Advertisment

இது எல்லாம் சேர்த்து பாருங்க.. நாவில் எச்சில் ஊறும் சீஸ் தோசை ரெசிபி இதோ

தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்து சுவையான சீஸ் தோசை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
இது எல்லாம் சேர்த்து பாருங்க.. நாவில் எச்சில் ஊறும் சீஸ் தோசை ரெசிபி இதோ

உணவு என்றாலே மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை சுவைக்க விரும்புவோம். அதேசமயம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். கடையில் செய்வது போல் வீட்டிலேயே சுவையான உணவுகளை செய்து சாப்பிடலாம். அந்தவகையில் சீஸ் தோசை ரெசிபி மிகவும் சுவையானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

தோசை மாவு - தேவையான அளவு

தக்காளி - 2

வெங்காயம் - 2

வெள்ளரி - 2

மிளகுப் பொடி - தேவையான அளவு

மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)

புதினா சட்னி - 1 மேசைக் கரண்டி

செய்முறை

முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். தோசைக் கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு தோசையின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி அதன் மேல் போடவும். அடுத்து வெள்ளரி வைத்து, சீஸை தூவி விடவும்.

இப்போது புதினா சட்னி கொஞ்சம் ஊற்றி, மிளகுப் பொடி தூவி விடவும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment