Advertisment

France vs Belgium FIFA World Cup 2018 Semi Final: இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது பிரான்ஸ்! 1-0 என வெற்றி!

FIFA World Cup 2018, Belgium vs France: பெல்ஜியம் vs பிரான்ஸ் இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
France vs Belgium FIFA World Cup 2018 Semi Final: இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது பிரான்ஸ்! 1-0 என வெற்றி!

Belgium vs France

FIFA World Cup 2018, Belgium vs France: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.

Advertisment

இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருக்கிறது. பெரும்பாலான வீரர்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்தவர்கள். ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என எல்லோருமே ஸ்டார் பிளேயர்கள். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் என்றே கூறலாம்.

மேலும் படிக்க - முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா பெல்ஜியம்?

பிரான்ஸ் அணி பார்வேர்ட்ஸ், மிட் ஃபீல்ட், டிஃபென்ட்ஸ் என அனைத்திலும் சமபலத்துடன் உள்ளது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.

FIFA World Cup 2018, Belgium vs France: பெல்ஜியம் vs பிரான்ஸ் இடையிலான அரையிறுதிப் போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே,

நள்ளிரவு 01.24 - பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நள்ளிரவு 01.18: இரண்டாம் பகுதி நேரம் முடிந்தது. ஆறு நிமிடம் எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 01.07 - முதல் பாதியில் கிடைத்த அருமையான சில கோல் வாய்ப்புகளை பெல்ஜியம் வீணடித்தது. குறிப்பாக லுகாகோ, எளிதான வாய்ப்பை மிஸ் செய்தார். பிரான்ஸ் கோல் கீப்பரையும் சும்மா சொல்லக் கூடாது. அவர் தடுத்த கோல்கள் எல்லாம் வேற லெவல்.

நள்ளிரவு 12.56 - பிரான்ஸ் முன்னிலைப் பெற்றுள்ளதால், கோல் அடிக்க பெல்ஜியம் வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். பெல்ஜியம் அணியின் வீக்கான டிபென்சை உடைத்து பிரான்ஸ் கோல் அடித்துவிட்டது.

நள்ளிரவு 12.39 - பிரான்ஸ் வீரர் உம்டிடி தலையால் முட்டி கோல் அடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

publive-image

நள்ளிரவு 12.34 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

நள்ளிரவு 12.16 - முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என சமநிலையில் உள்ளது.

publive-image

நள்ளிரவு 12.02 - ஆட்டம் தொடங்கி 33 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதுவரை கோல் விழவில்லை என்றாலும், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

இரவு 11.52 - பிரான்ஸ் கேப்டனும், கோல் கீப்பருமான லோரிஸ் தடுத்த கோல் செம ரகம். பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை வலது பக்கம் பறந்து கைகளால் தடுக்க, அரங்கமே அதிர்ந்தது.

publive-image

இரவு 11.46 - பெல்ஜியம் அணி கேப்டன் ஹசார்ட் அடித்த பந்து கோல் கம்பத்தை உரசிக் கொண்டு வெளியேச் சென்றது. இதனால், அருமையான கோல் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ் ஆனது.

இரவு 11.40 - இரு அணிகளும் சரிசம அளவில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இரவு 11.32 - ஆக்ரோஷமான முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது.

இரவு 11.28 - இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இரவு 11.25 - இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர்.

Fifa Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment