Advertisment

மே.தொடர்ச்சி மலையில் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏன் செயல்படுத்த வேண்டும்?

2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு, மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளை இறுதி செய்ய கர்நாடக அரசுக்கு பல வரைவு அறிக்கைகளை அனுப்பியது, ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்துவதை நிராகரிப்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
recommendations of Kasturirangan Committee, western ghats, today news, breaking news, ecology explained

Aksheev Thakur 

Advertisment

recommendations of Kasturirangan Committee : டிசம்பர் 4ம் தேதி அன்று மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரி ரங்கனின் அறிக்கை குறித்து காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாறுபாட்டின் அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்தால் அப்பகுதியில் தங்களின் வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார். சுற்றுச்சூழல் ரீதியாக ஏற்கனவே பலவீனமாக இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழிவுக்கு பொம்மையின் எதிர்ப்பு வழிவகுக்கும் என்று கூட்டத்தில் பங்கேற்ற நிபுணர்கள் கூறினார்கள்.

கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரைகள் என்ன?

மேற்குத் தொடர்ச்சி மலையின் 37% பகுதிகள், அதாவது 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முன்மொழிவு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பில் சுமார் 20, 668 சதுர கிலோமீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இந்த பக்தியில் மொத்தம் 1576 கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். சுரங்கம், குவாரிகள், சிவப்பு கேட்டகிரி தொழிற்சாலைகள், அணல் மின் நிலையங்கள் போன்றவற்றை அமைக்க இப்பகுதியில் தடை விதிக்கப்படும். மேலும் காடுகள் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பாக ஏதேனும் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்ட வேண்டும் எனில் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்படும். யுனெஸ்கோ ஹெரிட்டேஜ் டேக் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மகத்தான இயற்கை செல்வத்தை உலகறிய செய்ய உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

39 இடங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை கேரளா (19), கர்நாடகா (10), தமிழ்நாடு (6) மற்றும் மகாராஷ்ட்ராவில் (4) பரவியுள்ளன.

இந்த பகுதிகளின் எல்லைகல் பொதுவாக ஏற்கனவே சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், புலிகள் காப்பகம் மற்றும் வனப்பிரிவுகளின் எல்லைகளாக உள்ளன. இப்பகுதிகளுக்கு உயர்மட்ட பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் வரைபடம் மற்றும் எல்லை நிர்ணயம் அனைத்தும் இந்த பகுதிகளுக்குள் இருப்பதையே குறிக்கிறது. மாநில அரசுகள் இந்த வளர்ச்சியைப் பார்த்து, பிராந்தியத்தின் வளங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பாதுகாக்கவும், பாதுகாக்கவும் மற்றும் மதிப்பிடவும் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். கர்நாடகா மாநிலம் ESA- 46.50 சதவீதத்தில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கர்நாடக அரசு இந்த அறிக்கையை மறுக்க காரணம் என்ன?

அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பட்சத்தில் இப்பகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்படும் என்று கர்நாடக அரசு நம்புகிறது. பரந்த காடுகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று என்ற பெருமையை கர்நாடகா பெற்றுள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பசவராஜ் பொம்மை கூறினார்.

கஸ்தூரி ரங்கனின் அறிக்கை செயற்கைக்கோள் புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம் வேறொன்றாக இருக்கிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விவசாயம் மற்றும் தோட்டப்பயிர் வளர்ப்பு முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இங்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மேலும் ஒரு சட்டம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல என்றும் முதல்வர் கூறினார்.

உத்தர கர்நாடகாவில் உள்ள 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மண்டலத்தின் கீழ் அமைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஆரம்ப காலம் முதலே இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சித்தராமைய்யா தலைமையிலான அரசும் 2014ம் ஆண்டு இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்துவதை எதிர்த்தது. இது எச்.டி.குமாரசாமி தலைமையிலான ஜே.டி.(எஸ்) மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு, மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளை இறுதி செய்ய கர்நாடக அரசுக்கு பல வரைவு அறிக்கைகளை அனுப்பியது, ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்துவதை நிராகரிப்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.

அறிக்கைகளின் பரிந்துரைகளை அமல் செய்யவில்லை எனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும்?

இந்திய அறிவியல் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர், முனைவர். ராமச்சந்திரா இது குறித்து குறிப்பிடும் போது, “தொடர் வெள்ளம், வறட்சி, மண் சரிவு, வெப்பநிலை உயர்வு போன்ற காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டால், இவை ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் பாதுகாக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பலவீனத்தை உருவாக்கும். காடுகளின் மறுசீரமைப்பு மற்றும் புதுப்பிக்க வளங்கள் மற்றும் பணத்தை செலவிடுவதைக் காட்டிலும் பலவீனமான சுற்றுச்சூழலை பாதுகாப்பது விவேகமானது என்று கூறினார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து நன்கு அறிந்தவரும் ஆராய்ச்சியாளருமான ராமச்சந்திரா, கஸ்தூரி ரங்கன் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இயற்கையையும் மக்களையும் பாதிக்கும் தீவிர காலநிலை நிகழ்வுகளால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனாலும், அரசு பாராட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் மதிப்புமிக்க பரிந்துரைகளை செயல்படுத்தாமல் சுவர் எழுப்பி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 22 கோடி மக்களின் நலனில் அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின் பரிந்துரைகளில் 85 சதவீதத்தையாவது ஏற்கும். இல்லையெனில் மக்களுக்கே அது இன்னல்களாக அமைந்துவிடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோசப் ஹூவர் கூறினார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வனநிலத்தின் தற்போதைய நிலை என்ன?

நில ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் அரசு வன நிலத்தை 3,30,186.938 ஹெக்டேரில் இருந்து 2 லட்சம் ஹெக்டேராக குறைக்க திட்டமிட்டுள்ளது. . டிசம்பர் 12, 1996 தேதியிட்ட, கோதவர்ம்ன் திருமுல்பாடு vs மத்திய அரசு மற்றும் பலர் - வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ரிட் மனுவில் 1980 வன (பாதுகாப்பு) சட்டம், 1980-ன் கீழ் எந்தவொரு மாற்றுத் திட்டத்தையும் பரிசீலிப்பதற்காக அகராதியின் பொருள் மற்றும் அரசாங்கப் பதிவேடுகளில் பதிவுசெய்யப்பட்ட காடுகள் என்ற வார்த்தையின் பரந்த வரையறையில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு நியமித்த நிபுணர் குழு, மாநிலத்தில் 10 லட்சம் ஹெக்டேர் நிலத்தை நிர்மாணிக்கப்பட்ட காடுகளாக அடையாளம் கண்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு மாநில நிபுணர் குழு 10 லட்சம் ஹெக்டேர் டீம்டு காடுகளைக் கண்டறிந்தது ஆனால் பல ஆண்டுகளாக அடுத்தடுத்த அரசாங்கத்தின் கீழ் அவற்றின் அளவு சுருக்கப்பட்டது.

வனப் பகுதிகள் முழுவதும் தற்போதுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை மாநில அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று மூத்த வன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். வனங்களில் பெரிய அளவில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தும் அரசியல்வாதிகளின் உத்தரவால் நடைபெற்றது. ஷிவமோகா மற்றும் சிக்மகளூர் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மிக அதிகம். ஆனாலும் அவற்றை அகற்றும் நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Western Ghats
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment