சுகர் உள்ளவர்களுக்கு பல விதமான உணவு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எந்த வகையான பழங்கள் சாப்பிட வேண்டும் மற்றும் எப்போது சாப்பிட வேண்டும் என்று எந்த பரிந்துரைகளும் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் இது குறித்து விரிவாக பார்க்கலாம். ஆபிள், அவகடோ, பிளாக் பெரி, செரிஸ், கிரேப் ஃபுரூட், பீட்சஸ், பிளம்ஸ், ஸ்டாபெரி போன்ற பழங்களை சாப்பிடலாம்.
முடிந்தவரை வாழைப்பழம், மாம்பழம், ஆகிய பழங்களை தவிர்க்க வேண்டும். மதியம் 1 மணி முதல் 4 மணி வரை பழங்களை சாப்பிட வேண்டும். அப்போதுதான் உங்கள் ஜீரண மண்டலம் அதன் முழு வேலையை தீவிரமாக செய்துகொண்டிருக்கும். மேலும் உடல் பயிற்சி செய்வதற்கு முன்பு அல்லது அதற்கு பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்லது.
பழங்களில் உள்ள நார்சத்து, சர்க்கரையை விரைவாக எடுத்துகொள்ளாமல் அதன் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இதனால் பழச்சாறுகளை குடிப்பதற்கு பதில் பழங்களை சாப்பிடுவதுதான் நல்லது.