Advertisment

இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்தால் போதும்: சுகர் பேஷன்ட்ஸ் இதைப் பண்ணுங்க!

மக்கள் தொகையில் பாதி பேருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டதே என்று கவலை படாமல், முடிந்தவரை அரோக்கியமாக வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்தால் போதும்: சுகர் பேஷன்ட்ஸ் இதைப் பண்ணுங்க!

மக்கள் தொகையில் பாதி பேருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டதே என்று கவலை படாமல், முடிந்தவரை அரோக்கியமாக வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Advertisment

இந்நிலையில் இன்சுலின் சிறப்பாக செயல்படுவதற்கு நாம் சில வாழ்வியல் மாற்றங்களை செய்ய வேண்டும். இதை நாம் பின்பற்றி வந்தால் இன்சுலின் சிறப்பாக செயல்பட உதவும்.

இந்நிலையில் தினமும் உடல் பயிற்சி செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். இதனால் உடனடியாக இன்சுலின் செயல்பாடு சீராக இருக்கும். மேலும் வெயிட் டிரெயினிங் மற்றும் ஏரோபிக்ஸ் வகை உடல் பயிற்சிகள் நல்ல பலன்களை அளிக்கும்.

சர்க்கரையை சேர்த்துகொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் செயற்கையான இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.

டயட் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, சர்க்கரை நோய்க்கு உதவும் வகையில் உள்ள உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் சரியான இடைவேளையில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரியான உடல் எடையில் இருப்பது. நீங்கள் அதிக உடல் பருமனாக இருந்தால், நிச்சயமாக சர்ககரை நோய் வருவதற்கு சாத்தியங்கள் அதிகம். மேலும் சர்க்கரை நோய் முன்பாக ஏற்படும் என்று அறிகுறிகள் உள்ளவர்கள் (Pre-diabetes) நிச்சயம் உடல் எடை குறைப்பதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.

மேலும் மெக்னிசியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட முடியவில்லை என்றால் வைட்டமின் மாத்திரகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment