Advertisment

இப்படி பார்த்து சாப்பிடுங்க... உங்க உணவில் இந்த ஐந்து சத்துகள் இருக்கிறதா?

நாம் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி ஆகியவற்றை எடுத்துகொண்டாலும். இந்த 5 வகையான சத்துக்கள் அதில் இருக்கிறதா ? என்பதை கவனிக்க மறக்கிறோம்.

author-image
WebDesk
New Update
Health Tips

Do you have these five nutrients in your diet

நாம் சரியான உணவை சாப்பிடுகிறோமா?  என்று கேட்டால் பலரால் பதில் கூற முடியாது. தினமும் காய்கறிகளை  உணவில் சேர்த்துக்கொள்கிறேன் , பழங்களையும் சாப்பிடுகிறேன் என்று பலர் கூறுவார்கள். இவை மட்டும் ஆரோக்கியமான வாழ்வை தந்துவிடுமா?  என்றால் இல்லை என்பதே உண்மை.  நாம் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி ஆகியவற்றை எடுத்துகொண்டாலும். இந்த 5 வகையான சத்துக்கள் அதில் இருக்கிறதா ?  என்பதை கவனிக்க மறக்கிறோம்.  வைட்டமின் டி, வைட்டமின் கே,  வைட்டமின் பி-12, மெக்னீஷியம், ஒமேகா -3  போன்ற சத்துக்கள் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டும்.

Advertisment

புரொக்கோலி, காலிப்பிளவர் – நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளாத இந்த இரண்டு காய்கறிகளில் வைட்டமின் கே நிறைந்திருக்கிறது. நமக்கு ஏற்படும் காயத்தின்போது அதிக ரத்த போக்கு ஏற்படாமல் ரத்தம் உறைய வைட்டமின் கே உதவுகிறது. மேலும் நமது எலும்புகளை வலுவாக இருப்பதற்கும் வைட்டமின் கே சத்து உதவுகிறது. கீரை வகைகள், முட்டையிலும் வைட்டமின் கே சத்து உள்ளது. அதனால் இதையும் உணவில் சேர்த்துகொள்வது அவசியம்.

பாதாம் பருப்பு, முழு தானியங்களான கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை, ஓட்ஸ், பார்லி, சோளம் போன்றவைகளில் மெக்னிஷியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் அவகடோ, பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளிலும் மெக்னிஷியம் உள்ளது. உடலில் இருக்கும் அதிக சக்கரை அளவை குறைக்கவும், பதற்றமடையாமல் நிதானமாக செயல்பட மெக்னிஷியம் சத்து உதவுகிறது.

மீன் வகைகள்- செறிவூட்டப்பட்ட உணவுகள், மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த மீனகளில் ஒமேகா – 3 அதிகம் இருப்பதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் உடல் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. 

தயிர்/ இறைச்சி – இதில் வைட்டமின் மி-12 அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள இரத்த அணுக்களின்  ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் நரம்புகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. நமது டிஎன்ஏ-க்கள் (DNA) துரிதமாக செயல்பட உதவுகிறது. 

முட்டை – முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது  மேலும் செறிவூட்டப்பட்ட சீரியல்ஸ், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றிலும் வைட்டமின் டி உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment