Advertisment

நீங்கள் ஆசையாய் சாப்பிடும் நொறுக்கு தீனிகளில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது தெரியுமா ?

இந்நிலையில் நாம் ஆசையாக சாப்பிட்டாலும், ஆரோக்கியமான வாழ்வுக்கு இவை ஒருபோதும் உதவதில்லை. இருப்பினும் இந்த உணவுகளில் இருக்கும் கலோரிகள் எவ்வளவு என்பதை நாம் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது.

author-image
WebDesk
New Update
நீங்கள் ஆசையாய் சாப்பிடும் நொறுக்கு தீனிகளில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது தெரியுமா ?

ஓய்வு நாளாக இருந்தாலும் சரி, பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தாலும் சரி  நமது தேர்வு நொறுக்கு தீனியாகத்தான் இருக்கும். பர்கர், நூடுல்ஸ், கேக், குளிர் பானம், ஷவர்மா இப்படியான உணவைத்தான் நாம் முதலில் தேர்வு செய்வோம். பிடித்த படத்தை பார்த்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிடுவதுதான் நமக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இந்நிலையில் நாம் ஆசையாக சாப்பிட்டாலும், ஆரோக்கியமான வாழ்வுக்கு இவை ஒருபோதும் உதவதில்லை. இருப்பினும் இந்த உணவுகளில் இருக்கும் கலோரிகள் எவ்வளவு என்பதை நாம் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது.

Advertisment

பீட்சா

சோமாட்டோ, ஸ்விகியில் ஆடர் செய்து சாப்பிடும் பீட்சா, நாம் அனைவரின் விருப்பமான உணவு. இதில் 311 கலோரிகள் இருக்கிறது. மேலும் 13.4 கிராம் கொழுப்பு சத்து, 14 கிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.

சமோசா

மொறுமொறு வென்று இருக்கும் சமோசாவை விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன. நாம் சாப்பிடும் ஒரு சமோசாவில் வெறும் உருளைக்கிழங்கு மசாலா மட்டும் இல்லை பாஸ் அதில் 300 கலோரிகள் இருக்கிறது.

மொமோஸ்

அவித்த உணவாக கருதப்பட்டாலும், ஒரு தட்டு மொமோசில் 300 கலோரிகள் இருக்கிறது.

பர்கர்

நாம் சாப்பிடும் பர்கரில், சீஸ், பட்டர், கட்லேட் மற்றும் காய்கறி கலவை இருந்தாலும் இதில் 360 கலோரிகள் இருக்கிறது.

ஷவர்மா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது அனைவருக்கும் விருப்பமான உணவு. ஒரு ஷவர்மா ரோலில் 393 கலோரிகள் உள்ளது.

நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு விருப்பமான உணவாக இருக்கும் நூடுல்ஸ், 490 கலோரிகள் இருக்கிறது.

குளிர் பானம்

நாம் குடிக்கும் கோக் அல்லது பெப்சி அல்லது ஒரு கிளாஸ் குளிர்பானத்தில் 150 கலோரிகள் இருக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

படம் பார்த்துக்கொண்டே நாம் கொரிக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸில் 250 கலோரிகள் இருக்கிறது.

கேக்

நமது நாக்கை எச்சில் ஊறவைக்கும் ஒரு பீஸ் கேக்கில் 671 கலோரிகள் இருக்கிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment