வெயில் காலம் என்பது நமக்கு வரட்சி, சன் ஸ்டோக் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த தலைவலிக்கு தீர்வாக வீட்டிலே சில விஷயங்களை செய்யலாம் என்று கூறப்படுகிறது .
குறிப்பாக ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் குடித்தால், தலைவலி நீங்குவதாக கூறப்படுகிறது. வரட்சிதான் தலைவலிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தர்பூசணியில், அமினோ ஆசிட் சிட்ருலைன் இருப்பதால், இவை நமது ரத்த குழாய்களை நிதானமாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் தலைவலியின் தீவிர தாக்கம் குறையும்.
எல்லா வகையான தலைவலிக்கும் தர்பூசணி ஜூஸ் நன்மை செய்யாது. ஆனால் இது வரட்சிக்கு புத்தணர்வு தரும் உணவாக இருக்கும். மேலும் தர்பூசணி ஜூஸ் ஒரு நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மேலும் உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். சருமத்தை தேவையான நீர் தன்மையை அது வழங்குகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.

உங்கள் சருமத்தையும், கூந்தலையும் நல்ல முறையில் ஆரோக்கியமாக நீட்டிக்க உதவும். இந்நிலையில் 90 % நீர்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, மற்றும் பி6 உள்ளிட்டவை அதில் உள்ளது. அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட், லைகொபென்னே உள்ளிட்டவை அதிகமாக உள்ளது. பொட்டாஷியம் குறிப்பிட்ட அளவில் உள்ளது.
154 கிராம் தர்பூசணி பழத்தில் 118 எம்.எல் தண்ணீர் சத்து உள்ளது. இதனுடன் நார்சத்து, வைட்டமின் சி, ஏ மற்றும் மெக்னிஷியம் இருக்கிறது. ஆனால் 154 கிராம் பழத்தில் வெறும் 46 கலோரிகள் மட்டுமே இருக்கிறது.
இதை சாப்பிட்டால் அடிக்கடி பசி எடுக்காது. இதனால் உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “