Advertisment

கசப்பான 3 ஜூஸ்… நீரிழிவை குணமாக்க இவை ஏன் முக்கியம் தெரியுமா?

3 Bitter Juices To Manage Diabetes: நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும் 3 கசப்பான ஜூஸ். அவற்றின் முக்கியத்தவத்தை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கசப்பான 3 ஜூஸ்… நீரிழிவை குணமாக்க இவை ஏன் முக்கியம் தெரியுமா?

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படும் இந்த வகை நோயால், இந்தியாவில் சுமார் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதனை கட்டுப்படுத்த உணவு முறையில் மாற்றம் கொண்டு வரும். குறிப்பாக, நாம் குடிக்கும் பானங்களில் எவை நல்லது என்ற குழப்பமும் உள்ளது. பழச்சாறுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா, அவற்றில் நார்ச்சத்து குறைவாக இருந்தாலும், அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பழங்களை முழுமையாகவும் பிரஷாக உட்கொள்வது நல்லது

Advertisment

நீங்கள் ஆரோக்கியமான நீரிழிவு ஜூஸ் தேடுகிறீர்களானால், அவற்றை இப்போது உங்கள் வீட்டிலேயே தயாரித்து பருகுங்கள். சில கசப்பான பழங்கள் மற்றும் காய்கறிகள், நீரிழிவு நோய்க்கு சிறந்த சாய்ஸாக உள்ளன.

Karela Juice or bitter melon juice

கரேலா ஜூஸ் நோயாளிகளுக்கு ஒரு சிறந்த பானமாகும். பாகற்காய் உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. ஆய்வுகளின்படி, பாகற்காய் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. பாகற்காயில் பாலிபெப்டைட்-பி அல்லது பி-இன்சுலின் எனப்படும் இன்சுலின் போன்ற கலவை உள்ளது, இது நீரிழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Spinach Juice

ஃபோலேட், டயட்டரி ஃபைபர், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக திகழ்வது கீரை. நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்துகிறது, அதன் காரணமாக சர்க்கரை விரைவாக வளர்சிதை மாற்றமடையாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதை தடுக்கிறது.

Amla Juice

அதிகாலையில் மஞ்சள் தூளுடன் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஆம்லா என்பது இந்திய நெல்லிக்காய் மரத்தின் பழம். உயர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய தீர்வாகும்.

இதில், கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் குரோமியம் என்ற தாதுப்பொருளும் உள்ளது. இது உடலை இன்சுலினுக்கு அதிக அளவில் பதிலளிக்க உதவுகிறது என ஆரோக்கிய நிபுணரும் நியூட்ரிஹெல்த் நிறுவனருமான டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment