Advertisment

சர்க்கரை நோயாளிகள் கிரேப்ஸ் சாப்பிடலாம்: ஆனால் இதை கைவிட வேண்டும்

சர்க்கரை நோயாளிகள் கிரேப்ஸ் சாப்பிடலாமா? என்ற கேள்வி எப்போதும் எழும். இந்நிலையில் கிரேப்ஸ் சாப்பிடுவதற்குள் நாம் இதை மனதில் வைத்துகொள்ள வேண்டும். 100 கிராம் கிரேப்ஸ் அதாவது 15 முதல் 20 கிரேப்ஸ் சாப்பிட்டல் 70 கலோரிகள் கிடைக்கும். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் ஒட்டுமொத்தமாக நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளின் கணக்கை பார்த்துக்கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
சர்க்கரை நோயாளிகள் கிரேப்ஸ் சாப்பிடலாம்: ஆனால் இதை கைவிட வேண்டும்

Fresh pink grape in bowl.

சர்க்கரை நோயாளிகள் கிரேப்ஸ் சாப்பிடலாமா? என்ற கேள்வி எப்போதும் எழும். இந்நிலையில் கிரேப்ஸ் சாப்பிடுவதற்குள் நாம் இதை மனதில் வைத்துகொள்ள வேண்டும். 100 கிராம் கிரேப்ஸ் அதாவது 15 முதல் 20 கிரேப்ஸ் சாப்பிட்டல் 70 கலோரிகள் கிடைக்கும். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் ஒட்டுமொத்தமாக நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளின் கணக்கை பார்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

கிரேப்ஸில் இயற்கையான இனிப்பு இருக்கிறது. இது நேரடியாக உங்கள் ரத்த சர்க்க்ரை அளவை அதிகரிக்காது என்றாலும் இதில் கார்போஹட்ரேட் அதிகமாக இருப்பதால் கவனமாகத்தான் இதை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.

கிரேப்ஸில் இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் குறைவுதான். இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 53 தான் .ஆனால் இதன் கிளைசிமிக் லோட் அதிகம். ஒரு யுனிட் கிளைசிமிக் லோட், ஒரு கிராம் குளுக்கோஸை நேரடியாக சாப்பிட்டால் என்ன ஆகுமோ, அந்த அளவுக்கு ரத்த சர்க்க்ரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரேப்ஸ் சாப்பிடும் நேரம் முக்கியம் என்று கூறப்படுகிறது. வெறும் வயிற்றில் கிரேப்ஸ் சாப்பிடலாம். இதில் நார்சத்து இருப்பதால், நமது வயிறு ஆரோக்கியத்தை உதவுகிறது. இதில் நார்சத்து அதிகம் இருப்பதால், நமக்கு அதிக நேரம் வயிறு நிரம்பியதுபோல் உணவர்வு ஏற்படும்.

ஒரு நாளைக்கு 15 கிராம் கர்போஹைட்ரேட் சாப்பிடலாம். அதை நீங்கள் பழங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை பழங்களை சாப்பிட வேண்டும். காலை வேளையில் அல்லது மாலை நேரத்தில் இந்த பழங்களை நாம் சாப்பிட வேண்டும். பழங்களை எப்போதும் தனியாக சாப்பிடக்கூடாது, புரோட்டீன் சேர்த்து சாப்பிட வேண்டும். பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment