Advertisment

5,800 டாலர் மதிப்புள்ள ஜப்பானியை விஸ்கியை காணவில்லை: தேடும் அமெரிக்க வெளியுறவுத்துறை

அமெரிக்க அரசு அதிகாரிகள் 390 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பரிசுகளை வைத்திருக்க உரிமை உண்டு.

author-image
WebDesk
New Update
mike pompeo

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவுக்கு ஜப்பான் அரசு பரிசாக கொடுத்த 5,800 டாலர் மதிப்புள்ள விஸ்கி பாட்டில் என்ன ஆனது என்று அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது. ஆனால் அது வெளிப்படையாக காணவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன.

Advertisment

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இது குறித்து நேற்று செய்தி வெளியிட்டது. அதில், ஜப்பான் அரசு 2019 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பாம்பியோவுக்கு விஸ்கியை பரிசளித்தது என்று அந்த ஆவணம் கூறுகிறது. ஆனால் பாம்பியோ சவுதி அரேபியாவில் இருந்ததால் ஜப்பானிய அதிகாரிகள் பாட்டிலை வெளியுறவுத் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அந்த பரிசை பாம்பியோ பெற்றுக்கொண்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும், விஸ்கி பாட்டில் பற்றி எந்த நினைவும் தமக்கு இல்லை என பாம்பியோ மறுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

விஸ்கி பாட்டில் பற்றிய வேறு எந்த விவரங்களையும் துறை அதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் விஸ்கியின் பிராண்ட் மற்றும் தயாரிப்புகள் பற்றி தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, 10 ஆண்டுக்கும் குறைவான காலத்தில் ஜப்பானிய விஸ்கி ஒப்பீட்டளவில் உலகில் மிகவும் விரும்பப்படும் மதுபானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மதுப்பிரியர்களால் அதிகம் வாங்கப்படுகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அதிக டாலர் கொடுத்து வாங்குகின்றனர். ஜப்பானிய விஸ்கிகளுக்கான விலைகள் சமீப ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான டாலர்கள் வரை அதிகமாக உயர்ந்துள்ளன.

அமெரிக்க அரசு அதிகாரிகள் வெளிநாட்டு பரிசுகளை ஏற்றுக்கொள்வதற்கான விதிகள் என்ன?

அமெரிக்க அரசமைப்புச் சட்டப்படி ஒரு அமெரிக்க அதிகாரி வெளிநாட்டு அரசாங்கங்களிடம் இருந்து பரிசுகள் பெறுவது சட்டவிரோதமானது. அதிகாரியானவர் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேசிய, உள்ளூர், மாநில அல்லது நகராட்சி அளவில் இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

"அரசாங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய சர்வதேச அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் பரிசுகளுக்கும் இது பொருந்தும். இது வெளிநாட்டு அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கௌரவ பரிசுகள், பயணம் அல்லது தினசரி பரிசுகளுக்கும் பொருந்தும். ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்துள்ள குழந்தைகளும் வெளிநாட்டு அரசாங்கங்களின் பரிசுகளைப் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ”என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சில பரிசுகளை ஏற்றுக்கொள்வது Foreign Gifts and Decorations Act (FGDA) சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. இவை $ 415 க்கும் குறைவான மதிப்புள்ள பரிசுகள், தங்குமிடம், உணவு, அமெரிக்காவிற்கு வெளியே நடக்கும் பயணத்திற்கான போக்குவரத்து, கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பயண செலவுகள் ஆகும்.

அதிலும் $ 415 என்ற எண்ணிக்கை மாறுபடும். காலண்டர் ஆண்டுகளில் 2017-2019 (ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2019 வரை) ஒரு பரிசின் அதிகபட்ச மதிப்பு $ 390 ஆகும். எனவே, பாம்பியோவின் காலத்தில், $ 390 குறைந்தபட்ச மதிப்பாகக் கருதப்படும்.

பரிசின் விலை குறைந்த பட்ச மதிப்பை விட அதிகமாக இருந்தால் அல்லது கொடுக்கப்படும் பரிசை மறுப்பது அமெரிக்க அல்லது வெளிநாட்டு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால் அரசுத்துறை அந்த பரிசை ஏற்றுக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment