Advertisment

குர்து மக்கள் யார்? ஏன் சிரியாவில் தாக்கப்படுகிறார்கள் ?

அமெரிக்காவால் ஏற்பட்ட வெற்றிடத்தால் குர்திஷ், துருக்கி, பஷர் அல்-அசாத் ஆகியோருக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கான முக்கிய சக்தியாக ரஷ்யா விளங்கப்போகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained: Who are the Kurds, and why is Turkey attacking them in Syria

Explained: Who are the Kurds, and why is Turkey attacking them in Syria

கடந்த ஞாயிறுக்கிழமை அமெரிக்காவின் நட்புறவோடு இருந்த குர்து படைகள், பஷர் அல்-அசாத்தின் சிரியாவோடு உடன்படுக்கை மேற்கொண்டுள்ளனர் . சில நாட்களுக்கு முன்புவரை குர்து  படைகள் சிரியாவின் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராகவும், ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு எதிராகவும் சண்டை போட்டது. சிரியாவில் இருந்து தனது ராணுவப் படைகளை முழுவதுமாக அமெரிக்கா  நீக்கியாதால், துருக்கியின் தலைவர் எர்டோகன்  சிரியாவிற்குள் நுழைந்து, குர்து மக்களின் ஆக்கிரமைப்பில் இருக்கும் பகுதியை கைப்பற்ற முன்னேறியதால் குர்து படைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது .

Advertisment

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவிருக்கும் 2020 ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து, உலகெங்கும் (சிரியா உட்பட )இருக்கும் தனது ராணுவப் படைகளை திரும்பப் பெறுகிறார். அமெரிக்கா அதிபரின் இந்த முடிவால் துருக்கி,  ரஷ்யா, பஷர் அல்-அசாத், இரான், ஐ.எஸ் ......  போன்றவைகள்  பலனடைய வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் வெற்றிடத்தால் குர்திஷ், துருக்கி, பஷர் அல்-அசாத் ஆகியோருக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கான முக்கிய சக்தியாக ரஷ்யா விளங்கப்போகிறது.

நீண்ட கலாச்சாரம், ஆனால் நாடற்ற மக்கள்:  

உலகில் நீண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும் , நாடற்று வாழ்பவர்கள் குர்து  இனமக்கள். தோராயக் கணக்கின் படி, 25 முதல் 35 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அசாம், ஜார்க்கண்ட், கேரளா,  தெலுங்கானா, கனடா, ஆஸ்திரேலியா  போன்ற நாடுகளுக்கு ஒப்பாக இந்த எண்ணிக்கை கருதப்படுகிறது. தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான், தென்மேற்கு ஆர்மினியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக குர்து  மக்கள் வசித்து வருகின்றனர்.

publive-image

குர்து  தேசியவாதிகள் தங்களது வரலாறு  2500 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே தொடங்கியதாக சொல்கின்றனர். ஆனால் 7ம் நூற்றாண்டில் இந்த பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்தை தழுவிய போதுதான் குர்து மக்கள் என்ற தனியான அடையாளத்தை பெற ஆரம்பித்தனர் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த குர்து மக்களில் பெரும்பாலானோர் சூபித்துவம் போன்றவைகளை பின்பற்றினாலும் சன்னி இஸ்லாம் பிரிவினரை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராய் உள்ளனர் .

குர்து மக்களின் மொழி பாரசீக மற்றும் பாஷ்டோவுடன் தொடர்புடையதாய் இருக்கும்.  துருக்கியில் குர்மன்ஜி மொழியை பேசும் பெரும்பாலான குர்துகள், லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார்; சோரானி மொழி அரபு எழுத்துக்களை  கொண்டிருக்கிறது.  பயமற்ற போராளிகள் என்று நீண்ட காலமாக பெயரெடுத்த இந்த குர்து மக்கள், பல படைகளில் போர் வீரர்களாகவும்  பணியாற்றியுள்ளனர்.

எகிப்தில் பாத்திமிட்  என்ற சாம்ராஜ்ஜியத்தை அகற்றி, மத்திய கிழக்கு நாடுகளை 12,  13 ம் நூற்றாண்டுகளில் அய்யூபிட் சாம்ராஜியத்த்தை நிறுவிய வீரன் சலடின் ஒரு குர்து இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயகத்திற்கான தேடல்: 

எண்ணிக்கையில் அதிகமான மக்கள், நீண்ட நெடிய வரலாறு, இனத்திற்கான தனி அடையாளம் போன்றவைகள்  இருந்தாலும் , குர்து  மக்கள் தங்களுக்கென ஒரு தாய்நாடு இல்லாமல் வாழ்கின்றனர்.,  குர்து ஒட்டோமான் தூதராக இருந்த  மெஹ்மத் ஷெரீப் பாஷா, முதலாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த வெர்சாய்ஸ் சமாதான மாநாட்டில் துருக்கி, ஈராக், ஈரானின் போன்ற நாடுகளில் சில பகுதிகளை உள்ளடக்கி குர்திஸ்தானின் என்ற நாட்டை முன்மொழிந்தார்.  ஆனால், 1920 களில் போடப்பட்ட செவ்ரெஸ் ஒப்பந்தம், துருக்கியில் உள்ள ஒரு சிறு நிலங்களில் மட்டும் குர்து மக்களின் கனவான குர்திஸ்தான்  நாட்டிற்கு ஒதுக்கியது. ஆனால், செவ்ரெஸ் ஒப்பந்தமும் நீடிக்க வில்லை. துருக்கி 1923 ம் ஆண்டு நேச நாடுகளுடன்( அமெரிக்கா, பிரிட்டன்) கையெழுத்தான லொசேன் ஒப்பந்தத்தால் குர்திஸ்தான் என்பது குர்து மக்களுக்கு கணவாய் போனது.

கடந்த காலங்களில், குர்திஸ்தான் என்ற  தனி நாட்டிற்காக செய்த முயற்சிகளினால் குர்து மக்கள் பல அடக்கு முறைக்கு உள்ளானார்கள் . குர்து மக்களின் மொழி, பெயர்கள், பாடல்கள், உடைகள் போன்றவை முற்றிலுமாக ஏற்கனவே துருக்கியில் தடை செய்யப்பட்டுவிட்டன.  1980, 90 களில் குர்து மக்களின் எழுச்சிகளை கட்டுபடுத்த இராக்கின் அதிபர் சதாம் உசேன் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினார்.

துருக்கி , அசாத், அமெரிக்கா:  வீடியோ தொகுப்பு

1978 ஆம் ஆண்டில், மார்க்சிச புரட்சியாளரான அப்துல்லா ஓசுலான் தனிநாடு குர்திஸ்தானை உருவாகும் நோக்குடன்

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை ( பி.கே.கே)  தொடங்கினார். பி.கே.கே கெரில்லாக்கள் 1984 முதல் 1999 ல் வரை துருக்கிய இராணுவத்துடன் போராடினார்கள். இதில் சுமார் 40,000 குர்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2013 ம் ஆண்டு முழுமையான போர் நிறுத்தம் அறிவிக்கும் வரை, பி.கே.கே துருக்கிக்கு உடனான சண்டைகளும், மரணங்களும்   நடந்து வந்தது.

ஆனால் இந்த போர் நிறுத்தம், 2015 ம் ஆண்டு ஐ.எஸ்.ஐக்கு எதிரான கூட்டமைப்பு போரில் கலந்து கொண்ட துருக்கி, இராக்கில் இருக்கும்  பி.கே.கே வின் இலக்குகளை தாக்கத் தொடங்கியது.

ஐ.எஸ்.ஐ, அசாத், அமெரிக்கா:  

சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ  தீவிரவாத அமைப்பு படையெடுக்கும் போது, அதை  தடுக்க தகுதிவாய்ந்தாக கருதப்பட்ட அமைப்பு ஒய்.பி.ஜி (YPG).  2011-12 ம் ஆண்டுகளில் சிரியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டபோதே சிரியா-துருக்கி எல்லையில் வாழும் குர்து மக்கள் தங்கள் பகுதிகளைக் காக்க ஆயுதமேந்திய பாதுகாப்பைத் தொடங்கினர். 2014 ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா போர் எடுத்த போது, அமெரிக்கா சிரியா-குர்து மக்களை நட்பாக்கியது. மத்திய கிழக்கில் ரஷ்யா, இரான் போன்ற நாடுகளின் செல்வாக்கை குறைப்பதற்கு துரும்பு சீட்டாகவும் இந்த  சிரியா-குர்து மக்களை அமெரிக்கா பயன்படுத்தியது.

குர்து மக்கள்  ஐ.எஸ்.ஐ அமைப்பை வடக்கு சிரியாவை விட்டு அப்புறப்படுத்திய பின்னர், சிரியா-துருக்கி எல்லையில் அவர்களின் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. துருக்கியில் செயல்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் (பி.கே.கே), சிரியாவின் ஒய்.பி.ஜி இணக்கம் துருக்கியின் பாதுகாப்பிற்க்கும், தனது ஆட்சிக்கும்  சவாலாய் இருக்கும் என்று  துருக்கி அதிபர் எர்டோகனின் நினைப்பு அதிகமானது.

இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப் சிரியாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தார் . இது குறித்த தகவலை அக்டோபர் 6 ம் தேதி துருக்கி அதிபர் எர்டோகனுக்கு தெரியபடுத்தினார்.  அடுத்த மூன்று நாட்களுக்குள்,  துருக்கியும் சிரிய அரபு நட்பு நாடுகளும் சிரியாவில் குர்து மக்கள் வசம் உள்ள பிரதேசத்தின் மீது தாக்குதலைத் தொடங்கின.  எர்டோகனுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தாலும், குர்துகள் மீதான துருக்கிய தாக்குதல்கள் நடந்தேறி வருகிறது.

America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment