தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் நமது உடலில் பல சிக்கல் எழும். உடல் சோர்வு, முடி உதிர்தல், உடல் எடை கூடுதல், மனநிலையில் திடீர் மாற்றங்கள், மலச்சிக்கல் எல்லாம் ஏற்படும். இந்நிலையில் இதை சரி செய்ய எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.
வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் தைராய்டு ஹார்மோன் சீராக செயல்பட உதவுகிறது. இது மாமிசம்- லிவர் -யில்தான் இருக்கிறது.
வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.விலங்குகளிடம் இருந்து வரும் புரோட்டீன் ஆதாவது மாமிசம் சாப்பிட்டால் தைராய்டு நோய் குறைய வாய்ப்புள்ளது. மாமிசத்தில்தான் வைட்டமின் ஏ, காப்பர், சிங்க், வைட்டமின் பி12 இருக்கிறது.
ஐயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக ஐயோடின் நிறைந்த உப்பை சமயலில் பயன்படுத்த வேண்டும். சால்மன் மீன்கள், பால் பொருட்கள், முட்டை ஆகியவற்றை சேத்துக்கொள்ள வேண்டும்.