Advertisment

இந்தியாவில் அதிக உயிர்பலி வாங்கும் மின்னல்: தடுக்க என்ன நடவடிக்கை?

மின்னல் ஏன் இன்னும் பல இந்தியர்களைக் கொல்கிறது என்பது குறித்து ஒரு விரிவான தகவல்

author-image
WebDesk
New Update
இந்தியாவில் அதிக உயிர்பலி வாங்கும் மின்னல்: தடுக்க என்ன நடவடிக்கை?

இந்தியாவில் மின்னல் தாக்குதல்கள் குறித்து இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்), இந்தியா வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.எஸ்) மற்றும் உலக ஆரம்ப மின்னல் கணிப்புகளை வெளியிடும் மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில், கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை கிட்டத்தட்ட 1,771 பேர் மின்னல் தாக்குதலில் பலியாகியுள்ளதாக, இந்தியாவில் மின்னல் சம்பவங்கள் குறித்து டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் உத்தரபிரதேசத்தில் 293 பேரும், மத்தியப் பிரதேசம் 248, பீகார் 221, ஒடிசா 200 மற்றும் ஜார்கண்ட் பேரும் சேர்ந்து 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் வட இந்தியாவில் உள்ளனர். இதில் 2018-19 காலகட்டத்தில், 2,800 இறப்புகள் நிகழ்ந்தன. மேலும் இந்த வீழ்ச்சிக்கு CROPC உட்பட பல்வேறு பங்குதாரர்களின் முக்கிய முயற்சிகள் தான் காரணமாக உள்ளது எனவும், மின்னல் தாக்குதலால் நிகழும், இறப்புகளை குறைப்பதற்காக, "மின்னல் நெகிழ்திறன் பிரச்சாரத்தில் ஆக்ரோஷமாக பங்கேற்று வரும் இந்தியா மின்னல் இடர் நிர்வாகத்தை இன்னும் விரிவாக மேற்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளது.

மின்னல் குறித்து அதிக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படாததால் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. இது குறித்து மொபைல் குறுஞ்செய்திகள் மூலம் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், அது எல்லா பிராந்தியங்களிலும் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் இந்திய அரசும் பெரும்பாலான மாநிலங்களும் மின்னலை ஒரு பேரழிவு என்று அறிவிக்கவில்லை. மின்னல் தாக்குதலில், எப்போதும் விலங்குகள்தான் அதிக எண்ணிக்கையில் பலியாகின்றன. இதற்காக அரசு கால்நடை பராமரிப்பு அமைச்சகம் ஒரு விலங்கு பேரழிவு மேலாண்மை திட்டத்தைக் செயல்படுத்தினாலும்,  மின்னல் தாக்குதலில் விலங்குகள் இறப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மின்னல் எவ்வாறு ஏற்படுகிறது?

மின்னல் என்பது மேகத்துக்கும் பூமிக்கும் இடையில் இயற்கையான ‘மிக குறுகிய கால மின்சாரம் ஆகும். ஒரு மேகத்துக்குள்’ அதிக மின்னழுத்தம், ஒரு பிரகாசமான ஃபிளாஷ், ஒலி மற்றும் சில நேரங்களில் இடியுடன் கூடிய நிகழ்வு ஏற்படும். காணக்கூடிய மற்றும் பாதிப்பில்லாத இன்டர் கிளவுட் (மேகம்) அல்லது இன்ட்ரா கிளவுட் (ஐசி) மின்னல் இது கிளவுட் டு கிரவுண்ட் (சிஜி) இதில் ஏற்படும் மின்னல்‘உயர் மின்சார மின்னழுத்தம் மற்றும் மின்சார மின்னோட்டம்’ ஏற்பட்டு மின்னாற்றலுக்கு வழிவகுக்கும் என்பதால் இது தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது

இறப்புகளை எவ்வாறு குறைக்க முடியும்?

ஒவ்வொரு மின்னலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும், கிட்டத்தட்ட ஒத்த புவியியல் இருப்பிடங்களிலும் ஒரு வடிவில் தாக்குகிறது. இடியுடன் கூடிய மின்னல் கல்பைஷாக்கி - நோர்வெஸ்டர்ஸ், கிழக்கு இந்தியாவில் உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பருவமழைக்கு முந்தைய மின்னல் இறப்புகள் பெரும்பாலும் பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்திரபிரதேச மாநில்ங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சி.ஆர்.ஓ.பி.சி படி, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், குழந்தைகள் மற்றும் திறந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஆரம்ப மின்னல் குறித்த எச்சரிக்கை அவசிமானது. அந்த இடங்களில் மின்னல் பாதுகாப்பு சாதனங்களை நிறுவுவது மற்றும் மின்னல் பாதுகாப்பு செயல் திட்டமும் இறப்புகளைத் தடுக்க உதவுகிறது.

மின்னல் தாக்குதல்களை முன்னறிவிக்க எந்த வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது?

CROPC இந்தியா மெட் திணைக்களம் (ஐஎம்டி), பூமி அறிவியல் அமைச்சகம் (எம்ஓஇஎஸ்), செயற்கைக்கோள் கண்காணிப்புகளைப் பயன்படுத்தும் ஆரம்ப மின்னல் கணிப்புகளைப் பரப்புவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் ஏற்படுத்தியுள்ளது, 'டாப்ளர் நெட்வொர்க் மற்றும் பிற ரேடார்கள்', மூலம் 'மின்னல் கண்டறிதல் சென்சார்கள்' மழை வருவதற்கு முன் வரும் கடுமையான இடியுடன் ஏற்படும் பேரழிவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் மின்னல் தாக்குவதற்கு முன்  மின்னல் குறித்து முன்னறிவிப்பை கொடுக்கிறது. மார்ச்-ஏப்ரல்-மே மாத மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில், இடியுடன் கூடிய மழையை முன்னறிவிப்பதற்கு இந்த கருவி உதவியது.

பகுப்பாய்வு என்ன காட்டுகிறது?

ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை இணைக்கும் சங்கமமான சோட்டானக்பூர் பீடபூமியிலிருந்து மின்னல் தாக்குதல்கள் உருவாகின்றன, மேலும் பங்களாதேஷிலிருந்து மேகாலயாவின் பட்கை பீடபூமி வரையும், மற்ற வடகிழக்கு மாநிலங்களையும் இந்த மின்னல் பாதிக்கிறது. தனியான நிற்கும்  உயரமான மரங்களின் கீழ் மக்கள் அறியாமல் நிற்பதால், இந்த மின்னல் தாக்குதளுக்கு ஆளாகின்றனர். சுமார் 78 சதவீத மரணங்கள் இந்த வழியிலேயே நிகழ்ந்தன. இதில் சுமார் 22 சதவீத மக்கள் திறந்தவெளியில் மின்னலால் தாக்கப்பட்டுள்ளனர்.

புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு, நீர்நிலைகளின் குறைவு, கான்கிரீடிசேஷன்ஸ், உயரும் மாசுபாடு மற்றும் ஏரோசோல் அளவுகள் போன்ற சுற்றுச்சூழலின் போன்ற பாதிப்பு காரணமாக மின்னல் தாக்குதல் உச்சத்திற்கு சென்றுள்ளது என இது குறித்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டின் பிற்பகுதியில் - செப்டம்பர் முதல், பெரும்பான்மையான மக்கள் உயரமான மரங்களின் அடியில் குடிசைகளுக்குள் வாழும் சுழலில் உள்ளனர். அவ்வாறு வாழும் மக்கள் தான் மின்னல் தாக்குதலில் அதிகமாக இறந்துள்ளனர். நேரடியாக தாக்கப்பட்டவர்களை விட (34 சதவீதம்) மறைமுகமாக (54 சதவீதம்) தாக்கப்பட்டவர்களே அதிகம். மேலும் பீகார் மாநிலத்தில்தான் மின்னல் தாக்கியதால் அதிக இறப்புகளை சந்தித்துள்ளது. பீகார் மாநிலத்தில், சமவெளிகளில் பரந்த விவசாய நிலங்கள் உள்ளன, குறிப்பாக கங்கைக்கு வடக்கே, மரங்களே இல்லாத பகுதிகள் அதிகம் உள்ளன இதனால் அங்கே உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.

ஒடிசாவின் கதை

நாட்டிலேயே அதிகபட்சமாக ஒடிசாவில் இதுவரை 11.20 லட்சம் மின்னல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது. இதில் 200 பேர் மட்டுமே உயிரிழந்தனர். கடந்த 2019-ம் நடைபெற்ற ஃபானி சூறாவளியின் போது, ஒரு லட்சத்துக்கும் அதிகமாக தீவிர மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டதாக ஒடிசா அரசு கண்டறிந்துள்ளது. இந்த பாதிப்பினால், 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூறாவளி முகாம்களுகளில் தங்கவைக்கப்பட்டனர். மறுபுறம், குஜராத் 35 இறப்புகள் நிகழ்ந்த்து. ஜிகண்டை விட பீகாரில் பாதி மின்னல் தாக்குதல்கள் இருந்தன.

மின்னலின் பொருளாதார தாக்கம் என்ன?

இயற்கை பேரழிவால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,994 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 2015 ல் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை ரூ .4 லட்சமாக உயர்த்தியது. மேலும் மொத்த இழப்பீட்டை சுமார் 359 கோடி ரூபாயாக உயாந்துள்ளத. மேலும் மின்னல் தாக்குதலில் விலங்குகளின் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அறிக்கையின் பரிந்துரைகள் யாவை?

மின்னலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஏராளமானோர் மின்னலை மாநில பேரழிவு என்று அறிவித்துள்ளனர். ஆனாலும் இது குறித்து இது உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்னல் தாக்குதல் பேரழிவு அல்ல என்பதால், மின்னல் ஆபத்து மேலாண்மை தேசிய கொள்கை உத்தரவுகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் தேவையான கவனத்தைப் பெறவில்லை," என்றும், இது விரைவில் கவனிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,

இந்நிலையில், மாநிலங்களுக்கு மின்னல் செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை என்.டி.எம்.ஏ வெளியிட்டுள்ளது, ஆனால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழ்வதாலும், ‘விஞ்ஞான மற்றும் கவனம் செலுத்திய சமூக மைய அணுகுமுறை’ மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை என்பதைக் அறிவுறுத்துகிறது.

மேலும் தேசிய மின்னல் பின்னடைவு திட்டத்தின் தேவை இருப்பதாக கூறிய கர்னல் ஸ்ரீவாஸ்தவா, மின்னல் வரைபடம் மின்னல் அதிர்வெண், தற்போதைய தீவிரம், ஆற்றல் உள்ளடக்கம், அதிக வெப்பநிலை மற்றும் பிற பாதகமான தாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமான ஆபத்தை அடையாளம் காண்பதில் ஒரு முக்கிய திருப்புமுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான மேப்பிங் மூலம், ஒரு காலநிலைவியலை நிறுவ முடியும். இது இந்தியாவுக்கான மின்னல் இடர் மேலாண்மை திட்டத்திற்கு அடிப்படையாக அமைகிறது, ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Lightning
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment