Advertisment

தர்பூசணி சாப்பிட சிறந்த நேரம் எது? ஆயுர்வேத மருத்துவர் பதில்!

தர்பூசணிகள் உங்களை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Watermelon

Best time to eat Watermelon Ayurvedic Expert shares

மாம்பழங்கள், முலாம்பழங்கள் முதல் தர்பூசணிகள் வரை, கோடை காலம் நாம் சுவைக்க  ஜூசி மற்றும் சுவையான பருவகால பழங்களை கொண்டு வருகிறது.

Advertisment

சுட்டெரிக்கும் நாட்களில் கண்கள், இதயம் மற்றும் வயிற்றில் ஒரு இனிமையான உணர்வுடன்,  தர்பூசணிகள் உங்களை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவ்ஸரின் கூற்றுப்படி, இனிப்பு, தாகம் மற்றும் குளிர்ச்சியூட்டுவது முதல் ஊட்டமளிப்பது மற்றும் பாலுணர்வை ஏற்படுத்துவது வரை - இந்த பழம் கண்டிப்பாக உங்கள் கோடைகால பழத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

"இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது, வைட்டமின் சி, ஏ, பி6 மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும்," என்று அவர் கூறினார்.

என்ன பலன்கள்?

நிபுணர்களின் கூற்றுப்படி, தர்பூசணி உங்கள் ஆரோக்கியத்திற்கு பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது.

*அதிக தாகத்தை போக்கும்

* சோர்வு நீங்கும்

* உடலில் எரியும் உணர்வை போக்க உதவுகிறது

* சிறுநீர் கழிக்கும் வலியை நீக்குகிறது

* சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு உதவுகிறது

*எடிமா மற்றும் வீக்கத்தை விடுவிக்கிறது.

சதை மட்டுமல்ல, தர்பூசணி விதைகளும் நன்மை பயக்கும். அவை "குளிர்ச்சியூட்டும், டையூரிடிக் மற்றும் சத்தான தன்மை கொண்டவை. விதை எண்ணெயில் லினோலிக் அமிலம், ஒலிக் அமிலம், பால்மிடிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்களின் கிளிசரைடுகள் உள்ளன"

சாப்பிட சிறந்த வழி

தர்பூசணிகளை மிதமாக உட்கொள்வது நல்லது. "அதை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள், ஒருபோதும் அதிகமாக வேண்டாம், இல்லையெனில், அது நிச்சயமாக உங்களுக்கு வீக்கம், வாயு போன்ற உணர்வை உண்டாக்கும் மற்றும் உங்களுக்கு வயிற்று வலியைக் கூட கொடுக்கும்" என்று மருத்துவர் கூறினார்.

கூடுதலாக, இந்த பழத்தை தனியாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, உணவுக்கு துணையாக அல்ல.

publive-image

சாப்பிட சிறந்த நேரம்

ஆயுர்வேதத்தின் படி, காலை 10 மணி முதல் 12 மணி வரை தர்பூசணி சாப்பிட சிறந்த நேரம், காலை உணவாக அல்லது காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடையில் இதை சாப்பிடலாம். மாலை 5 மணிக்கு முன் மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இரவில் அல்லது உங்கள் உணவுடன் இதை உட்கொள்ள வேண்டாம்.

"நீரிழிவு நோயாளிகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ள அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் பாவ்ஸர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment