Advertisment

எம்.பி.க்கள் எப்படி, எப்போது சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்?

இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் இடையூறு ஏற்படுத்தியதற்காக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது என்ன நடந்தது? இடையூறுகளைக் கையாளும் விதிகள் யாவை?

author-image
WebDesk
New Update
Winter Session of Parliament, Parliament of India, Winter Session, How and when MPs are suspended, 12 MPs suspended, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், எம்பிக்கள் எப்படி எப்போது சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள், மக்களவை, மாநிலங்களவை, நாடாளுமன்றம், காங்கிரஸ், பாஜக, MPs suspended, congress, BJP, India, Loksabha, Rajya Sabha

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை பரபரப்பாக தொடங்கியது. மக்களவை எந்த விவாதமும் இல்லாமல் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியதால் இரு அவைகளும் இடையூறுகள் ஏற்பட்டது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சுருக்கமான தலையீட்டிற்குப் பிறகு ராஜ்யசபா 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியது.

Advertisment

அதன்பிறகு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இந்த அமர்வில் 12 ராஜ்யசபா எம்.பி.க்களை (காங்கிரஸின் ஆறு, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் தலா இருவர், மற்றும் சிபிஐ மற்றும் சிபிஐ-எம் தலா ஒருவர்) எஞ்சிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ய சபையின் ஒப்புதலைக் கோரினார். மழைக்கால அமர்வின் கடைசி நாள் அமர்வில் “நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களுடைய தவறான நடத்தை, அவமதிப்பு, கட்டுக்கடங்காத மற்றும் வன்முறை நடத்தை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியது” அவர்களின் இடைநீக்கத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடரின்போது ராஜ்யசபாவில் என்ன நடந்தது?

வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதில் இருந்து 2020ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரிலும் நாடாளுமன்றம் தொடர்ந்து இடையூறுகளைக் கண்டது. இந்த மசோதாக்கள் ராஜ்யசபாவில் விவாதத்திற்கு வந்தபோது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவற்றை தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தக் கோரினார்கள். மசோதாவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எம்.பி.க்கள் காகிதங்களை வீசினர். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குழுவின் பரிசீலனை இல்லாமல் நாடாளுமன்றம் மசோதாக்களை நிறைவேற்றியது.

பின்னர், இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஹேக்கிங் மற்றும் வேளாண் சட்டப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தக் கேட்டன. ராஜ்ய சபாவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் குறித்து பேசும்போது, ​​திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் அவரிடம் இருந்து காகிதங்களை பறித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும், சென்னுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடரில் சாந்தனு சென்-னை இடைநீக்கம் செய்தது.

ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம் என அமளியுடன் முடிவடைந்த அந்த அமர்வு முழுவதும் இரு அவைகளிலும் இடையூறு ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பாதுகாப்பு ஊழியர்கள் தங்களைப் கையாள்வதாக குற்றம் சாட்டினார்கள். இதையொட்டி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு ஊழியர்களைத் தாக்கியதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவைக் கோருவதாகவும் அவைத் தலைவர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டினார். பின்னர், அந்த கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தது.

எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பதைக் கையாள தலைமை அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரங்கள் என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில குறிப்பிட்ட நாடாளுமன்ற ஒழுங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக, லோக்சபா விதிப்புத்தகம், எம்.பி.க்கள், மற்றவர்களின் பேச்சில் குறுக்கிடக்கூடாது, அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். விவாதத்தின்போது முனுமுனுப்பதன் மூலமோ அல்லது பேசும்போது உடனுக்குடன் கருத்துகளைக் கூறுவதன் மூலமோ நடவடிக்கைகளைத் தடுக்கக் கூடாது என்று குறிப்பிடுகிறது. புதிய எதிர்ப்பு வடிவங்களால் 1989-ல் இந்த விதிகள் புதுப்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இப்போது, ​​உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பவோ, பலகைகளைக் காட்டவோ, எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆவணங்களைக் கிழிக்கவோ, கேசட் அல்லது டேப் ரெக்கார்டரையோ சபையில் இயக்கக் கூடாது. ராஜ்யசபாவிலும் இதே போன்ற விதிமுறைகள் உள்ளன. நடவடிக்கைகளை சுமூகமாக நடத்த, விதிப்புத்தகம் இரு அவைகளின் தலைமை அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியான குறிபிட்ட அதிகாரங்களை வழங்குகிறது.

மக்களவை, மாநிலங்களவை என ஒவ்வொரு அவையின் தலைமை அதிகாரியும், ஒரு எம்.பி.யை மொத்த ஒழுங்கீனமான நடத்தைக்காக சட்டமன்ற அறையிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தலாம். அதன்பின் அந்த நாள் முழுவதும் எம்.பி., சபை நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சபையின் "தொடர்ந்து மற்றும் வேண்டுமென்றே அலுவல்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக ஒரு எம்.பி.யை தலைமை அதிகாரிகள் பெயரைக் குறிப்பிட முடியும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், வழக்கமாக, நாடாளுமன்ற விவகார அமைச்சர், குற்றம் புரிந்த எம்.பி.யை சபையின் நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான ஒரு பிரேரணையை முன்வைப்பார். அமர்வு முடியும் வரை அந்த இடைநீக்கம் நீடிக்கலாம்.

2001ல், சபாநாயகருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், மக்களவை விதியில் திருத்தம் செய்யப்பட்டது. புதிய விதி 374A-ன் படி அவையின் அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு ஒரு எம்.பி.யை இடைநீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் அளிக்கிறது. 2015-ம் ஆண்டு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த விதியை பயன்படுத்தி 25 காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தார்.

அடிக்கடி இடையூறுகள் எப்படி எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு வழிவகுத்தன?

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் நிகழ்வு 1963ல் நடந்தது. குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இரு அவைகளிலும் கூட்டாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மக்களவை எம்.பி.க்கள் சிலர் முதலில் குறுக்கிட்டு, பின்னர் வெளிநடப்பு செய்தனர். இந்த எம்.பி.க்களை கண்டிப்பதுடன் இந்த மக்களவை முடிந்தது. 1989ல், தக்கர் கமிஷன் அறிக்கை மீதான விவாதத்தில் 63 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில், 2010ல், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை, அமைச்சரிடம் இருந்து பறித்ததற்காக, ராஜ்யசபாவில் இருந்து, 7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின்னர், எம்.பி.க்கள் அவையில் பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இடையூறுகள் பிரச்னையைத் தீர்ப்பது எவ்வளவு கடினமாக இருந்தது?

இதற்கு அவையை நடத்தும் தலைமை தாங்கும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். பல விவாதங்களில் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

1992-97 வரை மாநிலங்களவைத் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், இதில் உள்ள சிரமத்தை விளக்கினார்: “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சபையில் சீர்குலைவுகள் ஏற்படுவது என்பது உறுப்பினர்கள் விரக்தியாக உணர்வதால் ஏற்படுகிறது அல்லது அவரை நகர்த்தும் அல்லது கணத்தின் வெப்பத்திலிருந்து வெளியேறும் மக்களின் குறைகளை அவரது நெஞ்சில் இருந்து வெளிப்படுத்துவதால் எற்படுகிறது. அவர்கள் அதை எளிதாக கையாளலாம். திட்டமிடப்பட்ட பாராளுமன்ற குற்றங்களையும் விளம்பரத்திற்காக அல்லது அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே செய்யப்படும் இடையூறுகளை சமாளிப்பது மிகவும் கடினம்.

2001-ம் ஆண்டில், அவையில் ஏற்பட்ட இடையூறுகள் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாநாட்டின் போது, ​​பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை சுருக்கமாகக் கூறினர். பெரும்பான்மைக் கட்சி ஆட்சியமைக்கும் பொறுப்பு, மற்ற கட்சிகளை நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறினார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற வேண்டும் என்றும், தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் கண்ணியமான முறையில் தம்மை வெளிப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றார்.

மக்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தி, விவாதம் ஜனநாயகத்தின் மையம் ஆகும். எனவே, அதிக விவாதம் மற்றும் குறைவான இடையூறுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விவாதங்களை எதிர்கொள்ள கருவூல அமர்வுகளின் தயக்கம் மற்றும் தள்ளிப்போடுதல் நாடாளுமன்றத்தில் சீர்குலைவு ஏற்படுவதற்கான காரணம் என்று அவர் அடையாளம் காட்டினார். அரசாங்கத்திற்கு சங்கடமான பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு உதவ அவை நடத்தும் தலைமை அதிகாரிகளின் ஆதரவை அவர் நாடினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது நிலையற்றது என்றும், மத்தியில் ஆளும் கட்சி மாநிலங்களில் கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் கூறினார். எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே சுமூகமான மற்றும் மரியாதையான உறவு இருக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Parliament Central Government Rajya Sabha Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment