Advertisment

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்: இப்படி யூஸ் பண்ணுங்க!

Beetroot Juice To Improve Haemoglobin Levels in blood Tamil News: பீட்ரூட் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை சரிசெய்து மீண்டும் செயல்படுத்த உதவுகிறது, இது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேலும் அதிகரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Beetroot Juice benefits in tamil: how to make Beetroot Juice in tamil

Beetroot Juice benefits in tamil

Beetroot Juice benefits in tamil: ஹீமோகுளோபின், இரும்புச்சத்து நிறைந்த புரதம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு இன்றியமையாத அங்கமாகும். உடலில் போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் இல்லாதபோது, ​​​​அது இரத்த சோகை எனப்படும் சுகாதார நிலைக்கு வழிவகுக்கிறது. இரத்த சோகை மூச்சுத் திணறல், சோர்வு, தலைவலி, மோசமான பசியின்மை, விரைவான இதயத் துடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இத்தகைய சுகாதார நிலையைச் சமாளிக்க, உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisment

உங்கள் உணவுகளுடன் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து பருகுவதன் மூலம் நீங்கள் அதிகப்படியான இரும்புச்சத்தை பெறலாம். பீட்ரூட் ஜூஸ் இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாக உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அதிசய காய்கறி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "பீட்ரூட் ஜூஸ் இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது இரத்த சோகைக்கு மிகவும் நல்லது. அதேசமயம், பீட்ரூட் இலைகள் மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மற்றும் டையூரிடிக் நடவடிக்கை மேற்கொள்ளும்." என்று ஆயுர்வேத நிபுணர், டாக்டர் அசுதோஷ் கௌதம் தெரிவித்துள்ளார்.

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை சரிசெய்து மீண்டும் செயல்படுத்த உதவுகிறது, இது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேலும் அதிகரிக்கிறது. இரத்த சோகைக்கு பீட்ரூட்டை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று சாறு வடிவில் உள்ளது. பீட்ரூட் சாறு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான மருந்து. "பீட்ரூட் மற்றும் கேரட் ஒரு அழகான ஜோடியை உருவாக்குகின்றன, மேலும் இந்த கலவை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது இயற்கையாகவே இரும்பு அளவை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி இரட்டை டோஸ் பெற உதவும் என்பதால், நீங்கள் அதில் கசப்பான ஆரஞ்சுகளையும் சேர்க்கலாம்." என்று ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர் சிம்ரன் சைனி தெரிவித்துள்ளார்.

publive-image

பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1 பீட்ரூட்

1-2 ஆரஞ்சு

1 பெரிய கேரட்

7-8 புதினா இலைகள்

முறை:

முதலில், பீட்ரூட் மற்றும் கேரட்டை கழுவி தோலுரித்து வைக்கவும். இரண்டு பொருட்களையும் இரண்டாக நறுக்கி, புதினா இலைகளுடன் ஜூஸரில் சேர்க்கவும். இரண்டு பொருட்களிலிருந்து சாறு எடுக்கவும்.

இப்போது, ​​ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஆரஞ்சு அழுத்தியைப் பயன்படுத்தி எடுக்கவும். இந்த சாற்றை பீட்ரூட் மற்றும் கேரட்டின் சாறுடன் கலந்து அதன் சுவையை அதிகரிக்க கல் உப்பு சேர்க்கவும்.

அதை ஒரு கிளாஸில் ஊற்றினால் நீங்கள் எதிர்பார்த்த சுவையான பீட்ரூட் ஜூஸ் தயார்.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food Food Receipe Health Benefits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment