பதிவு செய்துள்ளார் .

அமெரிக்காவின் மீதான சைபர் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட ஈரானிய பதிலடி தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலும் ஈரானிய பதில் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது . ஈரானும், அமெரிக்காவும் செல்வாக்கிற்காக போட்டியிடும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எந்தவொரு நாடுகளிலும் சுலேமானீயின் கொலை ஒரு சிற்றலை விளைவை ஏற்படுத்தும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமெரிக்க குடிமக்களை உடனடியாக ஈராக்கிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியது.

Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment