Advertisment

தண்ணீரில் கொஞ்சம் கிராம்பு... இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

சாப்பிடும்போது தெரியாமல், நமது வாயில் கிராம்பு தடுப்பட்டால், டென்ஷன் ஆகிவிடுவோம். ஆனால் இந்த கிராம்பில் இருக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் அப்படி ஆகமாட்டீர்கள். இதில் பல்வேறு வகையான புரத சத்து, வைட்டமின் கே, கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னிஷியம், பார்ஸ்பரஸ், இரும்பு சத்து, சிங்க், சோடியம், காப்பர் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
தண்ணீரில் கொஞ்சம் கிராம்பு... இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

பிரியாணி முதல் சில சைடிஷ்களில் தவிர்க்காமல் நாம் கிராம்பு பயன்படுத்துவோம். இந்நிலையில் சாப்பிடும்போது தெரியாமல், நமது வாயில் கிராம்பு தடுப்பட்டால், டென்ஷன் ஆகிவிடுவோம். ஆனால் இந்த கிராம்பில் இருக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் அப்படி ஆகமாட்டீர்கள். இதில் பல்வேறு வகையான புரத சத்து, வைட்டமின் கே, கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னிஷியம், பார்ஸ்பரஸ், இரும்பு சத்து, சிங்க், சோடியம், காப்பர் இருக்கிறது.

Advertisment

பல் வலியை குணப்படுத்தவும், பல் ஈர்களின் பிரச்சனைக்கு கிராம்பு தீர்வாக இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் குடிக்கும் தண்ணீர் கேனில் சில கிராம்புகளை போட்டுவிடுங்கள், தற்போது கிராம்பு தண்ணீர் ரெடி. அதில் இருக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

பல் வலிகளை குணப்படுத்தும், வாயில் பாக்டிரியா ஏற்படாமல் பார்த்துகொள்ளும். மேலும் திடீர் பல் முளைக்கையில் வரும் வலியை குணப்படுத்தும்.

வீக்கத்தை குணமாகும் தன்மை கொண்டதால், சருமத்திற்கு இது நல்லது. பருக்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் முகம் பொலிவாக இருக்கும். இன்சுலின் சுரப்பதற்கு இது துணையாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு தண்ணீர் அதிக நன்மைகளை செய்கிறது. இதில் மெக்னீஷியம் இருப்பதால், எலும்பை வலிமை பெறச் செய்யும். எலும்பு தொடர்பான நோயகள் ஏற்படாமல் தடுக்கும்.  இதில் இருக்கும் பொட்டாஷியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் உண்டாக்காமல் தடுக்கிறது. ஜீரணத்தை துரிதாப்படுத்துவதால், உடல் எடை குறையுவும் உதவுகிறது

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment