Advertisment

இந்திய வம்சாவளி மலேசியருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை: சர்வதேச கவனத்தை பெறக் காரணம் என்ன?

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம், 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 21.

author-image
WebDesk
New Update
இந்திய வம்சாவளி மலேசியருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை: சர்வதேச கவனத்தை பெறக் காரணம் என்ன?

death sentence of Indian-origin Malaysian : மேல் முறையீடு தொடர்பான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் இந்திய வம்சாவளி மலேசியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை திங்கள் கிழமையன்று ரத்து செய்து அறிவித்தது அந்நாட்டு உயர் நீதிமன்றம்.

Advertisment

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம், 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 21.

அவருக்கு மரண தண்டனை அறிவித்த அந்நாட்டின் முடிவை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினர் குரல் கொடுத்தனர். அவரின் எல்லைக்குட்பட்ட அறிவார்ந்த செயல்பாடு மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, அவரது வழக்கில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளை மீறியதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த குறைபாடுகள் அவருக்கு ஆபத்தை மதிப்பிடுவதை கடினமாக்கியிருக்கும், மேலும் அவரது சூழ்நிலைகளை துல்லியமாக கணக்கிடுவது அவருக்கு கடினமாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் வாதாடினார்கள்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யகூப் சிங்கப்பூர் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தர்மலிங்கத்தின் வழக்கில் மன்னிப்பு வழங்குமாறு கோரியிருந்தார்.

நவம்பர் 5ம் தேதி அன்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், குற்றம் செய்யும் போது தான் என்ன குற்றம் செய்கிறோம் என்பதை நாகேந்திரன் நன்கே உணர்ந்திருந்தார் என்று கூறியது.

நாகேந்திரன் கே.தர்மலிங்கம் மீதான வழக்கு என்ன?

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி அன்று 42.72 கிராம் ஹெராயினை சிங்கப்பூர் நாட்டிற்குள் கடத்த முயன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நாகேந்திரனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு மலேசியாவில் இருந்து வுட்லேண்ட்ஸ் சோதனைச்சாவடி மூலம் சிங்கப்பூருக்கு நாகேந்திரன் வர முயற்சி செய்த போது அவரிடம் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது தொடையில் ஹெராயின் கட்டப்பட்டிருந்தது.

தர்மலிங்கம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையுடு செய்தார். ஆனால் அவருடைய குற்றம் மற்றும் தண்டனையை உறுதி செய்தது சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம்.

2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மலிங்கம் தன்னுடைய தண்டனையை மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். அவரது மறு தண்டனையின் போது பரிசீலிக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒன்று, அவர் குற்றத்தைச் செய்த நேரத்தில் பிரதிவாதியின் மனப் பொறுப்பு பலவீனம் அடைந்திருந்தது என்று கூறியிருந்தனர். ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு பிறகு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு தான் என்ன செய்தோம் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது என்று கூறியது.

சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவர் சார்பாக அழைக்கப்பட்ட ஒரு மனநல மருத்துவர் அவர் அறிவுசார் ஊனமுற்றவர் அல்ல என்பதை ஒப்புக்கொண்டார்.

2015ம் ஆண்டில் கூறப்பட்ட அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர் எளிமையான விதிமுறைகளில் திட்டமிடவும் ஒழுங்கமைக்கவும் முடியும் என்பதையும், சுயாதீனமாக வாழ்வதில் ஒப்பீட்டளவில் திறமையானவர் என்றும் நீதிமன்றம் அறிந்துள்ளது. பிரச்சனைகளை கையாளுவும் ஏய்க்கவும் அவரால் முடியும் என்பதை குறிப்பிட்ட நீதிமன்றம், அவர் கைது செய்யப்படும் போது, செக்பாய்ண்ட்டில் தான் ராணுவத்தில் பணியாற்றுவதாக மத்திய போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் கூறி தேடலை தடுக்க முயன்றிருக்கிறார் என்று கூறியுள்ளது.

publive-image

இந்த வழக்கிற்கு எதிராக இப்போது போர்க்குரல்கள் எழ காரணம் என்ன?

அக்டோபர் 26ம் தேதி அன்று சிங்கப்பூர் சிறை சேவை தர்மலிங்கத்தின் தாயாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் நாகேந்திரனுக்கு மரண தண்டனை நவம்பர் 10ம் தேதி அன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. , மனித உரிமை அமைப்புகள் அவரது மன நிலைமையை கருத்தில் கொண்டு அவரை மன்னிக்குமாறு அரசாங்கத்திடம் முறையிட்டன.

இந்த வழக்கு ஐரோப்பிய ஒன்றியம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், அமெரிக்க உளவியல் சங்கத்தின் சமூக நீதி பிரிவு, சிங்கப்பூர் மரண தண்டனை எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் ஆகியவற்றிலிருந்து அரசாங்கத்தின் முடிவைக் கண்டிக்கும் அறிக்கைகளுக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதரகப் பணிகள் மரண தண்டனையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, மேலும் சிங்கப்பூர் அதை ஒழிப்பதற்கான சாதகமான முதல் படியாக அனைத்து மரணதண்டனைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொத்தடிமைத்தனம், பிற உடல் ரீதியான தண்டனைகள் பொதுவாக இருந்த ஆரம்ப நாட்களில் மரண தண்டனை என்பது மிகுந்திருந்தது. மரண தண்டனை என்பது ஒரு கொடூரமான, மனிதாபிமானமற்ற ஒரு அசாதாரணமான தண்டனை ஆகும். அந்த காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளைப் போலவே, ஒரு நாகரீக சமுதாயத்தில் மரணதண்டனைக்கும் இடமில்லை என்று அமெரிக்க உளவியல் சங்கத்தின் சமூக நீதிக்கான பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை எந்தச் சட்டம் கையாளுகிறது?

சிங்கப்பூரில் , போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான முக்கியச் சட்டமாக போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டம் உள்ளது. போதைப்பொருள்களை சட்டவிரோதமாக கடத்தல், இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தால் மரண தண்டனையை இந்த சட்டம் உறுதி செய்கிறது.

குறிப்பாக இந்த சட்டத்தின் கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெரோயின் போதைப்பொருளை இந்நாட்டிற்குள் கொண்டு வரும் எவருக்கும் மரண தண்டனையை இது உறுதி செய்கிறது.

இருப்பினும், 2014 இல் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, சம்பந்தப்பட்ட நபர் கூரியர் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளைக் கொண்டு செல்வது, அனுப்புவது அல்லது விநியோகிப்பது போன்றவற்றைக் கண்டறிந்தால், மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment