Advertisment

தினமும் 7½ மணி நேர மின் வெட்டு… 26 வருடங்களில் மிக நீண்ட மின்வெட்டை சந்திக்கும் இலங்கை

இலங்கையில் தினமும் 7½ மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

author-image
WebDesk
New Update
தினமும் 7½ மணி நேர மின் வெட்டு… 26 வருடங்களில் மிக நீண்ட மின்வெட்டை சந்திக்கும் இலங்கை

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மார்ச் 2 அன்று தினமும் 7½ மணி நேரம் மின்வெட்டு அறிவித்தது. 26 வருடங்களில் இலங்கையில் அறிவிக்கப்பட்ட மிக நீண்ட மின்வெட்டு இதுவாகும் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

மின் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவ்வப்போது இலங்கை அரசு மின்வெட்டு அறிவித்து வருகிறது.

மின்சாரம், எரிபொருள் தட்டுப்பாடு

பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள அட்டவணையின்படி, காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 8. 30 மணி வரையும், அல்லது பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 8.30 மணி முதல் 11 மணி வரையும் என பல்வேறு வகையாக மின்வெட்டு அமல்ப்படுத்தப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு மின்சார உற்பத்திக்கு நீர்மின் நிலையங்களை நம்பியிருந்த நிலையில், வறட்சி மற்றும் அணைகளில் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் நீர்மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, ஏற்பட்ட மிகப்பெரிய மின்வெட்டு இதுவாகும்.

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே எரிபொருளை இறக்குமதி செய்வதை உறுதி செய்யுமாறு கருவூலம் மற்றும் மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்தார். இதுதவிர, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது அலுவலகங்கள் ஏசியை ஆஃப் செய்துவிட்டு இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒழுங்குமுறை அமைப்பு கூறுகையில், " தற்போது இலங்கை எதிர்கொள்வது மின்சார திறன் பிரச்சினை அல்ல. இது ஒரு அந்நிய செலாவணி நெருக்கடியாகும். ஏனெனில், நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்ய போதுமான இருப்புக்கள் இல்லை" என்றார்.

publive-image

மேலும், எரிபொருள் பற்றாக்குறையால் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை நீடித்தால், பொதுப் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நீர்மின் அணைகளும் எரிசக்தி தேவையை சரிசெய்ய முடியவில்லை.

ஏன் இலங்கை எரிபொருளை பணம் கொடுத்த வாங்கவில்லை?

இலங்கை கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2019 இல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்சே அரசாங்கம் செலவினங்களை அதிகரிக்க மதிப்பு கூட்டப்பட்ட வரியை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்தது.

இந்த முடிவாலும், இலங்கை பொருளாதாரம் பெரிதும் நம்பியிருந்த சுற்றுலா துறைக்கு பெருந்தோற்றால் வந்த சிக்கலும், நாட்டை மோசமான நிதிநிலைக்கு இட்டுச் சென்றது.

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதிக்கான பணம் அரசிடமிருந்து வராததால், நான்கு நாள்களாக 40 ஆயிரம் டன் எரிபொருள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தது. அரசு தரப்பில் பணம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டதால், அதனை கிளியர் செய்திட இலங்கை வங்கி 35.5 பில்லியன் டாலர்களை விடுவித்தது.

பிப்ரவரி 28 அன்று, இலங்கை மத்திய வங்கி வழங்கிய தரவுகளின்படி, 2022 ஜனவரியில் அதன் வெளிநாட்டு கையிருப்பு 24.8 சதவீதம் இழந்து 2.36 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.இது, 2022இல் இலங்கை 7 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

கடனை செலுத்த இலங்கை அரசு தவறினால், நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியிருக்கும். இது, இதுவரை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

புளூம்பெர்க் அறிக்கையில், இலங்கை பிப்ரவரி மாதத்தில் ஆசியாவிலேயே வேகமான பணவீக்கத்தைக் கண்டதாகவும், நுகர்வோருக்கான விலைகள் முந்தைய ஆண்டை விட 15.1 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போர் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கலாம். ஏனெனில் ரஷ்யா அதன் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளர்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்தியா உதவியதா?

உணவு, மருந்துப் பொருட்களுக்காக இலங்கை தனது அண்டை நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் கடன் மற்றும் நாணய மாற்றங்களை நம்பியுள்ளது. அதன் மூலம், வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்கிறது.

பிப்ரவரியில் இலங்கையின் நெருக்கடியை சமாளிக்க 40,000 டன் எரிபொருளை இந்தியா அனுப்பியது. ஜனவரியில், இந்தியா $400-மில்லியன் கிரெடிட் ஸ்வாப் வசதியில் கையெழுத்திட்டது.

பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியிருந்தது.

publive-image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை அரசின் அவசர தேவையை கவனத்தில் கொண்டு, இந்தியாவிலிருந்து இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு ஆதரவாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் LOC மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆதரவானது, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் சந்திப்பை அடுத்து வந்தது. ஜனவரி 15, 2022 அன்று இரு தரப்பினிடையே பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும், இந்தியாவிற்கு விஜயம் செய்து நாட்டிற்கான பொருளாதார நிவாரணப் உதவுயை முறைப்படுத்தவுள்ளார்.

முன்னதாக, அவர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க 2021 டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment