Advertisment

ஆரஞ்சு கலரு.. பார்த்தாலே சுவைக்க தூண்டும் கேரட் லட்டு.. ரெசிபி இதோ!

ஆரஞ்சு கலரு.. பார்த்தாலே சுவைக்க தூண்டும் கேரட் லட்டு.. ரெசிபி இதோ!

author-image
WebDesk
New Update
ஆரஞ்சு கலரு.. பார்த்தாலே சுவைக்க தூண்டும் கேரட் லட்டு..  ரெசிபி இதோ!

விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், அசைவம் என ருசித்து சாப்பிடுவர். ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது சிறந்தது. உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகளும் பல உள்ளன. வீட்டிலேயே சுலபமாக இனிப்பு செய்து சாப்பிடலாம். அந்தவகையில், கேரட் லட்டு செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கேரட் - 1 கப் (துருவியது)

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

கண்டென்ஸ்டு மில்க் (Condensed milk)- 1/4 கப்

பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, அது உருகியதும், துருவிய கேரட்டை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். கேரட் சுருங்கி பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் (Condensed milk)சேர்க்க வேண்டும். கண்டென்ஸ்டு மில்க்-கில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பின்பு அதில் மீண்டும் நெய் ஊற்றி கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும். கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே அதை சிறு சிறு லட்டுகளாக உருட்டி, அதன் மேல் நறுக்கிய பிஸ்தாவை வைக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் லட்டு தயார்.

குறிப்பு: கண்டிப்பாக கேரட் பச்சை வாசனை போன பின்னரே கண்டென்ஸ்டு மில்க்கை சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் முந்திரி, ஏலக்காய், திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment