Advertisment

உடல் எடை குறைக்க பிரவுன் ரைஸ் வைத்து 2 சூப்பரான ரெசிபி

உடல் எடை குறைக்கும் பயணத்தில் சாப்பிடும் சாதத்தின் தேர்வு மிகவும் முக்கியம். இந்நிலையில் பிரவுன் ரைஸை நாம் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பிரவுன் ரைஸ் வைத்து இரண்டு ரெசிபியை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடல் எடை குறைக்க பிரவுன் ரைஸ் வைத்து 2 சூப்பரான ரெசிபி

உடல் எடை குறைக்கும் பயணத்தில் சாப்பிடும் சாதத்தின் தேர்வு மிகவும் முக்கியம். இந்நிலையில் பிரவுன் ரைஸை நாம் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பிரவுன் ரைஸ் வைத்து இரண்டு ரெசிபியை தெரிந்துகொள்வோம்.

Advertisment

பிரவுன் ரைஸ் தோசை

தேவையான பொருட்கள்: பிரவுன் ரைஸ்  ; 2 கப், உளுந்தம் பருப்பு : ½ கப், மேத்தி விதைகள், கடலை பருப்பு: ½ கப், உப்பு

செய்முறை :  4 முதல் 5 மணி நேரம் வரை பிரவுன் ரஸை ஊற வைக்கவும். தொடர்ந்து வேறு ஒரு பாத்திரத்தில் உளுந்தம் பருப்பு, மேத்தி விதைகள், கடலை பருப்பையும் ஊறவைக்கவும். முதலில் ஊற வைத்த பிரவுன் ரைஸை தனியாக அரைத்து எடுக்கவும். தொடர்ந்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மேத்தி விதைகளை அரைத்து கொள்ளவும். தொடர்ந்து இந்த இரண்டு கலவையை சேர்த்து, 8 மணி நேரம் ஊறிய பிறகு வழக்கமாக தோசை போடுவதுபோல, தோசையை போடவும்.

பிரவுன் ரைஸ் பருப்பு சாதம்

 தேவையான பொருட்கள்- துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு, பிரவுன் ரைஸ், சீரகம், கிராம்பு, உப்பு, பூண்டு, இஞ்சி , மஞ்சள் பொடி, நெய்

செய்முறை : பருப்பு மற்றும் பிரவுன் ரைஸை நன்றாக கழுவி தனியாக ஒரு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரை சூடு செய்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தொடர்ந்து இஞ்சி, பூண்டு, கிராம்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து ஊறவைத்த பருப்பு, பிரவுன் ரைஸ் , மஞ்சள் பொடி சேர்த்து, தண்ணீர் சேக்கவும். நன்றாக கிளறியதும். மூடி போட்டு 4 விசில் விட வேண்டும். சுவையான பிரவுன் ரைஸ் பருப்பு சாதம் ரெடி. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment