Advertisment

இரும்புச் சத்து, ரத்த விருத்தி... நீங்க மிஸ் பண்ணவே கூடாத 5 உணவுகள்!

உடல் சோர்வு, மயக்கம், வெளிறிப்போன சருமம், பசியின்மை ஏற்படும். இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நாம் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுதான். இந்த 5 உணவுகளில் இரும்புசத்து நிறைந்து காணப்படுவதால், இதை தவறாமல் சாப்பிடுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரும்புச் சத்து, ரத்த விருத்தி... நீங்க மிஸ் பண்ணவே கூடாத 5 உணவுகள்!

இரும்புச் சத்து குறைபாடு என்பதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் எல்லாவித பிரச்சனைகளும் நமது உடலுக்கு வந்துவிடும். உடல் சோர்வு, மயக்கம், வெளிறிப்போன சருமம், பசியின்மை ஏற்படும். இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நாம் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுதான். இந்த 5 உணவுகளில் இரும்புசத்து நிறைந்து காணப்படுவதால், இதை தவறாமல் சாப்பிடுங்கள்.

Advertisment

கொண்டக்கடலை

இதில் இரும்புச் சத்து, புரத சத்து நிறைந்து காணப்படுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ் இருப்பதால் உடல் எடை குறையவும்,  சரியாக ஜீரணமாகவும் உதவுகிறது. மேலும் பல நோய்கள் வராமல் தடுக்கிறது.

வாழைப்பழம்

இதில் இரும்புசத்து, ஃபோலிக் ஆசிட், பி12 இருப்பதால் இரும்புசத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.

வெந்தயம்

உடலில் ரத்தம் உற்பத்தியாக வெந்தயம்  உதவுகிறது. மேலும் வெந்தயக் கீரையை நாம் சமைத்து சாப்பிடுவதும் இரும்புசத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.

நட்ஸ்

முந்திரி, பிஸ்தா, சூரிய காந்திப்பூவின் விதைகள், பூசணி விதை, சணல் விதைகள் ஆகியவற்றை நாம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. சாலட், தயிர் போன்றதில் இந்த நட்ஸ் அல்லது விதைகளை தூவி சாப்பிடலாம்.

கீரை

இதில் இரும்புசத்து அதிகமா இருக்கிறது. உடல் எடை குறைக்க, பார்வை திறனை அதிகப்படுத்த, எலும்பை வலுவாக்க, ரத்த அழுத்தத்தை  சீராக்க கீரை உதவுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment