Advertisment

நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசு கூற காரணம் என்ன?

நாம் மாவட்ட அல்லது மாநில அளவில் உற்று நோக்கினால் சில முக்கியமான பிரச்சனைகள் அங்கே நிலவுவதை உணர முடியும். முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் ஆனால் நாம் நம்முடைய பாதுகாப்பை குறைத்துக் கொள்ளும் சரியான நேரமாக இது இருக்காது என்று கொரோனா தடுப்பு நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால் கூறினார்.

author-image
WebDesk
New Update
Covid-19 situation ‘optimistic’

Kaunain Sheriff M 

Advertisment

country’s Covid-19 situation ‘optimistic’ : ஓமிக்ரான் மாறுபாட்டால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மத்தியில் இந்தியா உள்ளது. நாட்டில் உருவாகும் ஒட்டுமொத்த தொற்றுநோய் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக அரசாங்கம் வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், வைரஸால் ஏற்பட இருக்கும் தனித்துவமான சவால்கள் மற்றும் சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற மனநிறைவுடன் இருப்ப்பதற்கு எதிராகவும் அது எச்சரிக்கை செய்தது.

நல்ல செய்தி

முதலாவதாக, நாட்டில் பதிவான வழக்குகளில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை லட்சத்திற்கும் குறைவானவையே. இரண்டாவதாக நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் பாசிட்டிவ் ரேட்டும் குறைந்துள்ளது தொற்று பரவலின் குறைவை சுட்டிக்காட்டுகிறது. முக்கியமாக கடந்த மூன்று நாட்களில் பாசிட்டிவ் விகிதமானது 5%க்கும் குறைவாக உள்ளது. ஐந்து சதவீதத்திற்கு மேல் பாசிட்டிவ் விகிதத்தைக் கொண்டிருக்கும் மாவட்டங்களில் உள்ளூர் கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் மீண்டும் தீவிரப்படுத்துமாறு அரசு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 443 மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதமானது 5%க்கும் குறைவாகவே உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 268 மாவட்டங்களில் மட்டுமே இந்த விகிதம் 5%க்கும் குறைவாக இருந்தது.

141 மாவட்டங்கள் மட்டுமே இப்போது 10 சதவீதத்திற்கு மேல் பாசிட்டிவ் விகிதங்களை பதிவு செய்கின்றன. முந்தைய வாரத்தில், 297 மாவட்டங்கள் 10 சதவீதத்திற்கு மேல் பாசிட்டி விகிதம் பதிவு செய்யப்பட்டது. 21 மாநிலங்கள் தினசரி 10,000க்கும் குறைவான நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக பதிவு செய்துள்ளது. 11 மாநிலங்கள் 10,000 முதல் 50,000 வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இது பெரும்பாலான மாநிலங்களில் குறைவான செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டுகிறது. இது கடுமையான கோவிட்-19 நோயால் அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம் ஏதும் தற்போது இல்லை என்று அர்த்தம்.

அவ்வளவு நல்ல செய்தி இல்லை இது

கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா தொற்று 50 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த மாநிலங்களிலும் கூட கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதமானது 10% ஆக உள்ளது.

கிட்டத்தட்ட 40 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வாராந்திர வீதம் அதிகரித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10% பாசிட்டிவ் விகிதம் பதிவாகி வருகிறது. மொத்தமாக நிலைமை நம்பிக்கை அளிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் நாம் மாவட்ட அல்லது மாநில அளவில் உற்று நோக்கினால் சில முக்கியமான பிரச்சனைகள் அங்கே நிலவுவதை உணர முடியும். முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் ஆனால் நாம் நம்முடைய பாதுகாப்பை குறைத்துக் கொள்ளும் சரியான நேரமாக இது இருக்காது என்று கொரோனா தடுப்பு நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால் கூறினார்.

கவலை அளிப்பது என்ன?

கொரோனா வைரஸ் குறித்த புரிதல் இன்னும் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே நீடிப்பதால், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று இருப்பதை மக்கள் உணர வேண்டும். எனவே, பாசிட்டிவிட்டி விகிதம், கட்டுப்பாடு, கண்காணிப்பு, கோவிட் பொருத்த நடவடிக்கை என அனைத்தும் தொடர்ந்து முக்கியமானதாகவே உள்ளது. இந்த வைரசிற்கு முடிவு இல்லை என்பதோடு எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம். இது இன்னும் உலகம் முழுவதும் உள்ளது. மேலும் வைரஸ், அழுத்தத்தில் இருப்பதால், அது அதிவேகமாக அதிகரிக்க ஒரு வழியைக் கண்டறியும் வகையில் வெளியேறக் கூடும். இதனை நாம் எப்போதும் நம்முடைய மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் குறித்து முழுமையாக இந்த உலகத்திற்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment