Advertisment

சுகர்- கொலஸ்ட்ரால் ரெண்டையும் குறைக்கணுமா? இந்த ஒரு உணவை ட்ரை பண்ணுங்க!

எந்த உணவை எடுத்துகொள்வது என்று குழப்பம் ஏற்படுகிறதா?. கவலை வேண்டாம் உங்களுக்கு தீர்வு இருக்கிறது. வேகமான வாழ்க்கையில், சரியான உணவை எடுத்துகொள்ளவும், சரியான நேரத்தில் தூங்கவும் நேரம் இருக்காது. இதனால் கிடைக்கும் நேரத்தில் சரியான உணவை நாம் சாப்பிட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர்- கொலஸ்ட்ரால் ரெண்டையும் குறைக்கணுமா? இந்த ஒரு உணவை ட்ரை பண்ணுங்க!

நீங்கள் சக்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா ? எந்த உணவை எடுத்துகொள்வது என்று குழப்பம் ஏற்படுகிறதா?. கவலை வேண்டாம் உங்களுக்கு தீர்வு இருக்கிறது. வேகமான வாழ்க்கையில், சரியான உணவை எடுத்துகொள்ளவும், சரியான நேரத்தில் தூங்கவும் நேரம் இருக்காது. இதனால் கிடைக்கும் நேரத்தில் சரியான உணவை நாம் சாப்பிட வேண்டும்.

Advertisment

ஓட்ஸை வைத்து செய்யும் எல்லா உணவுகளும் சுகர் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். இதில் பீட்டா குலுக்கன் இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை குறைத்து, இன்சுலின் சுரப்பதை சரியாக மேலாண்மை செய்ய உதவுகிறது.

உடல் எடையை குறைக்கவும், சக்கரை அளவை ரத்தத்தில் சீராகாவைக்கவும் ஓட்ஸ் உதவுகிறது.  4 வாரங்களுக்கு ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால், கொழுப்பை குறைக்க உதவுகிறது. பக்கவாதம் மற்றும் இதய கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது.

ஒரு கப் ஓட்ஸில் 8 கிராம் நார்சத்து, 51 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் புரத சத்து, 5கிராம் கொழுப்பு இருப்பதால், ஒட்டுமொத்தமாக 300 கலோரிகளை கொண்டது.

எப்படி உணவில் ஓட்ஸை சேர்த்துகொள்வது

பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்திகளில் ஓட்ஸை சேர்க்கலாம்.

ஓட்ஸ் தோசை – மிக்ஸியில் ஓட்ஸ், நறுக்கிய வெங்காயம், தயிர், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை சிறிது நேரம் ஊரவைத்த பிறகு, அடுப்பை மூட்டி தோசை போல் ஊற்றி சாப்பிடலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment