Advertisment

இனிமேல் போன் நம்பருக்கு முன்னால் “0” அவசியம்! காரணம் என்ன தெரியுமா?

உதாரணமாக 2 பி.எஸ்.என்.எல்க்கும் எம்.டி.என்.எல்க்கும் வழங்கப்பட்டது. 4 ஏர்டெலுக்கும், 35 மற்றும் 796 ரிலையன்ஸ் ஜியோவிற்கும் வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Why prefixing 0 will be mandatory for fixed-line to mobile calls from Jan 15

Pranav Mukul : ஜனவரி 15ம் தேதி முதல் ஃபிக்ஸ்ட் லைன் அல்லது லேண்ட் லைன்களில் இருந்து அலைபேசிகளுக்கு அழைக்கும் போது அலைபேசி எண்களுக்கு முன்னால் ஜீரோ இணைத்து தொடர்பு கொள்வது கட்டாயமாகிறது என்று கூறியுள்ளது தொலைத்தொடர்பு துறை. இந்த துறையின் கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஃபிக்ஸ்ட் மற்றும் அலைபேசிகளுக்கான எண்களை வழங்குவதில் இருக்கும் சிக்கல்களை களைய இந்த முறை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

ஜனவரி 15ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வர உள்ளது. 0 - இன்றி அழைப்புகளை விடுக்கும் நபர்களுக்கு 0-வை சேர்க்குமாறு அறிவிப்பு வழங்கப்படும். இண்டெர் சர்க்கிள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வருவதற்கு முன்பு வெளி வட்டங்களில் இருக்கும் நபர்களுக்கு 0 பதிவிட்டு பின்னர் அழைப்பு விடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனாலும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து மொபைல் - மொபைல் அழைப்புகளுக்கான முறையில் மாற்றம் ஏதும் இருக்காது.

மீண்டும் ”0” மறு அறிமுகம் செய்ய காரணம் என்ன?

இந்தியாவில் 10 இலக்க எண்கள் மொபைல் திட்டங்கள் உள்ளன. மேலும் 0 மற்றும் 1ல் துவங்கும் எண்களுக்கு சிறப்பு நோக்கங்கள் இருக்கின்ற காரணத்தால், கோட்பாட்டளவில் மொத்தம் 800 கோடி எண்கள் வழங்க முடியும். இது வரை இந்தியாவில் 9ம் எண்ணில் இருந்து துவங்குமாறு தான் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8, 7, 6 காம்பினேசன்களிலும் எண்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சேர்க்கைகளுடன் சேர்த்து 115 கோடி செல்போன் எண்கள் கிடைக்கின்றன. எண் 9-ல் துவங்கும் அனைத்து எண்களும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. பிற எண்களில் தொடங்கி லேண்ட்லைன் தொலைபேசிகளுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திட்டங்களுடன் ஒன்றுடன் ஒன்று ஓவர்லேப் ஆகும் பிரச்சனைகளும் உள்ளது. எனவே, போதுமான எண்ணிக்கை சேர்க்கைகளை உருவாக்க, “0” என்ற முன்னொட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் மொபைல் எண்களின் சந்தாவுக்கு கூடுதலாக, சிம் கார்டுகளும் இயந்திரத்திலிருந்து இயந்திரத்திற்கு தொடர்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

To read this article in English

ஸ்மார்ட் மீட்டர் போன்ற பயன்பாட்டு வழக்குகள் இதில் அடங்கும், இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 13 இலக்க எண்ணை முறையை ஒதுக்கியுள்ளது. 10 இலக்க மொபைல் எண்ணைத் தொடரைப் பயன்படுத்தி அனைத்து சிம் அடிப்படையிலான M2M இணைப்புகளையும் M2M தகவல்தொடர்புக்காக DoT ஆல் ஒதுக்கப்பட்ட 13 இலக்க எண் தொடருக்கு விரைவாக மாற்ற வேண்டும் என்றும் TRAI பரிந்துரைத்தது.

இதனால் ஏற்பட இருக்கும் தாக்கம் என்ன?

ஆகஸ்ட் 31, 2020 நிலவரப்படி இந்தியாவில் 114.79 கோடி வயர்லெஸ் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். ஒரு பக்கம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க மறுபுறம், லேண்ட்லைன் சந்தாக்கள் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. சில எண் தொடர்கள் பிரத்யேகமாக லேண்ட்லைன் ஆப்ரேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக 2 பி.எஸ்.என்.எல்க்கும் எம்.டி.என்.எல்க்கும் வழங்கப்பட்டது. 4 ஏர்டெலுக்கும், 35 மற்றும் 796 ரிலையன்ஸ் ஜியோவிற்கும் வழங்கப்பட்டது. 0 வை இணைப்பது மூலம் லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன்களுக்கு இடையேயான ஓவர்லேப் குறைக்கப்படுவது மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கு வழங்கப்படும் எண்ணிக்கை மூலங்களும் வருங்காலத்தில் அதிகரிக்கும். இந்த பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட்டால் 253.9 கோடி எண்கள் உருவாக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment