Advertisment

வீட்டிற்குள் முகக் கவசம் அணிய அரசு கூறக் காரணம் என்ன?

Why the government wants you to wear a mask at home too: அறிகுறியற்ற நபர்கள் வீட்டிற்குள்ளேயே தொற்றுநோயை வேகமாகப் பரப்பலாம். அறிகுறியற்ற மக்கள் சாதாரணமாக பேசும்போது கூட, அவர்கள் தொற்றுநோயை பரப்பலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டிற்குள் முகக் கவசம் அணிய அரசு கூறக் காரணம் என்ன?

இந்தியாவின் கொரோனா தடுப்புக்குழுவின் தலைவர் டாக்டர் வி கே பால், தொற்றுப் பரலைத் தடுக்க வீட்டிற்குள்ளும் முகக் கவசம் அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். திங்களன்று, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3,52,991 புதிய கொரோனா பாதிப்புகளையும், 2,812 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளதால் அவர் வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணிய பரிந்துரை செய்கிறார். நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது 28,13,658 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இந்த பரிந்துரைக்கு காரணம் என்ன?

கொரோனா வைரஸ் மனிதர்களிடையே சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. ஒருவர் இருமும்போதும், ​​தும்மும்போதும், ​​பேசும்போதும், ​​கூச்சலிடும்போதும் அல்லது பாடும்போதும் சுவாச துளிகள் காற்றில் பயணிக்கிறது. இந்த துளிகள் பின்னர் அருகிலுள்ள மக்களின் வாய் அல்லது மூக்கிற்குள் செல்லலாம், அல்லது அவர்கள் சுவாசிப்பதன் மூலம் உடலுக்குள் செல்லலாம்.

மக்களில் பெரும்பாலானோர்க்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்படவில்லை. ஆனாலும் அறிகுறியற்ற நபர்கள் வீட்டிற்குள்ளேயே தொற்றுநோயை வேகமாகப் பரப்பலாம். அறிகுறியற்ற மக்கள் சாதாரணமாக பேசும்போது கூட, அவர்கள் தொற்றுநோயை பரப்பலாம் என்று டாக்டர் பால் கூறுகிறார்.

ஏனென்றால், இந்த இரண்டாம் அலையில் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்கும் முழு குடும்பங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இரண்டாவது அலையில் வீட்டிற்குள் முகக்கவசம் ஏன்?

இந்தியாவில் இந்த இரண்டாவது அலையில் பாதிக்கப்படக்கூடிய மக்களில் கணிசமான பகுதியினர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கடுமையான அறிகுறிகளைக் காட்டி வருகின்றனர், மேலும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் படுக்கைகளின் தேவை அதிகரிப்பது சுகாதார உள்கட்டமைப்பை அதிகப்படுத்தியுள்ளது.

முகக்கவசம் அணிவது, கொரோனா தொற்று பாதித்தவருக்கு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து மற்றவர்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. எனவே, இந்த பரிந்துரை பரிமாற்ற சங்கிலியை உடைப்பது மட்டுமல்லாமல், அதிக ஆபத்தில் உள்ளவர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வீட்டிற்குள் முகக்கவசம் அணிவதில் இரண்டு நனமைகள் உள்ளன. முதலாவதாக, குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு அறிகுறியற்ற தொற்று இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் இணை நோயுற்றவர்கள் கணிசமாக பாதுகாக்கப்படுவார்கள். இரண்டாவதாக, இது இரண்டாவது அலையில் குடும்பத்திற்குள் பரிமாறப்படும் பரவலைக் குறைக்கலாம்.

வீட்டிற்குள் முகக்கவசம் கட்டாயம் என்பதற்கு அரசாங்கம் ஏதேனும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளதா?

ஆம், வட கரோலினா சுகாதார மற்றும் மனித சேவைத் துறையின் தரவை மேற்கோள் காட்டி, இரண்டு நபர்களிடையே 6 அடி தூரம் இருக்கும்போது, ​​இருவரும் முகக்கவசம் அணிந்திருக்கும்போது பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று டாக்டர் பால் கூறினார்.

மேற்கோள் காட்டப்பட்ட தரவுகளின்படி, இருவருமே முகக்கவசம் அணியும்போது ஆபத்து 1.5% (குறைவாக) ஆக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே முகக்கவசம் அணிந்து, பாதிக்கப்படாத நபர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் ஆபத்து 5% (நடுத்தர) ஆக உள்ளது. பாதிக்கப்படாத நபர்கள் முகக்கவசம் அணிந்து, பாதிக்கப்பட்ட நபர் முகக்கவசம் அணியவில்லை என்றால் ஆபத்து 30% (உயர்) ஆக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள் இருவரும் முகக்கவசம்  அணியாதபோது ஆபத்து 90% (மிக அதிகம்) ஆக உள்ளது.

வேறு எந்த நாடுகளும் இதேபோன்ற பரிந்துரையை இதுவரை செய்துள்ளதா?

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மையம் (சி.டி.சி) கிட்டத்தட்ட இதேபோன்ற பரிந்துரையை அளிக்கிறது. குறைந்தது 6 அடி இடைவெளியில் தங்கியிருப்பதைத் தவிர, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சி.டி.சி கூறுகிறது. மேலும், உங்கள் வீட்டு உறுப்பினர்களைத் தவிர அண்டை வீட்டினர் யாரேனும் உங்கள் வீட்டுக்கு வந்தால் கட்டாயம் நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த நேரங்களில் வயதானவர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சி.டி.சி வலியுறுத்துகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு புதிய நபர் வீட்டிற்கு வந்தால், பாதிக்கப்படக்கூடியவர்கள் தொற்றுநோயைக் குறைக்கும் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

அரசாங்கம் மேற்கோள் காட்டியதைத் தவிர, வேறு எதேனும் ஆய்வு வீட்டிற்குள் முகக்கவசத்தின் நன்மைகளை கூறியுள்ளதா?

ஆம். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள குடும்பங்களில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் வீட்டிற்குள் முகக்கவசம் அணிவதால் தொற்று பரவல் 79% குறைவதாக கண்டறிந்துள்ளது ஆனால் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே முக்கவசம் அணிவதால் மட்டுமே இந்த பலன் கிடைக்கும்.

124 குடும்பங்களில் 335 பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் தொற்று பாதித்தவருடன், மற்றவர்கள் அடிக்கடி தினசரி நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் வீட்டுப் பரவுதல் ஆபத்து 18 மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது; முதல் பாதிப்பு மற்றும் குடும்ப தொடர்புகள் மூலம் முகக்கவச பயன்பாடு முதன்மை அறிகுறிகளை உருவாக்கும் முன் 79% பரவுதலைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருந்தது; இருப்பினும், முதன்மை பாதிப்பின் நோய் தொடங்கிய பின் முகக்கவசம் அணிவதால் பெரிய நன்மையில்லை.

"முகக்கவச பயன்பாடு மற்றும் சமூக இடைவெளி பொது இடங்களில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் உறுப்பினர்களுக்கிடையே தொற்றுநோய் பரவலை குறைப்பதாக கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் இது, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருடன் வாழும் குடும்பங்களுக்கும், தொடர்ந்து ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கும் ஆபத்து குறைப்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது, ”என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Mask Wear Mask In Home
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment