Advertisment

காலையில் சுகர் ஜிவ்வுனு ஏறுதா? பிரேக்ஃபாஸ்ட் இப்படி சாப்பிடுங்க!

சர்க்கரை நோயாளிகள் பலரும் சர்க்கரை அளவைப் பார்த்துவிட்டு காலையில் சுகர் ஜிவ்வுனு ஏறுகிறது என்று கவலைப்படுகிறார்கள். அவர்களுக்காக, காலையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sugar, diabetes, breakfast, sugar patients, high blood sugar spike, blood sugar level

சர்க்கரை நோயாளிகள் பலரும் சர்க்கரை அளவைப் பார்த்துவிட்டு காலையில் சுகர் ஜிவ்வுனு ஏறுகிறது என்று கவலைப்படுகிறார்கள். அவர்களுக்காக, காலையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

Advertisment

காலையில் சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பிறகு, சர்க்கரை அளவு 70 முதல் 130 வரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால், பொதுவாக சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது என்று கவலைப்படுகிறார்கள். இப்படி சர்க்கரை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனால், ஆபத்தான விளைவுகளும் ஏற்படுகின்றன. காலையில் சுகர் ஜிவ்வுனு ஏறுகிறது என்று கவலைப்படுகிறீர்களா? உங்களுடைய ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில வழிகளைப் பின்பற்றலாம்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அனைவருமே காலையில் ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

காலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது என்றால், தாகம் அதிகரித்தல், மற்ற அறிகுறிகளுடன் மங்கலான பார்வை ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு அல்லது எந்த உணவையும் உட்கொள்ளாமல் பல மணிநேரம் தூங்கிய பிறகு, காலையில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தவுடன் எழுந்திருக்கலாம். இது பலரின் அன்றாட வழக்கத்தில் ஒரு பகுதியாக உள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவு காலையில் அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று நீங்கள் தூங்கும்போது அதிகாலையில் (காலை 3 மற்றும் காலை 8 மணிக்கு) ஏற்படும் விடியற்காலை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.

அதிகாலையில், உடல் குளுக்கோஸின் உற்பத்தியை அதிகரிக்க கல்லீரலுக்கு சமிக்ஞை செய்கிறது. இது ஒருவர் எழுந்திருக்க உதவும் ஆற்றலை வழங்குகிறது. இது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கணையத்தில் உள்ள செல்களை இன்சுலின் வெளியிட தூண்டுகிறது. ஆனால், ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாமல் போகலாம் அல்லது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அதிகரிப்பை எதிர்க்கும் இன்சுலின் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கலாம். இதன் விளைவாக, ஒருவர் காலையில் எழுந்தவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இரத்தத்தில் சுகர் ஜிவ்வுனு அதிகரிப்பது, காலையில் எழுந்து, அந்த நாளைத் தொடங்க போதுமான ஆற்றல் இருப்பதை உறுதி செய்வதற்கான உடலின் இயல்பு. இதுபோன்ற பல காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதை அறியலாம்.

காலையில் சுகர் ஏறுவதற்கு காரணம், முந்தைய நாள் இரவு முதல் உடலில் போதுமான இன்சுலின் இல்லாதது. மருந்துகளை ஒழுங்காக சாப்பிடதாது, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை. தூங்கும் முன் தவறான அல்லது ஆரோக்கியமற்ற சிற்றுண்டியை உண்பது ஆகியவை காரணங்களாக உள்ளன.

இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு கார்ணமாக ஏற்படும் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஒருவர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த செய்யவேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அந்த விஷயங்களைக் கடைபிடித்தால், காலையில் சுகர் வேகமாக உயராது. இருப்பினும், காலையில் தினமும் சுகர் ஜிவ்வுனு வேகமாக ஏறுவது வாடிக்கையாக இருக்கிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

தூங்குவதற்கு முன் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்யுங்கள்.

தூங்குவதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், அது இரவு முழுவதும் அதிகமாகவே இருக்கும். எனவே, அவர்கள் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவுடனே எழுந்திருப்பார்கள். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கவனிக்க சாப்பிடும் உணவு வகைகளிலும் இரவு உணவிலும் மாற்றங்களைச் செய்யுங்கள். ரத்தத்தில் குளுக்கோஸைக் குறைக்க தினமும் 10-15 நிமிடம் நடைப்பயிற்சி போன்ற சில அடிப்படை உடல் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் உணவுகள் மற்றும் தினசரி நடவடிக்கைகள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து, அவற்றின் தாக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதுமான இன்சுலின் பயன்படுத்தவில்லை அல்லது நாளின் தவறான நேரத்தில் ஊசி போடுகிறார்கள் என்று அர்த்தம். ஆனால், அந்த நிலைமை இல்லாதவர்களுக்கு, முக்கியமான ஆனால் எளிமையான உணவு மற்றும் உணவு அட்டவணை மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முக்கியமாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

உடற்பயிற்சி

காலையில் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இன்சுலின் அளவு குறைந்து இருந்தால், இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி அல்லது பிற உடற்பயிற்சிகள் செய்வது இரத்த சர்க்கரை அளவை ஒரே இரவில் குறைக்க உதவும். இருப்பினும், இரவில் உடற்பயிற்சி செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், உடற்பயிற்சியில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் விளைவுகள் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும். ஒரே இரவில் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், இதற்கு காலை நேர உடற்பயிற்சியே சிறந்தது.

காலையில் சர்கரை அளவு வேகமாக அதிகரிப்பதைத் தவிர்க்க, இரவு உணவுக்குப் பிறகு, சிற்றுண்டி சாப்பிட்டால், குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் அதிக இரத்த சர்க்கரை அளவுடன் எழுந்திருக்க வேண்டியிருக்கும். தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். சாப்பிடும் உணவு வகையைப் போலவே சாப்பிடும் நேரமும் முக்கியமானது.

காலையில் ரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த காலையில் சரியான உணவை சாப்பிட வேண்டும். குறிப்பாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் இருந்தால், நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு, சரியான நேரத்தில் நேரத்தில் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

ரத்தத்தில் சுகர் ஜிவ்வுனு ஏறுகிறது என்றால் சர்க்கரை நோயாளிள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும். புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது காய்கறிகள் மற்றும் கார்போஹைட்ரே இல்லாத, கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள சமச்சீரான காலை உணவை சாப்பிடுவது சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.

காலையில் ஜிவ்வுனு ஏறும் சுகர் அளவை கடுப்படுத்துவது கடினம். ஆனால், சில அடிப்படையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலமும் மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகிய பழங்கங்களை விட்டுவிடுவதன் மூலமும் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலமும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Diabetes Healthy Breakfast Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment