Advertisment

டைனோசர் எலும்புகளுக்கு விலை மில்லியன் டாலர்: ஏன் இந்த மோகம்?

Why million dollars for Dinosaur Fossils மேலும், 155 மில்லியன் முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த உயிரினத்தின் எலும்புக்கூட்டின் மதிப்பு 3.7 மில்லியன் டாலர்.

author-image
WebDesk
New Update
Why people want to pay million dollars for Dinosaur Fossils Tamil News

Dinosaur Fossils

Dinosaur Fossils Tamil News : 2020-ம் ஆண்டில், நேரடியாக ஏலத்தில் பொருள்களை விற்பதற்கு பதிலாக விர்ச்சுவல் வழியே விற்கக் கட்டாயப்படுத்தப்பட்ட ஆண்டாக ஓர் அசாதாரண புதிய பதிவைச் செய்தது. கிறிஸ்டியின் ஓர் கண்காட்சி ஏலத்தில், 31.8 மில்லியனைப் பெற்றது. அது அதிக மதிப்புள்ள கலைப்படைப்பிற்காக அல்ல; மாறாக, ஒரு டைனோசரின் நன்கு பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூட்டிற்காக என்பதுதான் வியப்பின் உச்சம்.

Advertisment

100 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிரட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த கிட்டத்தட்ட 40 அடி உயர டைரனோசொரஸ் ரெக்ஸின் (Tyrannosaurus rex) எலும்புக்கூடுகளின் மதிப்பு 8 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கிறது. இது ஸ்டானின் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டைனோசர் புதைபடிவத்திற்கான 1997-ம் ஆண்டு சோதேபி ஏலத்தின் 8.4 மில்லியன் விற்பனை சாதனையையும் முறியடித்தது.

டைனோசர் புதைபடிவங்களை யார் வாங்க விரும்புகிறார்கள்? ஏன், பல வல்லுநர்கள் இந்த போக்கு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர்?

டைனோசர் புதைபடிவங்கள் அடிக்கடி ஏலத்திற்குச் செல்கிறதா?

2020-ம் ஆண்டு, அக்டோபர் 6-ம் தேதி நியூயார்க்கில் கிறிஸ்டியின் 20-ம் நூற்றாண்டு மாலை விற்பனையில், ஸ்டான் டி. ரெக்ஸ் ஏலத்தில் சாதனை படைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு, பாரிஸின் ஏல மாளிகையான பினோசே எட் கிகெல்லோவில் (Binoche et Giquello), 10 மீட்டர் நீளமுள்ள அலோசொரஸின் அரிய எலும்புக்கூடு விற்கப்பட்டது. இந்த எலும்புக்கூடு ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு பெரிய மாமிச டைனோசருடையது. மேலும், 155 மில்லியன் முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த உயிரினத்தின் எலும்புக்கூட்டின் மதிப்பு 3.7 மில்லியன் டாலர்.

முன்னதாக ஜூன் மாதத்தில், அமெரிக்காவின் வயோமிங்கில் 2013 மற்றும் 2015-க்கு இடையில் தோண்டப்பட்ட பெயரிடப்படாத டைனோசரின் 70 சதவிகித 150 மில்லியன் பழமையான புதைபடிவம் ஒரு தனியார் சேகரிப்பாளருக்கு 2.36 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

ஸ்டான் டி.ரெக்ஸ், ஏல சுற்றுக்குள் எப்படி வந்தது?

1987-ம் ஆண்டில் 13 அடி உயரமும் 40 அடி நீளமும் கொண்ட இந்த புதைபடிவம் ஸ்டான் சாக்ரீசன் என்ற அமெச்சூர் பழங்கால ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, தெற்கு டகோட்டாவின் ஹில் சிட்டியில் உள்ள தனியார் பிளாக் ஹில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டது. உயிருடன் இருக்கும்போது கிட்டத்தட்ட 8 டன் எடையுள்ளதாக இருக்கும் என கணக்கிடப்பட்ட அந்த டைனோசரின் எலும்புக்கூடு, டி. ரெக்ஸின் மிகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், அதன் பல உயர்தர இதர பாகங்கள் உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன.

ஓர் பிரச்சனையின் விளைவாகவே இந்த புதைபடிவம் சந்தைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில், பிளாக் ஹில்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பங்குதாரரான நீல் லார்சன், அந்த நிறுவனம் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் லார்சனுக்கு நிறுவனத்தில் தனது பங்கிற்கு பணம் செலுத்த, விற்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விற்பனையைப் பற்றி பாலியான்டாலஜிஸ்ட் ஏன் கவலைப்படுகிறார்கள்?

டைனோசர் புதைபடிவங்களின் வணிக விற்பனை மற்றும் அதிகரிக்கும் விலைகள், புதைபடிவங்களை பாதுகாப்பதற்கு பதிலாக திறந்த சந்தையில் நன்கு விற்க மட்டுமே ஊக்குவிக்கும் என்று பாலியான்டாலஜிஸ்ட் அல்லது பழங்காலவியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அவர்கள் வழங்கும் அதிக விலைகளுடன் பொருந்தாமல் போகக்கூடும் என்பதால், நல்ல புதைபடிவங்கள் பெரும்பாலானவை தனியார் சேகரிப்பில் நுழைகின்றன என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சொசைட்டி ஆஃப் வெர்டிபிரேட் பாலியான்டாலஜி, முதுகெலும்பு மிச்சங்களை பாதுகாக்க உறுதிபூண்டுள்ள பாலியோண்டாலஜிஸ்டுகள், மாணவர்கள், கலைஞர்கள் ஆகியோரின் அமைப்பு, ஸ்டானுக்கான ஏலதாரர்களை பொது ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டு கிறிஸ்டிக்கு எழுதியது.

புதைபடிவ விற்பனை எந்த சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது?

அமெரிக்காவில், கூட்டாட்சி நிலத்தில் காணப்படும் புதைபடிவ எலும்புகள் யாவும் பொதுச் சொத்துக்கள்தான். மேலும் அவை அனுமதியுடன் ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே சேகரிக்க முடியும். இவை பொது நம்பிக்கை மற்றும் அங்கீகாரம் பெற்ற அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட களஞ்சியங்களுக்கு செல்கின்றன. இருப்பினும், தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்களை வாங்கி விற்கலாம். கனடா, மங்கோலியா, சீனா மற்றும் அர்ஜென்டினாவில், கறுப்பு சந்தைப்படுத்தல் வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தாலும், புதைபடிவங்களை ஏற்றுமதி செய்ய முடியாது.

இந்தியாவிலும், கடுமையான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் இல்லாத நிலையில் நாட்டின் வளமான புதைபடிவ பாரம்பரியம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்று பழங்கால ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

டைனோசர் புதைபடிவங்கள் எவ்வளவு பிரபலமானவை?

கிறிஸ்டியின் ஸ்டான், இயற்கை வரலாற்று ஏலத்தை விட சமகால கலை விற்பனையில் ஏலம் எடுத்தது என்பது புதைபடிவங்களின் சேகரிப்பாளரின் தளத்தின் குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது. நிக்கோலஸ் கேஜ், ரஸ்ஸல் க்ரோவ் மற்றும் லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் டைனோசர் புதைபடிவங்களை வாங்குவதாக அறியப்பட்டாலும், சீனா, ஹாங்காங், தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பரந்த சேகரிப்பாளர்கள் உள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Dinosaur Fossils Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment