பருப்பும் கீரையும் போட்டு கடைசல் செய்து இருப்போம் ஆனால் பருப்பும் கீரையும் போட்டு பொறியல் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? சுவையான சூடான பருப்பு கீரை கடைசல் எப்படி செய்யலாம் என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியதாவது,
தேவையான பொருட்கள்
எண்ணெய்
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
கடுகு
சீரகம்
பெருங்காயத்தூள்
பூண்டு
கறிவேப்பிலை
வெங்காயம்
பச்சை மிளகாய்
பாசிப்பருப்பு
தக்காளி
உப்பு
மஞ்சள்தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
கீரை
செய்முறை
முதலில் ஒரு பெரிய கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
பிறகு பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து வதக்கவும்.
பருப்பு கீரை பொரியல் | Paruppu Keerai Poriyal Recipe In Tamil | Side Dish For Rice | Poriyal Recipes
பின்னர் தக்காளி நறுக்கி சேர்க்கவும். தக்காளி துண்டுகளை மசித்த பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து நறுக்கிய கீரை சேர்த்து கலந்து வதக்கவும்.
பத்து நிமிடம் மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். பத்து நிமிடம் கழித்து ஒரு முறை மீண்டும் வதக்கி இறக்கினால், மிகவும் சுவையான பருப்பு கீரை பொரியல் தயார்.