Advertisment

வாழைப் பழம் சாப்பிடுங்க பாஸ்... பி.பி, மாரடைப்புக்கு சூப்பர் ரெமடி!

உலக அளவில் இருக்கும் அனைவரும், சாப்பிடும் ஒரு பழமாக வாழைப்பழம் இருக்கிறது. இதில் பொட்டாஷியம், மான்கனீஸ், நார்சத்து, புரத சத்து இருக்கிறது. வைட்டமின் பி6 மற்றும் சி இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் குறையும். மேலும் புற்று நோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாழைப் பழம் சாப்பிடுங்க பாஸ்... பி.பி, மாரடைப்புக்கு சூப்பர் ரெமடி!

banana on wood background

உலக அளவில் இருக்கும் அனைவரும், சாப்பிடும் ஒரு பழமாக வாழைப்பழம் இருக்கிறது. இதில் பொட்டாஷியம், மான்கனீஸ், நார்சத்து, புரத சத்து இருக்கிறது. வைட்டமின் பி6 மற்றும் சி இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் குறையும். மேலும் புற்று நோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.

Advertisment

வாழைப்பழம் பொட்டாஷ்யம் அதிமாக இருக்கும். ஒரு வாழைப்பழத்தில் 455 மில்லி கிராம் பொட்டாஷியம் இருக்கிறது. நமது இதயத் துடிப்புக்கு பொட்டாஷியம் மிகவும் முக்கியம். இந்நிலையில் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்ய பொட்டாஷியம் பயன்படுகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாஷியம் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த குழாய்களில் வரும் அடைப்பை போக்குகிறது. தினமும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால், நமது 10% பொட்டாஷியம் தேவையை அது பூர்த்தி செய்கிறது. 50% பக்கவாதம் ஏற்படுவதை அது தடுக்கிறது.

அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வதால் ரத்த கொதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில்  உப்பு ஏற்படுத்தும் பக்கவிளைவுகளை வாழைப்பழம் தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் அதிக பொட்டாஷியம், சிறுநீர் மூலமாக  சோடியத்தை வெளியேற்றுகிறது.

அஜீரணத்தை தடுக்கிறது. வயிற்று வலி, வயிறு உப்புதல் இப்படி வயிறு சமந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment