Advertisment

வெட்டுக்கிளிகள் அபாயம்: விவசாயம் என்ன ஆகும்?

கொரோனா பாதிப்பு, இந்திய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய பயிர்களை, வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து நாசம் செய்துகொண்டிக்கிறது. இதன்காரணமாக, விவசாயம் என்ன ஆகுமோ என்று விவசாயிகள் கவலைகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajasthan, punjab, locust attack, agriculture,

பார்த்தசாரதி பிஸ்வாஸ்

Advertisment

கொரோனா பாதிப்பு, இந்திய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய பயிர்களை, வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து நாசம் செய்துகொண்டிக்கிறது. இதன்காரணமாக, விவசாயம் என்ன ஆகுமோ என்று விவசாயிகள் கவலைகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, ராஜஸ்தான் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. இது அசாதாரணமானது. மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலிருந்தும் வெட்டுகிளிகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் காணப்பட்டன.

வெட்டுக்கிளிகள் என்றால் என்ன? இந்தியாவில் அவை எப்போதிலிருந்து காணப்படுகின்றன?

பாலைவன வெட்டுக்கிளியின் அறிவியல் பெயர் ஸ்கிஸ்டோர்கா கிரேகரியா. இது ஒரு சிறிய கொம்பு கொண்ட வெட்டுக்கிளி. அவை தனிமையில் இருக்கும்போது, அவற்றின் இனப்பெருக்கம் வேகமாக அதிகரிக்கும். அப்போது, வெட்டுக்கிளிகளின் நடத்தை மாற்றத்திற்கு உட்படுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை பயணிக்கக்கூடிய பிரமாண்டமான கூட்டத்தை உருவாக்கி, போகிற வழிகளில், ஒவ்வொரு துளி பசுமையை உண்டு அவைகள் கிரேகாரியஸ் கட்டத்திற்கு நுழைகின்றன. இந்த பூச்சிகள் பல வகையான பயிர்களை உணவாக உண்ணுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தப்படாவிட்டால், வெட்டுக்கிளி கூட்டம் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பையே அச்சுறுத்த முடியும். தற்போது ஆப்பிரிக்காவில், எத்தியோப்பியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகள் கடந்த 25 ஆண்டுகளில் மிக மோசமான வெட்டுக்கிளி தாக்குதல்களில் ஒன்றை சந்திக்கின்றன.

இந்தியாவில், வெட்டுக்கிளிகள் பொதுவாக பாகிஸ்தான் எல்லையில் ஜூலை-அக்டோபர் மாதங்களில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு மேற்கு ராஜஸ்தான் பகுதிகளிலும் வடக்கு குஜராத் பகுதிகளிலும் வளர்ந்து வரும் ரபி பருவ பயிர்களுக்கு வெட்டுக்கிளி கூட்டம் சேதம் விளைவித்தன. 1997 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் வெட்டுக்கிளி திரள் இது.

இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளின் சிறிய அளவிலான திரள் ஏப்ரல் 11-ம் தேதி முதலில் காணப்பட்டதாக வேளான்மை அமைச்சகத்தின் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் விஞ்ஞானிகளால், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மற்றும் ஜெய்சால்மர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் அறிவிக்கப்பட்டன.

publive-image

நகர்ப்புறங்களில் வெட்டுக்கிளிகள் காணப்படுவது ஏன்?

ஜெய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், மொரேனா மற்றும் ஷியோபூரிலும் வரலாற்று ரீதியாக தொடர்பு இல்லாத பகுதிகளில் வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி, நாக்பூர் மற்றும் வார்தாவிலும் வித்தியாசமான வெட்டுக்கிளிகள் கூட்டம் காணப்படுகின்றன.

வயல்களில் பயிர்கள் இல்லாததால், வெட்டுக்கிளிகள் பசுமை போர்வையால் மாநிலங்கள் முழுவதும் ஈர்க்கப்பட்டு நகர்ந்துள்ளன என்று வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் துணை இயக்குநர் கே எல் குர்ஜார் தெரிவித்துள்ளார். வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜெய்பூர் செல்வதற்கு அதிவேக காற்று உதவியது என்று குர்ஜார் கூறுகிறார். தற்போது ராஜஸ்தானில் 3 முதல் 4 வரை வெட்டுக்கிளிகள் கூட்டம் உள்ளன. 2 அல்லது 3 வெட்டுக்கிளிகள் கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ளன. அங்கிருந்து ஒரு சிறிய குழு மகாராஷ்டிராவுக்கு குடிபெயர்ந்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் அல்ல என்று குர்ஜார் கூறினார்.

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூத்த வெட்டுக்கிளி தாக்குதல் முன்னறிவிப்பாளர் கீத் கிரெஸ்மேன், வெட்டுக்கிளிகள் உணவைத் தேடி நகரத் தொடங்கியுள்ளன என்று கூறினார். “பாகிஸ்தானில் இருந்து வசந்தகால வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தானுக்கு வரத் தொடங்கின. இது மழைக்காலத்திற்கு முன்பான காலம் என்பதால், அவை வறட்சியான நிலையைக் கண்டன. அதனால், அவைகள், கிழக்கு ராஜஸ்தான் நோக்கி உணவு, தங்குமிடம் அவற்றுக்கான பச்சை தாவரங்களைத் தேடி செல்கின்றன. அங்கு அவைகள் முதிர்ச்சியடைந்து பின்னர் 5 வாரங்களில் பருவமழை தொடங்குவதால் அவை அங்கே முட்டையிடும்” என்று குர்ஜார் கூறினார்.

வெட்டுகிளிகளின் முன்கூட்டிய வருகை எதைக் குறிக்கிறது?

2018 ஆம் ஆண்டில் முறையே ஓமன் மற்றும் யேமன் நாடுகளைத் தாக்கிய மெகுனு மற்றும் லூபன் சூறாவளி புயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளைக் காணலாம். இந்த புயல்கள் பெரிய பாலைவனப் பகுதிகளை ஏரிகளாக மாற்றி 2019 வரை தொடர்ந்து வெட்டுக்கிளி இனப்பெருக்கத்திற்கு உதவின. கிழக்கு ஆபிரிக்காவில் பயிர்களைத் தாக்கும் வெட்டுக்கிளி கூட்டம் நவம்பர் முதல் அதிக அளவிலான இனப்பெருக்கத்தை அடைந்தது. இது 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தெற்கு ஈரான் மற்றும் பாக்கிஸ்தானில் பெருகியது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கிழக்கு ஆபிரிக்காவில் பலத்த மழை பெய்து மேலும் இனப்பெருக்கம் செய்ய உதவியது.

இந்தியாவில் பயிர்களுக்கு என்ன ஆகும்?

தற்போது, விவசாயிகள் ஏற்கனவே தங்கள் ரபி பருவ பயிரை அறுவடை செய்துள்ளதால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மகாராஷ்டிராவில் ஆரஞ்சு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், குர்ஜார் கூறியது போல், மகாராஷ்டிராவில் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது எளிதானது.

தற்போது இருக்கும் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்தவுடன் பெரிய பிரச்சினை வரும். ஒரு வயது வந்த பெண் வெட்டுக்கிளி தனது 3 மாத வாழ்க்கைச் சுழற்சியில் 80-90 முட்டைகளை 3 முறை இடுகிறது. அவற்றை கட்டுபடுத்தாவிட்டால், வெட்டுக்கிளிகள் கூட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 40-80 மில்லியன் வெட்டுக்கிளிகளாக அதிவேகத்தில் வளரக்கூடும் என்று குர்ஜார் உள்ளிட்டோர் கூறுகின்றனர். வெட்டுக்கிளிகள் பருவமழை தொடங்கிய பின்னர் முட்டையிடத் தொடங்கி, இன்னும் 2 மாதங்களுக்கு இனப்பெருக்கத்தை தொடரும். கார் பருவ பயிரின் வளர்ச்சிக் கட்டத்தில் வெட்டுக்கிளிகளின் புதிய தலைமுறை அதிகரிக்கும்.

publive-image

இந்த மாத தொடக்கத்தில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வெட்டுக்கிளிகள் இரவில் தங்கும் மரங்கள் போன்ற இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை கட்டுப்படுத்தும். இன்றுவரை, வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு ராஜஸ்தானில் 21,675 ஹெக்டேருக்கு மேல் பூச்சிக்கொல்லி தெளிப்பை மேற்கொண்டுள்ளது. இந்தியாவும் இங்கிலாந்திடம் 60 சிறப்பு பூச்சிக்கொல்லி தெளிப்பான்களை ஆர்டர் செய்துள்ளது. இதுபோன்ற 50 இயந்திரங்கள் நாட்டில் ஏற்கனவே உள்ளன என்று குர்ஜார் கூறினார். மேலும், அவர் “வெட்டுக்கிளிகள் தங்கும் இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Maharashtra Rajasthan Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment