பேரீச்சம்பழத்தில் உள்ள அதிக இரும்புச் சத்து, இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. பேரிச்சம்பழத்தில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், பி வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்றவையும் நிறைந்துள்ளன.
பேரிச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் விகிதத்தை குறைக்கிறது. இதன் விளைவாக, இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதைத் தடுக்கிறது. நீங்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவின் அறிகுறிகளை அனுபவித்தால், உடனடி ஆற்றலைப் பெற பேரீச்சம்பழம் சரியான சிற்றுண்டியாகும்.
மேலும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது, அவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரையின் காரணமாக, உங்களை உற்சாகமாகவும், நீண்ட நேரம் முழுமையாகவும் வைத்திருக்க உதவும்.
வொர்க்அவுட்டிற்கு முன் அல்லது பிறகு, மதியம் நீங்கள் மந்தமாக உணர ஆரம்பிக்கும் போது ஊறவைத்த பாதாம் அல்லது உலர்ந்த பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.

பேரிச்சம்பழம் சாப்பிடுவதற்கான சில ஆரோக்கியமான வழிகள் இங்கே:
வால்நட்ஸ் மற்றும் பாதாம் உடன் ஓரிரு பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுங்கள், இது ஆற்றலை மேம்படுத்துகிறது.
நீங்கள் சர்க்கரை அல்லது மற்ற இனிப்புகளைத் தவிர்த்து, அதற்கு பதிலாக பேரீச்சம்பழங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அதிக சத்துள்ள காலை உணவுக்கு ஓட்மீலில் ஒன்று அல்லது இரண்டு நறுக்கிய பேரிச்சம்பழங்களை சேர்க்கலாம்.
புத்துணர்ச்சியூட்டும், சத்தான ஸ்மூத்திக்காக, குறைந்த கார்போஹைட்ரேட் பழங்களை ஓரிரு பேரீட்சையுடன் கலக்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது இனிப்பு பானமாக இருக்கும்.
நீங்கள் பேரீச்சம்பழத்தை அப்படியே சாப்பிடலாம், சாலட்டில் சேர்க்கலாம் அல்லது ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திகளுக்கு பேரிச்சம்பழம் ப்யூரி செய்யலாம்.
குறிப்பு
நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 பேரீச்சம்பழங்களை உட்கொள்ளலாம், பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை நீங்கள் அனுபவிக்கக்கூடாது.
நீங்கள் ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தால், நீங்கள் எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
பேரீச்சம்பழவெவ்வேறு அளவுகளில் வருகின்றன என்பதை நினைவில் கொள்வதும் முக்கியம், எனவே சாப்பிடும் போது அதைக் கவனியுங்கள். ஒரே நேரத்தில் பல பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“