சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அதில் ஆண், பெண் இரு பாலருக்கும் மிகவும் உதவியாக இருப்பது யூடியூப் தான்.
Advertisment
அதிலும் சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்த பல வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு சப்பாத்தி.
சரியான வட்ட வடிவத்தில் சப்பாத்தி செய்வது என்பது பெரிய டாஸ்க். ஆனால் ஒரு சின்ன டிரிக் உள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
முதலில் சப்பாத்தி உருட்டுவதற்கு மாவு எடுக்கும்போதே, சரியான உருண்டை வடிவில் எடுத்துக் கொள்ளவும். உங்கள் பெருவிரலையும், ஆட்காட்டி விரலையும் மட்டும் பயன்படுத்தி, பிழிந்து எடுத்தாலே மாவு சரியான உருண்டை வடிவில் வந்துவிடும். சப்பாத்தி தேய்க்கும் போது எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. மாவு தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் எண்ணெய் வைத்து சப்பாத்தி உருட்டினால் சரியான வட்ட வடிவில் வராது.
உருண்டை பிடித்த மாவை, சப்பாத்தி கட்டையில் வைத்து அதன் மேல் லேசாக கோதுமை மாவு தூவி எப்போதும் போல உருட்டவும். தேய்க்கும் போது வலது கையில் மட்டும் அழுத்தம் கொடுக்கவும். மாவை கையில் எடுக்காமலே, சப்பாத்திக் கட்டையில் லேசாக நகர்த்தி நகர்த்தி விட்டு தேயுங்கள். இப்படி செய்வதால் மாவு சரியான வட்ட வடிவத்தில் கிடைக்கும்.
ஒருவேளை சப்பாத்தி ஓட்டினால், லேசாக மாவு தூவிக் கொள்ளவும். எவ்வளவு பெரிதாக வேண்டுமோ, அவ்வளவு பெரிதாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
இதேபோல் அனைத்து சப்பாத்தி மாவையும் உருட்டி எடுக்கவும். சப்பாத்தி தோசைக்கல்லில் போடுவதற்கு முன், அதில் ஒட்டியிருக்கும் மாவை தட்டி விடவும். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Moms Magic tamil யூடியூப் சேனலின் வீடியோவை பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“