பிரியாணிக்கு எப்போதும் கடையில் பிரட் அல்வா கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். இந்நிலையில் இதை ஈசியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரட் – 2 பாக்கெட்
வெண்ணை
எண்ணெய்
சர்க்கரை
முந்திரி
வெள்ளரி விதை
செய்முறை: பிரட்டின் ஓரத்தில் உள்ள பிரவுன் பாகத்தை நீக்க வேண்டும். அதை நீளமாக வெட்டி கொள்ளவும். தொடர்ந்து அதை எண்ணெய் பொறித்து எடுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சர்க்கரை சேர்த்து பாகு ரெடி செய்து கொள்ளுங்கள். முந்திரியை வெண்ணையில் வறுக்க வேண்டும். இந்நிலையில் அந்த பாத்திரத்தில் வறுத்த பிரட்டை சேர்க்கவும். தொடர்ந்து சீனி பாகை ஊற்றவும். நன்றாக கிளரவும். அல்வா பதம் வரும் வரை கிளர வேண்டும். தொடர்ந்து அதன் மீது வெள்ளரி விதைகளை தூவ வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“