/indian-express-tamil/media/media_files/2025/10/05/lungs-2025-10-05-11-33-02.jpg)
பிரபல மருத்துவர் டாக்டர் நந்தகோபாலன், நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது குறித்து மிக எளிய மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் உடனடியாக சர்க்கரையை நிறுத்துவது மற்றும் வெண்டைக்காயைப் பயன்படுத்துவது பற்றி அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் இதற்கு குடிக்க வேண்டிய ஒரு ட்ரிங்க் பற்றி வீரன்வீடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஒருவருக்கு நுரையீரல் பிரச்சனை என்று வந்தாலோ அல்லது நுரையீரலை பலப்படுத்த விரும்பினாலோ, உடனடியாக செய்ய வேண்டிய முதல் செயல் சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதுதான் என்று டாக்டர் நந்தகோபாலன் கூறுகிறார். சர்க்கரையை ஒரு வாரம் நிறுத்துவதன் மூலம், உடலின் உள் செயல்பாடுகள் நுரையீரல் பிரச்சனையை விரைவாகச் சரிசெய்யத் தொடங்கும்.
சர்க்கரைப் பொருட்கள் உள்ளே செல்லச் செல்ல, நுரையீரலில் வீக்கம் மற்றும் கபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். எனவே, நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சர்க்கரையைத் தவிர்ப்பது முதல் கட்டமாகும். மேலும் வெண்டைக்காய் மூலம் நுரையீரல் பலப்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார். நுரையீரல் பலமடைவதற்கு (Lungs Strengthening) வெண்டைக்காய் (Ladies Finger) ஒரு முக்கியமான காய்கறி என்றும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் செய்முறையுடன் விளக்கியுள்ளார்.
செய்முறை: ஃபிரிட்ஜில் வைக்காத, புதிய நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெண்டைக்காய்களைப் பொடியாகக் கட் செய்து, ஒரு மண் சட்டியிலிட்டு, சுமார் 300 மில்லி தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை கொதிக்க வைத்து, அது 100 முதல் 150 மில்லி ஆகச் சுண்டி வந்த பிறகு, வடிகட்டி எடுக்க வேண்டும். இந்த வெண்டைக்காய் நீரை தினமும் காலையில், குறிப்பாக 7 மணிக்கு முன்னால், ஒரு வேளை மட்டும் உட்கொள்ள வேண்டும். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் நுரையீரல் நன்கு பலமடையும் (strengthen) என்று டாக்டர் நந்தகோபாலன் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us