Advertisment

அப்படி ஒரு ருசி... டீயுடன் இந்த பிரட் பஜ்ஜி சாப்பிட்டு பாருங்க

சுவையான ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த பிரட் பஜ்ஜி நல்ல தேர்வு. மறக்காமல் வீட்டில் செய்து பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அப்படி ஒரு ருசி... டீயுடன் இந்த பிரட் பஜ்ஜி சாப்பிட்டு பாருங்க

சுவையான ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த பிரட் பஜ்ஜி நல்ல தேர்வு. மறக்காமல் வீட்டில் செய்து பாருங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

பிரெட் – 4 ஸ்லைஸ், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், ஆப்ப சோடா- ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் – 2, மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – கால் லிட்டர்.

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்

புதினா – ½  கப், மல்லி – ½  கப், பச்சை மிளகாய் – 1, எலுமிச்சம்பழச்சாறு – 1, உப்பு – ½  ஸ்புன்.

செய்முறை

கடலை மாவுடன் சோடா உப்பு சேர்த்துகொள்ளவும்.  அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். அவற்றை முக்கோண வடிவில் வெட்டி வைக்க வேண்டும். பிறகு ஒரு பிரட் துண்டில் பொதினா சட்னியும் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி பிரட் துண்டுகளின் நடுவே வைத்து விட வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் பிரட்களை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.

புதினா சட்னி செய்முறை;

மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கப் புதினா இலை, ஒரு கப் கொத்தமல்லி இலை, ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை சேர்க்க வேண்டும். இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான சட்னி தயாராகிவிடும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment