கார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கடைகளில் வாங்கி கொடுத்திருப்போம். இனி வீட்டிலேயே ஈஸியாக செய்து கொடுக்கலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுக்காத கார்ன் ப்ளேக்ஸ் - 3 கப்
வேர்க்கடலை - ¼ கப்
முந்திரி - 10,
பாதாம் பருப்பு - 10
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்
காய்ந்த திராட்சை - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் துள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கார்ன் ப்ளேக்ஸை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதே போல பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, திராட்சை, கறிவேப்பிலை என அனைத்தையும் தனித் தனியாக எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து, இதை அனைத்தையும் கார்ன் ப்ளேக்கில் சேர்த்து, சூடாக இருக்கும்போதே தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் டப்பாவில் போட்டு வைத்து மொறு மொறு வென்று ருசியாக சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil