Advertisment

ஓலா ஏன் மாபெரும் இரு சக்கர வாகன தொழிற்சாலையைத் தமிழகத்தில் தொடங்குகிறது?

Ola is building a mega two wheeler factory in Krishnagiri மின்சாரம் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் உலகளாவிய உற்பத்தி மையமாக இது செயல்படும் என நிறுவனம் கூறுகிறது.

author-image
WebDesk
New Update
ஓலா ஏன் மாபெரும் இரு சக்கர வாகன தொழிற்சாலையைத் தமிழகத்தில் தொடங்குகிறது?

Why Ola is building a mega two wheeler factory in Tamil Nadu Tamil News : தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன மெகா தொழிற்சாலையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக கேப் ஒருங்கிணைப்பாளர் ஓலா அறிவித்துள்ளது.

Advertisment

2022-க்குள் இந்த ‘ஓலா ஃபியூச்சர் ஃபாக்டரி’ செயல்பாட்டுக்கு வரும்.

இந்த ஓலா தொழிற்சாலை எவ்வளவு பெரியது?

இந்த தொழிற்சாலையில் மொத்தம் 500 ஏக்கர் பரப்பளவில், 43 ஏக்கர் பரப்பளவில் ஒரு மெகா  ப்லாக் அமைப்பு உள்ளது.

ஓலாவின் அறிக்கையின்படி, அதன் முழு கொள்ளளவிலும், ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு ஸ்கூட்டரை வெளியேற்றும். இதன் விளைவாக ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். இது தற்போதைய உலகளாவிய இரு சக்கர வாகன திறனில் 20 சதவீதமாக இருக்கும்.

இதை மெகா தொழிற்சாலை முதல் கட்டத்தில் ஆண்டுக்கு 2 மில்லியன் யூனிட் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆசியா பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சர்வதேச சந்தைகள் உட்பட மின்சாரம் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் உலகளாவிய உற்பத்தி மையமாக இது செயல்படும் என நிறுவனம் கூறுகிறது.

Why ola is building a mega two wheeler factory in tamil nadu Tamil News The factory has a total area of 500 acre with a megablock stucture spread over 43 acres

ஓலா, இந்த இடத்திலுள்ள மரங்களைப் பாதுகாத்து புது செடிகளை நடவு செய்வதன் மூலம் இப்பகுதியில் உள்ள பச்சை நிற பெல்ட்டைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் என்று கூறுகிறது. மேலும், அந்த இடத்திற்குள் ஒரு பெரிய வனப்பகுதியைக் கொண்டிருக்கவும், தொழிற்சாலைக்குள் தோண்டிய மண் மற்றும் பாறைகளை மீண்டும் பயன்படுத்தவும் ஓலா திட்டமிட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலை அமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

2020 டிசம்பரில் தமிழக அரசுடன் ரூ.2,400 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஓலா அறிவித்தது. இந்த ஜனவரி மாதத்திலேயே நிலம் கையகப்படுத்தல் முடிந்தது. "அடுத்த சில மாதங்களில் தனது தொழிற்சாலையை செயல்படுத்துவதற்கான திட்டம்" என்றும், திட்டத்தை முடிக்க சுமார் "10 மில்லியன் உழைக்கும் நேரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன" என்றும் ஓலா அறிக்கை ஒன்று கூறுகிறது. அதன் முதல் கட்டம் “வரும் மாதங்களில்” செயல்படும் என்று நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்?

இந்தத் தொழிற்சாலை மூலம் 10,000 வேலைவாய்ப்புகளை ஓலா உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இந்தத் தொழிற்சாலை, தொழில் 4.0 கொள்கைகளை இணைக்கும். மேலும், ஓலாவின் சொந்த தனியுரிம AI இஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அடுக்குகளால் இயக்கப்படும்" என்று ஓலா கூறுகிறது.

Why ola is building a mega two wheeler factory in tamil nadu Tamil News Ola is maintaining that it will ensure conservation of the green belt in the area by preserving and transplanting the trees on site

இந்த தொழிற்சாலை நாட்டின் தானியங்கி முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5,000 ரோபோக்கள் மற்றும் தானியங்கி வழிகாட்டப்பட்ட வாகனங்கள் அதன் முழு திறனுக்கும் செயல்பட்டவுடன் பயன்பாட்டில் உள்ளன. "நிறுவனம் ஏற்கெனவே உலகளாவிய பார்ட்னர்களையும் சப்ளையர்களையும் கொண்டுவந்துள்ளது. மேலும், தனது தொழிற்சாலையைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையாகக் கருதப்படுகிறது மற்றும் வரும் வரும் மாதங்களில் செயல்படும்" என்று நிறுவனம் மேலும் கூறியது.

தொழிற்சாலையில் ஓலா என்ன செய்யும்?

ஓலா தனது வரவிருக்கும் மாதங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதற்கு மிக அருகில் இருப்பதாகக் கூறுகிறது. ஸ்கூட்டரில் "நீக்கக்கூடிய பேட்டரி, உயர் செயல்திறன் மற்றும் வரம்பு" இருக்கும். மேலும், அதன் வடிவமைப்பிற்காக ஏற்கெனவே விருதுகளை வென்றுள்ளது என்று நிறுவனம் கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Ola Cabs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment