தெய்வீக பூனையின் கணிப்பு தோற்றது.. நைஜீரியாவை அடித்து நொறுக்கிய அர்ஜெண்டினா!

அர்ஜெண்டினாவிற்கு   கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை மெஸ்ஸி தவற விட்டார்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நேற்று இரவு நடைப்பெற்ற  லீக் ஆட்டத்தில் நைஜீரிய அணியை வீழ்த்தி,  அர்ஜெண்டினா அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ரஷ்யாவில்  திருவிழா போல் அரங்கேறிய வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக நேற்று இரவு முன்னாள் உலக சாம்பியன் அர்ஜெண்டினா – நைஜீரிய அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

முன்னாள் உலக சாம்பியன் அர்ஜெண்டினா – நைஜீரிய அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.  வெற்றியை பதிவு செய்ய  வேண்டிய நிலையில், களம் இறங்கிய  அர்ஜெண்டினா அணி இம்முறை பல மாற்றத்துடன்  ஆட்டத்தை துவக்கியது. குரூப் சுற்றில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்தாக  அர்ஜெண்டினா அணி இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்று.  குறிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற்று தால் தான் அர்ஜெண்டினா அணியால்  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடித்த கோல் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு ஆரம்புள்ளியாக அமைந்தது. 33 ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவிற்கு  கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை மெஸ்ஸி தவற விட்டார். இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் முகத்தில் அமைதி நிலவியது.

ஆட்டத்தின் 48 வது நிமிடம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்த நிமிடம். அர்ஜெண்டினா வீரர் சேவியர் கோல் பாக்சுக்குள் நைஜீரிய வீரரை கீழே தள்ளியதால் வந்த வாய்ப்பை அந்த அணியின் வீரர் விக்டர் மோசஸ் அசால்ட்டாக கோல் ஆக்கினார். இதனால் ஆட்டம் சமநிலையை எட்டியது.

அதன் பிறகு அரங்கத்தில் இருந்த ரசிகர்கள்  ஆட்டத்தில் மூழ்கி விட்டனர். அர்ஜெண்டினா அணியின்  பயிற்சியாளர் சாம்போவுலி  இந்த முறை கையாண்ட அனைத்து திட்டங்களும் களத்தில் ஜெயித்தன. குறிப்பாக மூன்று வீரர்களை மாற்றுவீரராக களமிறக்கி இருந்தது போட்டியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.

போட்டியின் 86 வது நிமிடம் தான்  அர்ஜெண்டினா ரசிகர்கள் ஆர்பரிக்க வைத்த தருணம். அர்ஜெண்டினா வீரர்  ரோஜோ அடித்த கோல்  அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியில்  அர்ஜெண்டினா அணி 2-1 என கோல் கணக்கில் நைஜிரியாவை வென்று 4 புள்ளிகளுடன் தனது குரூப்-ல் இரண்டாம் இடத்தை பிடித்து அடுத்த  சுற்றுக்குள் மிடுக்குடன் நுழைந்தது.

அடுத்ததாக வரும் ஜூன் 30 ஆம் தேதி  நாக்அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.நாக்அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி கசான் நகரில்  ஜூன் 30ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் தொடங்க உள்ளது.இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் தெய்வீக பூனையாக கருதப்பட்டது அச்சிலிஸ் பூனை. கடந்த 3 போட்டிகளிலுன் இந்த கணிப்பு துல்லியமாக அமைந்திருந்தது. ஆனால்  அர்ஜெண்டினா அணியை பொருத்தவரையில் இதன் கணிப்பு பொய்யாகியுள்ளது.

Get the latest Tamil news and Fifa news here. You can also read all the Fifa news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fifa world cup 2018 how argentina progressed to the knockouts on dramatic night

Next Story
FIFA World cup 2018: கண்டிப்பா ஜெயிக்கணும்… இல்லனா அவுட்! உச்சக்கட்ட பிரஷரில் மெஸ்ஸி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com