Centre wants to raise marriage age of women : குழந்தைகள் திருமண தடை சட்ட (திருத்த) மசோதா (Child Marriage (Amendment) Bill, 2021), இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். ஒரு முறை இந்த சட்டம் இயற்றப்பட்டால் ஏற்கனவே இருக்கும் திருமணம் மற்றும் தனிநபர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சர் ஸ்மிரிதி இரானி இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். குழந்தைகள் திருமண தடை சட்டம் 2006-ல் திருத்தங்களை ஏற்படுத்த இந்த சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 21 வயதை அடையாத ஆண்களும் பெண்களும் குழந்தையாக கருதப்படுவார்கள் என்று இந்த திருத்த மசோதாவில் ”குழந்தை” என்பதன் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட பெண்களின் திருமண வயது: தனிநபர் சட்டங்களில் மாற்றம் ஏற்படலாம் என சிறுபான்மையினர் அச்சம்

பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு: சட்டங்கள், காரணங்கள், விமர்சனங்கள் – முழுப்பார்வை
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த மசோதாவை சட்டமாக்க ஏன் அரசு இவ்வளவு அவரசப்படுகிறது என்ற கேள்வியை முன்வைத்ததோடு கடுமையான எதிர்ப்புகளையும் பதிவு செய்தது. ஆனால் சிறுபான்மையினர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்ல்லை மாறாக தனிநபர் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்கள்.




தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil