Advertisment

இந்தி திணிப்பு போராட்டக்களமாக புதுச்சேரி ஜிப்மர் மாறியது ஏன்?

புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 எம்எல்ஏக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிப்மர் இந்தி திணிப்பு போராட்டக்களமாக மாறியது எப்படி?

author-image
WebDesk
New Update
இந்தி திணிப்பு போராட்டக்களமாக புதுச்சேரி ஜிப்மர் மாறியது ஏன்?

ஜிப்மர் மருத்துவமனை மே 9 அன்று இந்தி திணிப்பு போராட்டத்திற்கான ஹாட்ஸ்பாடாக உருவெடுத்தது. அண்மையில், மருத்துவமனை அதிகாரப்பூர்வ கலந்துரையாடலுக்கு ஹிந்தி மொழியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சுற்றறிக்கையை திரும்பப்பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 4 எம்எல்ஏக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றறிக்கையில் என்ன சொல்கிறது?

ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்ட 4 அறிக்கைகளில், 2 சுற்றறிக்கை சில பிரிவினரை துண்டிவிட்டுள்ளதாக ஜிப்மர் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்

பெயர் குறிப்பிட விரும்பாத ஜிப்மர் மூத்த அதிகாரி கூறியதாவது, சுற்றறிக்கைகளை வெளியிடும் முடிவானது, உத்தியோகபூர்வ மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிவுரை பேரில் எடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு விசிட் வருவதற்கு முன்பு இத்தகைய வழிகாட்டுதலை வெளியிட நிறுவனத்தை கேட்டுக்கொண்டனர்.

சுற்றறிக்கையில், அலுவல் மொழிச் சட்டம், 1963 இன் பிரிவு 3(3)ஐ நிறுவனம் குறிப்பிடுகிறது. பிரிவு 3(3) என்பது பொது உத்தரவுகள், அறிவிப்புகள், தீர்மானங்கள், விதிகள், நிர்வாக மற்றும் பிற அறிக்கைகள், பத்திரிகை அறிக்கைகள், ஒப்பந்தங்கள், உரிமங்கள், அனுமதிகள், டெண்டர்களின் அறிவிப்புகள், டெண்டர்களின் படிவங்கள் ஆகியவை இருமொழி வடிவத்தில், அதாவது, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும்.

அதற்கு அத்தகைய ஆவணங்களில் கையொப்பமிடும் அதிகாரியும், சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் இருமொழி வடிவில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆவணங்கள், வெளியீட்டிற்கு முன் மொழிபெயர்ப்பிற்காக இந்தி பிரிவுக்கு அனுப்பப்பட வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, இந்த சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிந்தவரை இந்தி மொழி

மற்றொரு சுற்றறிக்கையில், மத்திய அரசு அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பதிவு/சேவை புத்தகங்கள்/சேவை கணக்குகளில் உள்ள பொருள் மற்றும் தலைப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிக் குழு வலியுறுத்துகிறது. இனி வரும் காலங்களில் அனைத்துப் பதிவு/சேவைப் புத்தகங்கள்/சேவைக் கணக்குகள் முடிந்தவரை இந்தியில் மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவு 3 (3), பணியாளர்களைப் பற்றிய அனைத்து உத்தரவுகள், அறிவுறுத்தல்கள், கடிதங்கள், குறிப்புகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் போன்றவற்றுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டமும், அரசியலும்

சுற்றறிக்கையை திரும்ப பெறக் கோரி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான ஆர்.சிவா திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரியில் கணிசமான செல்வாக்கையும் அதிகாரத்தையும் கொண்டிருந்த காங்கிரஸின் கூட்டாளியாக இருந்து வந்த திமுகவுக்கு, இந்த போராட்டம் முக்கியத்தவம் வாய்ந்ததாக மாறியது.

பிப்ரவரி 2021 இல் நம்பிக்கைத் தீர்மானத்தில் தோல்வியடைந்த பிறகு, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து, ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 1 திமுக எம்எல்ஏ ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

டெல்லி அதிகாரத்தையும், அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசாங்கத்தை கலைத்துவிட்டதாக பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக உள்ளார். பதவி ஏற்ற நாள் முதலே, பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றிபெற்ற பிறகு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் பாஜகவின் கோரிக்கைகளுக்கு என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான என் ரங்கசாமி இணங்காதபோதும், தமிழிசை கருத்து தெரிவித்து ஏதெனும் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது அளவில் இருக்கிறார்.

உள்ளூர் வாசிகளின் குறைகள்

நீண்ட காலமாகவே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், பல உள்ளூர் அமைப்புகளும் புதுச்சேரியில் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. இந்த பிரச்சினையை, ஜிப்மர் போராட்டத்திலும் எம்எல்ஏ சிவா கையில் எடுத்தார். அவர் ஜிப்மரில் சில உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குறித்து பேசினார்

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பெரும்பாலான மருத்துவமனை ஊழியர்கள் பிற மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டினார்.

மேலும், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும், உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் பணி நியமனத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்தி திணிப்பு கிடையாது

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஜிப்மரில் இந்தி திணிப்பு கிடையாது. உள்ளூர் மொழியாக தமிழ் மொழி பிரதானப் படுத்தப்படுகிறது. யாரும் இதை அரசியலாக்க வேண்டாம். ஜிப்மர் தொடர்ந்து மருத்துவ சேவை செய்ய எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், ஜிம்பர் மருத்துவமனைக்கு சென்ற தமிழிசை, அங்கிருந்த மருத்துவமனையில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment